பிரித்தானிய Boris Johnson ஆட்சி தற்பொழுது பெரும் குழப்பத்தில் உள்ளது. பலர் Boris Johnson ஆட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இறுதியாக Alex Chalk என்ற அந்நாட்டு solicitor general தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே Rishi Sunak என்ற நிதி அமைச்சரும், Sajid Javid என்ற சுகாதார அமைச்சரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் இன்று செவ்வாய் வழங்கி உள்ளனர். இரண்டு பிரதான அமைச்சர்கள் சில நிமிடங்களில் பதவி விலகுவது பிரதமருக்கு […]
சுமார் $6 பில்லியன் சொத்துக்களை கொண்ட Xiao Jianhua என்ற கனடிய சீனர் மீது சீனா ஊழல் வழக்குகளை இன்று திங்கள் தாக்கல் செய்துள்ளது. ஹாங் காங் நகரில் மறைந்து இருந்த நேரத்தில் அடையாளம் காணப்படாதோரால் 2017ம் ஆண்டு கடத்தப்பட்டு இருந்த இவர் தற்போது சீன போலீசாரின் கையில் உள்ளார். இவர் கடத்தப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் சென்றாலும் தற்போதே இவர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவர் ஒரு கனடியர் என்றபடியால் சீனாவில் உள்ள […]
உலகம் எங்கும் பொதுவாக இரண்டு வகை OS (Operating System) கொண்ட கணனிகள் உண்டு. அதில் சுமார் 85% கணனிகள் பயன்படுத்துவது அமெரிக்க Microsoft நிறுவனத்தின் Windows என்ற OS. அடுத்து, சுமார் 15% கணனிகள் பயன்படுத்துவது அமெரிக்க Apple நிறுவனத்தின் iOS. ஆனால் வேறு சில OS களும் உண்டு. அதில் Linux வகை OS தரமான ஒன்று. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள Windows மற்றும் Apple கணனிகளில் இருந்து தன்னை விடுவிக்க சீனா Kylin […]
சீனா Boeing என்ற அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனத்தை முற்றாக புறக்கணித்து, Airbus என்ற ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சுமார் 300 பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்கிறது. அமெரிக்கா புறக்கணிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் தற்போது நிலவும் அரசியல் முறுகல் நிலையே காரணம் என்று கவலை தெரிவித்து உள்ளது Boeing. Air China விமான சேவையும், China Southern Airlines விமான சேவையும் தலா 96 விமானங்களாக மொத்தம் 192 Airbus A320 Neo […]
இலங்கை வந்திருந்த International Monetary Fund (IMF) அதிகாரிகள் 10 நாட்கள் பேச்சுக்களை கொண்டிருந்தாலும் இலங்கைக்கு கடன் வழங்கும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. பேச்சுக்கள் நலமாக (constructive) இடம்பெற்றன என்று வியாழன் கூறி இருந்தாலும், மேலும் உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது IMF. மேலதிக பேச்சுக்கள் இணையம் மூலம் தொடரும் என்றும் IMF கூறி உள்ளது. இக்காலத்தில் staff-level இணக்கம் கொண்டு இணக்கத்தை நடைமுறை செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். அதன் பின்னரே IMF அமைப்பின் Executive Board கடனை வழங்க […]
(Elavalagan, June 29, 2022) The war in Ukraine has been going on for more than 4 months now. No geopolitical war is ended on time, or on budget. Nothing is special here either. It is just another geopolitical war. Like the other wars, it will end with winners and losers, regardless of how long it […]
அமெரிக்காவின் Texas மாநிலத்து San Antonio நகரில் மூடப்பட்ட லாரி ஒன்றில் 50 அகதிகள் மரணித்த நிலையில் காணப்பட்டு உள்ளனர். இந்த அகதிகள் பெரும்பாலும் மெக்ஸிக்கோ, குவாட்டமாலா, Honduras ஆகிய நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. San Antonio நகரம் மெக்ஸிக்கோ எல்லையில் இருந்து வடக்கே 260 km தூரத்தில் உள்ள நகரம். உள்ளூர் நேரப்படி திங்கள் மாலை 6:00 மணியளவில் அதிகாரிகளுக்கு மரணித்தோர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் 48 பேர் அந்த இடத்திலேயே மரணித்து இருந்தனர். […]
இலங்கை அண்மையில் டாலர் இன்மையால் தனது வெளிநாட்டு bond கடன்களை அடைக்க முடியாது கடனில் முறிந்து இருந்தது. ஆனால் ரஷ்யா தேவையான பணம் இருந்தும் வெளிநாட்டு கடனில் முறிகிறது என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. ஆனால் அவ்வாறு தான் முறியவில்லை என்கிறது ரஷ்யா. ரஷ்யாவுக்கு சுமார் $40 பில்லியன் bond கடன் உள்ளது. அதேவேளை ரஷ்யாவிடம் யூகிரைன் யுத்தத்துக்கு முன் $640 பில்லியன் பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பாக இருந்துள்ளது. ரஷ்யாவின் கையில் உள்ள $640 பில்லியன் […]
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் 1 மில்லியன் யூரோவை ($1.05 மில்லியன்) பணமாக ஒரு பெட்டியில் (suitcase) பெற்றார் என்று Clarence House கூறியதாக பிரித்தானிய Sunday Times இன்று கூறியுள்ளது. இந்த பணம் Sheikh Hamad bin Jassim என்ற முன்னாள் கட்டார் (Qatar) பிரதமரால் வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த பணம் உடனடியாக Prince of Wales Charitable Fund என்ற நிதியத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுள்ளது. அதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. […]
சீனாவின் Belt and Road திட்டத்தை மேற்கு நாடுகள் ஆரம்பித்தில் புறக்கணித்து இருந்தாலும் சீன திட்டம் உலகில் தமது ஆளுமையை பறிப்பதால் G7 நாடுகள் இன்று ஞாயிறு $600 பில்லியன் திட்டம் ஒன்றை போட்டிக்கு நடைமுறை செய்ய இணங்கி உள்ளன. இத்தொகை வரும் 5 ஆண்டு காலத்தில் செலவிடப்படும். ஜெர்மனியின் Schloss Elmau என்ற இடத்தில் கூடிய G7 தலைவர்கள் மத்தியிலேயே இந்த அறிவிப்பை அமெரிக்க சனாதிபதி பைடென் செய்யதுள்ளார். Partnership for Global Infrastructure and […]