டுபாய், மாலைதீவு செல்லும் இலங்கையின் FitsAir

டுபாய், மாலைதீவு செல்லும் இலங்கையின் FitsAir

இலங்கையின் தனியார் விமான சேவையான FitsAir வரும் அக்டோபர் 5ம் திகதி முதல் டுபாய் நகருக்கு பயணிகள் சேவையை ஆரம்பிக்க உள்ளது. அக்டோபர் 10ம் திகதி முதல் அது மாலைதீவுக்கும் பயணிகள் சேவையை ஆரம்பிக்கும். டுபாய்க்கான சேவை ஆரம்பித்தில் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய தினங்களில் கிழமைக்கு 3 சேவைகளாக இருக்கும். இதில் ஒரு 7kg எடை கொண்ட carry-on பையையும், ஒரு 30 kg எடை கொண்ட checked-in பையையும் இலவசமாக எடுத்து செல்லலாம். 1998ம் […]

Baltic கடலில் மெதேன் வாயு கசிவு, நாசவேலை காரணம்?

Baltic கடலில் மெதேன் வாயு கசிவு, நாசவேலை காரணம்?

Baltic கடலின் கீழே செல்லும் Nord Stream என்ற மெதேன் வாயு குழாயில் இருந்து மெதேன் கசிய ஆரம்பித்துள்ளது. இந்த கசிவுக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று மேற்கு நம்புகிறது. பழைய Nord Stream 1 என்ற குழாயும், புதிய Nord Stream 2 என்ற குழாயும் ரஷ்யாவின் எரிவாயுவை ஐரோப்பா எடுத்துவர Baltic கடல் அடியில் பாதிக்கப்பட்டவை. யூகிரைன் யுத்தத்தின் பின் ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு கொள்வனவு செய்வதை தவிர்த்து அல்லது குறைத்து உள்ளது. […]

2002ம் ஆண்டில் 1,863 பேரை பலி கொண்ட Le Joola விபத்து

2002ம் ஆண்டில் 1,863 பேரை பலி கொண்ட Le Joola விபத்து

கப்பல் விபத்து என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது Titanic விபத்தே. ஆனால் 1912ம் ஆண்டு 1,496 பேரை பலி கொண்ட Titanic விபத்து உலகின் மூன்றாவது பெரிய பயணிகள் கப்பல் விபத்தே. இரண்டாவது பெரிய பயணிகள் விபத்து 2002ம் ஆண்டு 1,863 பேரை பலி கொண்ட Le Joola கப்பல் விபத்து. இருபது ஆண்டுகளுக்கு முன், 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி, Le Joola என்ற பயணிகள் கப்பல் Senegal என்ற மேற்கு ஆபிரிக்க […]

ரஷ்ய குடியுரிமை பெறுகிறார் Snowden, சண்டைக்கு அழைப்பு?

ரஷ்ய குடியுரிமை பெறுகிறார் Snowden, சண்டைக்கு அழைப்பு?

Edward Snowden என்ற அமெரிக்கருக்கு ரஷ்யா இன்று திங்கள் குடியுரிமை (citizenship) வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பிறந்த 75 பேருக்கு பூட்டின் இன்று ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார். அதில் ஒருவரே 39 வயது கொண்ட Snowden. 2013ம் ஆண்டு ரஷ்யா Snowden னுக்கு அடைக்கலம் வழங்கி இருந்தாலும், குடியுரிமை வழங்கி இருக்கவில்லை. ஆனால் 2020ம் ஆண்டு இவருக்கு ரஷ்யாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக Snowden கருத்து எதையும் இதுவரை கூறவில்லை. NSA (National Security […]

இலங்கையின் மொத்த கடன் $80.5 பில்லியன்

இலங்கையின் மொத்த கடன் $80.5 பில்லியன்

வெள்ளிக்கிழமை IMF அமைப்புக்கு இலங்கை வழங்கிய தரவுகளின்படி ஜூன் மாத முடிவில் இலங்கையிடம் $80.5 பில்லியன் கடன் இருந்துள்ளது. அதில் $46.6 பில்லியன் அந்நிய நாடுகளில் இருந்து பெற்ற கடன் என்றும், சுமார் $34.0 பில்லியன் உள்ளூரில் பெற்ற கடன் என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்படி $80.5 பில்லியன் கடன் இலங்கை GDP யின் 121.6% ஆகும். வெளிநாட்டு கடனில் $37.9 பில்லியன் அரசின் கடனாகவும், $5.5 பில்லியன் State-owned Enterprise (SOE) கொண்ட கடனாகவும், $3.2 பில்லியன் […]

கட்டார் விமான சேவை மீண்டும் முதலிடத்தில்

கட்டார் விமான சேவை மீண்டும் முதலிடத்தில்

Skytrax நிறுவனத்தின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த விமான சேவைகள் பட்டியலில் கட்டார் விமான சேவை (Qatar Airlines) மீண்டும் முதலிடத்தை வென்றுள்ளது. 2021ம் ஆண்டும் கட்டார் விமான சேவையே முதலிடத்தில் இருந்தது. இரண்டாம் இடத்தை சிங்கப்பூர் விமான சேவை வென்றுள்ளது. கடந்த ஆண்டில் இதுவே இரண்டாம் இடத்தில் இருந்தது. மூன்றாம் இடத்தில் டுபாயின் எமிரேட்ஸ் (Emirates Airlines) உள்ளது. இந்தியாவின் Vistara, IndiGo ஆகிய இரண்டு விமான சேவைகளும் முறையே 20 ஆவது இடத்தையும், 45 ஆவது […]

கனடாவுக்கு பியோனா வழங்கவுள்ள வரலாறு காணாத மழை

கனடாவுக்கு பியோனா வழங்கவுள்ள வரலாறு காணாத மழை

பியோனா என்ற சூறாவளி (Hurricane Fiona) கனடாவின் கிழக்கு பகுதிக்கு வரலாறு காணாத மழையை பொழிய உள்ளது. இந்த தாழ் அமுக்கம் தற்போது Halifax நகருக்கு தெற்கே சுமார் 900 km தூரத்தில் நிலைகொண்டுள்ளது. சனிக்கிழமை இது Nova Scotia மாநிலத்தை தாக்கும். பியோனா கனடாவின் கிழக்கே 936 millibars வரையான தாழ் அமுக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை 1970ம் ஆண்டு இடம்பெற்ற 940 millibars அமுக்கமே கனடாவில் பதியப்பட்ட அதிகுறைந்த தாழ் அமுக்கமாகும். இப்பகுதிகளில் […]

Truss ஆட்சியில் பாரிய வீழ்ச்சி அடையும் பவுண்ட்

Truss ஆட்சியில் பாரிய வீழ்ச்சி அடையும் பவுண்ட்

லிஸ் ட்ரஸ் (Liz Truss) அண்மையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அங்கு புதிய பொருளாதார மற்றும் வரி கொள்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய வரி கொள்கைகளால் மிரண்ட சந்தைகள் பிரித்தானிய நாணயமான பவுண்டடின் பெறுமதியை வீழ்ச்சி அடைய செய்துள்ளது. இன்று பிரித்தானிய பவுண்ட் ஒன்றுக்கு ஆக குறைந்த பெறுமதியான $1.09049 மட்டுமே கிடைத்திருந்தது. 1980களில் பவுண்ட் ஒன்றுக்கு சுமார் $2.40 கிடைத்து இருந்தது. ட்ரஸ் ஆட்சியில் வருமான வரிகள் குறைக்கப்படுகின்றன, வீட்டு கொள்வனவு வரி குறைக்கப்படுகிறது, […]

சிரியாவில் அகதிகள் வள்ளம் கவிந்தது, 71 பேர் பலி

சிரியாவின் கடல் பகுதியில் அகதிகள் சென்ற வள்ளம் ஒன்று கவிழ்ந்து பலர் பலியாகி உள்ளனர். இதுவரை 71 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என்று சிரியாவின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அத்துடன் 20 பேர் காப்பாற்றப்படும் உள்ளனர். காப்பாற்றப்பட்டவர் வைத்தியம் பெற்று வருகின்றனர். வியாழக்கிழமை அமிழ்ந்த இந்த வள்ளத்தில் சுமார் 120 முதல் 150 பேர் வரை பயணித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர்களில் பலர் லெபனான், சிரியா, பலஸ்தீன் ஆகிய இடங்களில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்றவர் […]

அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

அடிமை வர்த்தகத்தில் (slave trade) தாம் இலாபம் அடைந்துள்ளதாக இன்று வியாழன் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge) கூறியுள்ளது. தாம் நேரடியாக அடிமைகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் அடிமை வர்த்தகம் மூலம் செல்வம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை, சொத்துக்களை பெற்று மறைமுகமாக அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்து உள்ளதாகவே கேம்பிரிட்ஜ் கூறுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்து முதலீடுகளும் அடிமை வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னனி உறுப்பினர் பலர் East India Company, […]

1 84 85 86 87 88 340