அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றதால் சீனா அமெரிக்காவுடனான பல தொடர்புகளை துண்டித்து இருந்தது. அதனால் விசனம் கொண்ட Antony Blinken என்ற அமெரிக்காவின் Secretary of State சீனாவின் செயல் பொறுப்பற்ற செயல் (“irresponsible steps”) என்று இன்று சனிக்கிழமை சாடி உள்ளார். பாதுகாப்பு, போதை கடத்தல், சர்வதேச குற்றம், சூழல் மாசடைதல் உட்பட 8 துறைகளில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயலாற்றிய. அவற்றையே சீனா தற்போது இடைநிறுத்தி உள்ளது. ஆசியாவில் பெருமளவு […]
உலகத்திலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான MSC Tessa ஆகஸ்ட் 1ம் திகதி மிதக்க விடப்பட்டு உள்ளது. விரைவில் சேவைக்கு வரவுள்ள இந்த கப்பல் 24,116 இருபது அடி நீள கொள்கலன்களை (TEU, Twenty-foot Equivalent Unit) காவ வல்லது. அதனால் இதுவே உலகத்தில் அதிக கொள்கலன்களை காவ வல்ல கப்பல் ஆகிறது. இந்த கப்பல் சுவிஸ் நாட்டை தளமாக கொண்ட MSC (Mediterranean Shipping Company) என்ற நிறுவனத்துக்காக சீனாவின் CSSC (China State Shipbuilding […]
அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றதால் விசனம் கொண்ட சீனா ஆரம்பித்த தாய்வானை சுற்றிய யுத்த பயிற்சியின் முதல் நாள் பல சீன ஏவுகணைகள் தாய்வான் மேலாக சென்று உள்ளன. இதனால் விசனம் கொண்டுள்ள G7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்கு நாடுகள். சீனா குறைந்தது 9 ஏவுகணைகள் தாய்வான் நோக்கி ஏவி உள்ளது. அதில் 4 தாய்வானின் தலைநகர் Taipei மேலாக சென்றுள்ளது. இவ்வாறு சீனா செய்வது இதுவே முதல் தடவை. […]
நேற்று அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றதுக்கு பதிலடியாக சீனா என்றும் இல்லாத அளவில் பாரிய யுத்த பயிற்சிகளை தாய்வானை சுற்றி ஆரம்பித்து உள்ளது. இந்த பயிற்சி ஆகஸ்ட் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரை இடம்பெறும். இதற்கான அறிவிப்பை சீனா பெலோஷி தாய்வானில் இறங்கியவுடன் அறிவித்து இருந்தது. ஒரு live-fire பயிற்சி என்றும் அதன்படி இதில் long-range live ammunition ஏவுதல் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தாய்வானை சுற்றி குறைந்தது 6 […]
சீனாவின் எதிர்ப்புக்கும் மத்தியில் அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணியளவில் Taipei நகரில் உள்ள Songshan விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். இதற்கு முன் பெலோஷி சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சென்று இருந்தார். தாய்வானின் பின் இவர் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் செல்வார். மலேசியாவில் இருந்து சென்ற இவரின் SPAR19 என்ற குறியீடு கொண்ட Boeing C-40C வகை விமானம் தென் சீன கடலின் […]
Ayman al-Zawahiri என்ற அல்கைடா இயக்கத்தின் தற்போதைய தலைவரை அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொலை செய்துள்ளது. ஒசாமா பின் லாடன் மறைவுக்கு பின் இவரே அந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ளார். ஆப்கானித்தானில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சனி/ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஆனால் மேலதிக விபரங்களை பைடென் பின்னர் கூறுவார். தற்போது 71 வயதான இவர் மீதான தாக்குதலை அமெரிக்க சனாதிபதி பைடென் நியூ யார்க் நேரப்படி […]
இந்தோனேசியாவின் உல்லாச பயணிகள் அதிகம் விரும்பும் பாலி (Bali) நகரில் இருந்து அஸ்ரேலியாவின் டார்வின் (Darwin) விமான நிலையம் சென்ற நபருக்கு அவர் தன்னிடம் இருந்த Muffin உணவை தெரிவிக்காத காரணத்தால் A$ 2,664 (U$ 1,874) தண்டம் விதிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் Foot and Mouth நோய் பாலி நகரம் உட்பட இந்தோனேசியாவின் பல பாகங்களில் பரவுவதால் அஸ்ரேலியா தனது நாட்டுக்குள் வரும் உணவுகள் மீது கடும் எச்சரிக்கையாக உள்ளது. டார்வின் விமான நிலையத்தில் சேவையில் […]
இந்தியா தன் கைவசம் உள்ள MiG-21 (Mikoyan-Gurevich-21) வகை யுத்த விமானங்களை 2025ம் ஆண்டில் சேவையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. மிகையான அளவில் இந்திய MiG-21 விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதே இந்த தீர்மானத்துக்கு காரணம். ஜூலை 28ம் திகதி ஒரு MiG-21 ராஜஸ்தான் மாநிலத்தில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானப்படையினர் பலியாகி உள்ளனர். 2021ம் ஆண்டில் மட்டும் 6 இவ்வகை இந்தியப்படை விமானங்கள் வீழ்ந்து உள்ளன. இந்தியாவிடம் தற்போது இவ்வகை விமானங்கள் சுமார் 70 உள்ளதாக […]
David Jolly, Christine Whitman ஆகிய Republican கட்சி உறுப்பினர்களும் Andrew Yang என்ற Democratic கட்சி உறுப்பினரும் இணைந்து Forward என்ற மூன்றாம் கட்சியை உருவாக்கி உள்ளனர். கடும் போக்கு வலதுசாரி கட்சியான Republican கட்சியும், கடும் போக்கு இடதுசாரி கட்சியான Democratic கட்சியும் அமெரிக்காவை துண்டாடுகின்றன என்பதே Forward கட்சியின் முறைப்பாடு. Forward கட்சி இடதோ அல்லது வலதோ இல்லாமல் மத்திய கொள்கைகளை கொண்டிருக்கும் என்று Forward கூறுகிறது. Andrew Yang கடந்த அமெரிக்க […]
அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி (Nancy Pelosi) தாய்வான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் அங்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள முனைவது சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையே நேரடி மோதலை தோற்றுவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு மோதல் ஆரம்பித்தால் அமெரிக்காவும் அதில் தலையிட நேரிடும். இந்த விசயம் உட்பட பல காரணங்களால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி உள்ளது. இந்த முறுகல் நிலையை தணிக்க அமெரிக்க சனாதிபதி பைடென் நியூ யார்க் நேரப்படி இன்று […]