Facebook, Twitter, Instagram அமெரிக்க ஆதரவு பதிவுகளை அழித்தன

Facebook, Twitter, Instagram அமெரிக்க ஆதரவு பதிவுகளை அழித்தன

அமெரிக்காவுக்கு ஆதரவான அதேவேளை சீனா, ரஷ்யா, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மீது பொய்யான கருத்துக்களை, செய்திகளை பரப்பும் பல கணக்குகளை Facebook, Twitter, Instagram ஆகிய நிறுவனங்கள் புதன்கிழமை மூடி உள்ளன. மேற்படி நடவடிக்கையில் குறைந்தது 25 Facebook கணக்குகள், 12 Twitter கணக்குகள், 10 Instagram கணக்குகள் மூடப்பட்டு உள்ளன. அடையாளம் காணப்படாதோரால் மேற்படி அமெரிக்க ஆதரவு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. அத்துடன் இந்த பதிவுகள் […]

இந்திய NDTV செய்தி சேவையை அடானி கைக்கொள்ள முயற்சி

இந்திய NDTV செய்தி சேவையை அடானி கைக்கொள்ள முயற்சி

1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட NDTV (New Delhi TV) என்ற செய்தி நிறுவனத்தை இந்திய செல்வந்தர் அடானி (Adani) பலவந்தமாக கைக்கொள்ள முயற்சிக்கிறார். NDTV நிறுவனத்தை ஆரம்பித்தவருக்கு தெரியாமலேயே இந்த அறிவிப்பை அடானி நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை தாம் NDTV நிறுவனத்தின்  29.18% உரிமையை பங்கு (stock) கொள்வனவு மூலம் செய்ய உள்ளதாக அடானி கூறி இருந்தாலும், அதற்கு முன்னர் மேலும் 26% உரிமையை பெற இருந்ததை மறைத்து உள்ளது அடானி. அது மட்டுமன்றி கடந்த […]

பிரித்தானியரை இந்தியாவுக்கு பிரித்தானியா காட்டிக்கொடுத்தது

பிரித்தானியரை இந்தியாவுக்கு பிரித்தானியா காட்டிக்கொடுத்தது

Jagtar Singh Johal என்ற பிரித்தானிய சீக்கியரை இந்தியாவுக்கு பிரித்தானியா காட்டிக்கொடுத்து உள்ளது. அதனால் Johal இந்தியாவில் துன்புறுத்தப்பட்டு (torture) உள்ளார். காட்டிக்கொடுத்தது மட்டுமன்றி பின் அந்த சீக்கியரின் நலனுக்காக பிரித்தானியா அக்கறை கொண்டுள்ளதாகவும் நடித்து உள்ளது. இந்தியாவில் வாழும் சீக்கியரின் உரிமைகளுக்காக ஆக்கங்கள் எழுதிவரும் Johal 2017ம் ஆண்டு இந்தியா சென்ற பொழுதே இந்தியாவில் அடையாளம் காணப்படாதோரால் கடத்தப்பட்டு பின் இந்த ஆண்டு மே மாதம் சட்டப்படி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது டெல்லி […]

இம்ரான் கான் மீது பயங்கரவாத குற்ற வழக்கு தாக்கல்

இம்ரான் கான் மீது பயங்கரவாத குற்ற வழக்கு தாக்கல்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போதைய அரசு பயங்கரவாத குற்ற வழக்கு ஒன்றை திங்கள் தாக்கல் செய்து உள்ளது. இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியை இழந்து இருந்தார். இவரின் கைதை தடுக்க ஆதரவாளர் இம்ரானின் இஸ்லாமபாத் வீட்டை முற்றுகை இட்டு இருந்தனர். அதனால் இம்ரானுக்கு கைதுக்கு முன்னான பிணை (pre-arrest bail) வழங்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இம்ரான் செய்த ஊர்வலம் ஒன்றில் அரசுக்கு ஏதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தார். அத்துடன் […]

பூட்டினின் நெருங்கிய நண்பனின் மகள் கார் குண்டுக்கு பலி

பூட்டினின் நெருங்கிய நண்பனின் மகள் கார் குண்டுக்கு பலி

ரஷ்ய சனாதிபதி பூட்டினின் நெருங்கிய நண்பரான Alexander Dugin னின் மகள் Darya Dugin சனிக்கிழமை கார் குண்டு வெடிப்பு ஒன்றுக்கு பலியாகி உள்ளார். பூட்டினின் நெருங்கிய நண்பனான தந்தைக்கு வைத்த குண்டுக்கே 29 வயதுடைய மகள் பலியாகி உள்ளதாக நம்பப்படுகிறது. தந்தை, மகள் இருவரும் பூட்டினின் யுக்ரைன் மீதான தாக்குதலை ஆதரிப்பவர்கள். அரசியல் பதவிகள் எதையும் கொண்டிராவிடினும் தந்தை Alexander அரசியலில் பூட்டினின் மூளை என்று வர்ணிக்கப்படுபவர். தந்தை  ரஷ்ய தேசியத்தில் திடமான நாட்டம் கொண்டவர். […]

கும்மாளம் போட்ட பின்லாந்து பிரதமர் போதை பரிசோதனையில்

கும்மாளம் போட்ட பின்லாந்து பிரதமர் போதை பரிசோதனையில்

பின்லாந்து நாட்டின் பிரதமர் Sanna Marin அண்மையில் இடம்பெற்ற party ஒன்றில் போதை தலைக்கு ஏறியவர் போல் கும்மாளம் போட்டிருந்தார் இருந்தார். அந்த வீடியோ தற்போது பகிரங்கத்துக்கு வந்ததால் அவர் போதைக்கான சோதனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சோதனை முடிவுகள் அடுத்த கிழமை வெளிவரும். அதேநேரம் Marin, வயது 36, தான் எந்தவித சட்டவிரோத போதைகளுக்கும் அடிமையாகவில்லை என்று கூறியுள்ளார். தற்போது மட்டுமன்றி தனது இளைய வயதிலும் சட்டவிரோத போதை உட்கொண்டிருக்கவில்லை என்கிறார் பிரதமர். ஆனாலும் […]

ஆய்வு வெளியீடுகளில் அமெரிக்காவை பின் தள்ளியது சீனா

ஆய்வு வெளியீடுகளில் அமெரிக்காவை பின் தள்ளியது சீனா

விஞ்ஞான ஆய்வு வெளியீடுகளில் அமெரிக்காவை முதல் தடவையாக சீனா பின்தள்ளி உள்ளது என்கிறது ஜப்பானின் National Institute of Science and Technology Policy (NISTEP) என்ற அமைப்பு. உலகம் எங்கும் பல்லாயிரம் விஞ்ஞான ஆய்வு வெளியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் மிக தரமானவை பின் வரும் காலத்து ஆய்வுகளில் மேற்கோள் (citation) காட்டப்படும். முதல் ஆய்வின் தரம் உயர, அது மேற்கோள் காட்டப்படும் அளவும் அதிகரிக்கும். அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஆய்வுகளின் முதல் 1% ஆய்வுகள் […]

கொழும்பில் இருந்து சென்ற கொள்கலன் கப்பலில் தீ

கொழும்பில் இருந்து சென்ற கொள்கலன் கப்பலில் தீ

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்ற ZIM Charleston என்ற பெயர் கொண்ட கொள்கலன் கப்பல் தீ பற்றி அதில் இருந்த 300 கொள்கலன்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. அதனால் அந்த கப்பல் மீண்டும் கொழும்பு துறைமுகத்துக்கு திரும்பலாம். சீனாவில் தனது பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய துறைகளில் தரித்து பின் ஆகஸ்ட் 8ம் திகதி கொழும்பு வந்துள்ளது. கொழும்பு East Terminal லில் கொள்கலன்களை இறங்கி, ஏற்றி பின் கொழும்பை விட்டு நீங்கி […]

மீண்டும் சந்திரனில் காலடி வைக்கும் முயற்சியில் நாசா

மீண்டும் சந்திரனில் காலடி வைக்கும் முயற்சியில் நாசா

அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முதல் படியாக ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்கள் இல்லாத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க உள்ளது. சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட SLS ஏவுகணை ஏற்கனவே Kennedy ஏவு தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. மிக பாரமான இதை […]

தொடரும் கலிபோர்னியா பகுதி நீர் தட்டுப்பாடு

தொடரும் கலிபோர்னியா பகுதி நீர் தட்டுப்பாடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை அண்டிய தென் மேற்கு பகுதி தொடர்ந்தும் நீர் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி வருகிறது. அடுத்த ஆண்டில் இப்பகுதி Tier 2 அளவிலான நீர் தட்டுப்பாட்டை அடையலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. Tier 0, Tier 1, Tier 2, Tier 3 ஆகிய அளவீடுகள் இப்பகுதிக்கு நீர் வழங்கும் மீட் வாவி (Lake Mead) என்ற Hoover Dam அணையை கட்டி தேக்கிய நீரின் அளவில் தங்கி உள்ளன. மீட் அணைக்கட்டு கொள்ளக்கூடிய […]

1 88 89 90 91 92 340