எகிப்தின் தலைநகர் Cairo வுக்கு அண்மையில் உள்ள Giza என்ற நகரில் உள்ள Abu Sifin Coptic தேவாலய தீக்கு குறைந்தது 41 பேர் பலியாகியும், 55 காயமடைந்தும் உள்ளனர். மின் ஒழுக்கே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி போலீஸ் அறிக்கை கூறுகிறது. விபத்து இடம்பெற்ற வேளையில் சுமார் 5,000 பேர் தேவாலயத்தில் இருந்துள்ளனர். விபத்து உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9:00 மணிக்கு நிகழ்துள்ளது. தேவாலய வாசல் தடைப்பட்டதானாலே அதிகமானோர் மரணித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. […]
சீனாவின் Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செல்ல இலங்கை அரசு சனிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் Yuan Wang 5 இலங்கை துறைமுகத்துக்கு வருகிறது. சீனா இது ஒரு ஆய்வு கப்பல் என்று கூறினாலும் இந்தியாவும், அமெரிக்காவும் இதை உளவுபார்க்கும் கப்பலாகவே கருதுகின்றன. இந்த கப்பல் செய்மதி மூலமான தொடர்புகளையும், ICBM போன்ற நீண்ட தூரம் பாயும் ஏவுகணை அவதானிப்புகளையும் செய்ய வல்லது. […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பின் Mar-a-Lago என்ற மாளிகை வீட்டில் இருந்து அமெரிக்க அரசுக்கு சொந்தமான 11 Top Secret ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்து உள்ளது. அனால் ரம்ப் அந்த ஆவணங்கள் declassified ஆவணங்கள் என்று கூறுகிறார். அமெரிக்க அரசுக்கு சொந்தமான இரகசிய ஆவணங்களை பதவியில் உள்ள சனாதிபதியும், அனுமதி கொண்ட உயர் அதிகாரிகளும் பார்வை இடலாம். ஆனால் அவற்றை அவர்கள் தமது வீட்டுக்கு எடுத்து செல்வது குற்றம். இச்செயல் […]
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டப்படும் புதிய Terminal 2 வேலைகள் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கட்டுமான வேலைகளை செய்யும் ஜப்பான் நிறுவனமான Taisei கட்டுமானத்தை நிறுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்த கட்டுமானத்துக்கான பணம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறுகிறது Taisei. பணம் கிடைக்க வழி செய்தால் மட்டுமே தாம் வேலைகள் தொடர முடியும் என்கிறது Taisei. அத்துடன் வேலைகளை செய்வதற்கு தேவையான சூழ்நிலையும் அவசியம் என்கிறது Taisei. புதிய Terminal 2 கட்டிடத்தையும் பழைய […]
தனது இரண்டாவது விசா காலமும் முடிவடைந்த நிலையில் முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாய வியாழன் சிங்கப்பூரை விட்டு வெளியேறி உள்ளார் என்று சிங்கப்பூர் Immigration & Checkpoints Authority கூறியுள்ளது . இவர் தற்போது எங்கு செல்கிறார் என்று கூறாவிட்டாலும், தாய்லாந்து செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. கோட்டபாய தாய்லாந்து செல்வதற்கு உரிமையை ஏற்கனவே கேட்டு இருந்ததாகவும் அந்த உரிமை வழங்கப்பட்டு இருந்ததாகவும் தாய்லாந்து பிரதமர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தாய்லாந்தில் அவர் 90 தினங்கள் தங்க உரிமை […]
ஈரானின் Khayyam என்ற செய்மதியை ரஷ்யா தனது Soyuz ஏவுகணை மூலம் இன்று ஆகஸ்ட் 9ம் திகதி ஏவி உள்ளது. High-resolution படங்களை எடுக்கக்கூடிய இந்த செய்மதியால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா. சுமார் 600 kg எடை கொண்ட இந்த செய்மதியின் resolution 1 மீட்டர் ஆகும். இது 500 km உயரத்தில் உலகை வலம் வரும். ஈரானின் Iranian Space Agency தாம் இந்த செய்மதியை நீர்வளம், விவாசாயம் போன்ற நுகர்வோர் பயன்பாடுகளுக்கே பயன்படுத்த உள்ளதாக […]
அமெரிக்காவின் மத்திய குற்ற புலனாய்வு (FBI) அதிகாரிகள் இன்று முன்னாள் சனாதிபதி ரம்பின் Mar-a-Lago என்ற சொந்த குடியிருப்பு மாளிகையை சோதனை செய்துள்ளனர். FBI அதிகாரிகளின் செயலால் கடுமையாக விசனம் கொண்டுள்ளார் ரம்ப். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின் ரம்ப் பிளோரிடா மாநிலத்தில் உள்ள இந்த மாளிகையிலேயே குடியிருக்கிறார். ஆனாலும் தேடுதல் வேளையில் ரம்ப் நியூ யார்க் நகரில் இருந்ததாக சில பத்திரிகைகள் கூறுகின்றன. வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ரம்ப் அமெரிக்க அரசுக்கு சொந்தமான […]
இலங்கையில் இருந்து பிரித்தானியாவின் Birmingham நகரில் நடைபெறும் Commonwealth 2022 போட்டிக்கு சென்ற இலங்கையரில் இதுவரை 10 பேர் தலைமறைவாகி உள்ளனர். இந்த போட்டிகள் ஜூலை 28ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரை நடைபெற்றன. தலைமறைவு ஆகியோரில் 8 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். இவருள் கரப்பந்தாட்ட வீரர், குத்துச்சண்டை வீரர், wrestlers, ஜூடோ வீரர் ஆகியோரும் அடங்குவர். அதில் 5 பேர் இலங்கை படைகளில் பணியாற்றியவர். தலைமுறை ஆகியவர் தமது பொதிகளை […]
இலங்கைக்கு வரும் Yuan Wang 5 என்ற சீன ஆய்வு கப்பலை தடுக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தம் வழங்கி வருகிறது. ஆனாலும் Yuan Wang 5 இலங்கையை நோக்கியே தற்போதும் பயணித்துக்கொண்டு உள்ளது. அந்த கப்பலின் வருகையை காலவரையறை இன்றி பின்போடுமாறு இலங்கை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனா அக்கப்பலின் பயண திசை மாறியதாக இதுவரை கூறவில்லை. முதல் திட்டபப்டி கப்பல் ஆகஸ்ட் 11ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்து பின் 17ம் திகதி வெளியேறும். மேற்படி […]
வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இஸ்ரேல் பலஸ்தீனர்களின் காசா (Gaza) பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு இதுவரை 6 சிறுவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் விமானங்கள் தொடர்ந்தும் அப்பகுதியை தாக்கி வருகின்றது. பதிலுக்கு பாலத்தீன போராளிகளும் சுமார் 400 சிறிய வகை எறிகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவி உள்ளனர். இவை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. சுமார் 2.3 மில்லியன் பலஸ்தீனர் வாழும் காசா பகுதியை இஸ்ரேலும், எகிப்தும் கடுமையான கட்டுப்பாடில் வைத்துள்ளன. வெள்ளிக்கிழமை […]