கடந்த சில கிழமைகளாக கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் 90,000 தொன் ரஷ்ய மசகு எண்ணெயுடன் தரித்து நின்ற கப்பலில் இருந்து அந்த மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு உரிய $72.6 மில்லியன் பணம் இலங்கை அரசால் செலுத்தப்பட்ட பின்னரே மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மார்ச் மாதம் 25ம் திகதி முதல் மூடப்பட்டுள்ள இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மேற்படி ரஷ்ய மசகை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிக்கும். அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா […]
The Gambia என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டை ஆண்ட Yahya Jammeh என்பவரின் மனைவிக்கு சொந்தமான மாளிகை போன்ற வீடு ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் பறித்து உள்ளது. சுமார் $3 மில்லியன் பெறுமதியான இந்த வீட்டை விற்பனை செய்து அந்த பணத்தை சர்வாதிகாரியால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க உள்ளது நீதிமன்றம். வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள Maryland மாநிலத்திலேயே சர்வாதிகாரியின் இந்த மாளிகை உள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள Gambia மக்கள் உளவு அறிந்து நீதிமன்றத்துக்கு எடுத்து உள்ளனர். […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Uvalde என்ற இடத்து Robb Elementary School மாணவர் 18 பேர் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளனர். உள்ளூர் நேரப்படி இந்த சூடு மதியம் 12:17 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரும், வயது 18, அதிகாரிகளின் சூட்டுக்கு பலியாகி உள்ளார். கவச உடைகள் அணிந்த சந்தேகநபர் முதலில் தனது பேத்தியை (grandmother) சுட்டுள்ளார். பேத்தி ஹெலி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். சந்தேகநபர் பின்னர் தான் பயணித்த pick-up வாகனத்தை […]
கடன் நெருக்கடியில் முறிந்துபோன இலங்கைக்கு நிதி ஆலோசனை (financial advice), சட்ட ஆலோசனைகளை (legal advice) வழங்க Lazard மற்றும் Clifford Chance ஆகிய மேற்கு நாட்டு நிறுவனங்களை அமர்த்துகிறது இலங்கை. 1848ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Lizard அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தளமாக கொண்டது. சுமார் 3,200 ஆலோசகர்களை கொண்டுள்ள இதற்கு குறைந்தது 26 நாடுகளில் கிளைகள் உண்டு. 2021ம் ஆண்டில் இதன் வருமானம் $3.19 பில்லியன் ஆக இருந்துள்ளது. Clifford Chance LLP பிரித்தானியாவின் […]
இந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற அஸ்ரேலிய பொது தேர்தலில் Holt என்ற தொகுதியில் வென்ற Cassandra Fernando என்பவரும் (Labor கட்சி), இரண்டாம் இடத்தை அடைந்து தோற்ற Ranj Perera என்பவரும் (Liberal கட்சி) இலங்கையில் பிறந்தவர்களே. அத்துடன் ரவி ரகுபதி என்பவர் சுயேற்சையாக போட்டியிட்டு 6ம் இடத்தை அடைந்து உள்ளார். Cassandra 29,220 வாக்குகளை (41.8%) பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார். இவர் 1999ம் ஆண்டு தனது 11 வயதில் பெற்றாருடன் இலங்கையில் […]
கனடிய தமிழ் வாக்குகளை சில்லறை விலையில் பெற்று கனடிய அரசியல் கட்சிகளுக்கு மொத்த விலையில் விற்கும் கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய பிரதமர் மே மாதம் 18ம் திகதியை கனடாவில் “Tamil Genocide Remembrance Day” என்று அறிவித்து உள்ளார். இது கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் மற்றுமொரு சில்லறை சாதனை மட்டுமே. இவ்வகை கனடிய சில்லறை நாடகங்களால் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கபோவது இல்லை. கனடா இப்போது கூறும் massacre […]
பெற்றுக்கொண்ட கடனுக்கான $78 மில்லியன் வட்டியை செலுத்த தவறியதால் இலங்கை சட்டப்படி மே 18ம் திகதி முறிந்துள்ளது. மேற்படி வட்டி உரிய காலத்தில் (ஏப்ரல் 18) மட்டுமன்றி மேலதிகமாக வழங்கப்பட்ட 30 தினங்கள் (grace period) தாண்டியும் (மே 18) செலுத்தப்படவில்லை. சுதந்திர இலங்கையில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதல் தடவை. இதை sovereign default என்பர். ஏப்ரல் 18ம் திகதி சீனாவுக்கான $105 மில்லியன் கடனும் திருப்பி அடைக்கப்படவில்லை. Sovereign default அடைந்த நாடுகள் மேலும் […]
San Diego நகருக்கு அண்மையில், அமெரிக்க-மெஸ்சிக்கோ எல்லையின் கீழே மேலுமொரு சுரங்க பாதையை அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளது. எல்லைக்கு கீழே 532 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க பாதை மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை கடத்த பயன்பட்டு உள்ளது. சுமார் 1.2 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சுரங்க பாதை தரமான சுவர்களையும், மின் இணைப்பையும், காற்றோட்ட வசதிகளையும் கொண்டது. அமெரிக்காவின் பக்கத்தில் இது ஒரு களஞ்சியத்துள் இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது நிலத்துக்கு கீழே […]
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான தொகுதி ஆசனங்களை மாற்றி அமைக்கிறது மோதியின் மத்திய அரசு. இந்த மாற்றி அமைத்தலின் பிரதான நோக்கம் அங்குள்ள இந்துக்களுக்கு அதிக ஆசனங்களை வழங்குவதே. இதுவரை ஜம்மு பகுதிக்கு 37 ஆசனங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு 46 ஆசனங்களும் இருந்தன. புதிய முறைப்படி ஜம்முவுக்கு 43 ஆசனங்களும், காஷ்மீர் பகுதிக்கு 47 ஆசனங்களும் இருக்கும். ஜம்மு பகுதி இந்துக்களை பெருமளவில் கொண்ட பகுதி. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி இஸ்லாமியரை பெருமளவில் கொண்ட […]
International Monetary Fund (IMF) தனது Special Drawing Rights (SDR) என்ற currency basket பங்கீட்டில் சீன நாணயமான யுவானுக்கு (Yuan) 12.28% வழங்க சனிக்கிழமை தீர்மானித்து உள்ளது. இது முனைய பங்கீட்டுடன் ஒப்பிடுகையில் 1.36% அதிகம். 2016ம் ஆண்டே சீன நாணயம் முதல் தடவையாக SDR கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அதற்கு முன் அமெரிக்க டாலர், யூரோ, பிரித்தானிய பௌண்ட்ஸ், ஜப்பானின் ஜென் ஆகிய 4 நாணயங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டு இருந்தன. 2016ம் ஆண்டு […]