Joshua Mast என்ற அமெரிக்க Marine Corps படையினன்/வழக்கறிஞர் அவரின் மனைவியுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் பெண் குழந்தை ஒன்றை தனதாக்கினார் என்று குழந்தையின் உறவினரால் வழக்கு ஒன்று அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் நீதி திணைக்களங்களுள் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க படைகள் தாக்கியதில் ஆப்கானித்தான் குடும்பம் ஒன்று பலியாகி இருந்தது. தாய், தந்தை, 5 சகோதரங்கள் பலியாக ஒரு பெண் குழந்தை மட்டும் காயங்களுடன் […]
பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் பதவிக்கு வந்து 6 கிழமைகளில் இன்று வியாழன் பதவியை விட்டு விலகியுள்ளார். அதனால் இவரே பிரித்தானியாவில் மிக குறைந்த காலம் பதவியில் இருந்த பிரதமர் ஆகிறார். இந்த அறிவிப்பை டிரஸ் பிரதமரின் வதிவிடமான Number 10 Downing Street முன்னே செய்துள்ளார். இவர் பதவிக்கு வந்தது பொது தேர்தல் மூலம் அல்ல. பதிலுக்கு உட்கட்சி வாக்கெடுப்பு மூலமே இவர் பதவிக்கு வந்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு உட்கட்சி வாக்கெடுப்பு நிகழலாம். பின் […]
ஆட்சிக்கு வந்து சுமார் 6 கிழமைகளில் இரண்டாவது அமைச்சரும் பிரித்தானிய பிரதமர் டிரஸ் ஆட்சியில் இருந்து பதவி நீங்கியுள்ளார். Suella Braverman என்ற உள்துறை அமைச்சரே (home secretary) இன்று புதன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த அமைச்சர் அரச ஆவணம் ஒன்றை தனது தனியார் email மூலம் அனுப்பியதே பதவி நீங்கலுக்கான காரணம் என்று கூறப்படுகிறது. அனால் இவர் பிரதமரை சாடியதுவும் காரணம் ஆகலாம். Grant Shapps என்பவர் தற்போது உள்துறை அமைச்சராக பதவி […]
ஒரு வல்லரசு என்று கூறப்பட்ட ரஷ்யா தற்போது பெருமளவு ஆயுதங்களை ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்கிறது. Shahed-136 போன்ற ஆளில்லா யுத்த விமானங்கள், Fateh, Zolfaghar போன்ற நிலத்தில் இருந்து நிலம் பாய்ந்து எதிரிகளை தாக்கும் ஏவுகணைகள் உட்பட பல ஆயுத தளபாடங்களை ரஷ்யா ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்கிறது. அதேவேளை ரஷ்யா, ஈரான் ஆகிய இரண்டு எதிரி நாடுகளும் யுக்கிறேன் யுத்தத்தில் இணைந்ததால் அமெரிக்கா விசனம் கொண்டுள்ளது. தாம் ஈரான் மீது மேலும் தடைகளை விதிக்க […]
2019ம் ஆண்டு பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ. ஆட்சி இந்தியாவில் Citizenship Amendment Act (CAA) என்ற ஒரு சட்டத்தை நடைமுறை செய்திருந்தது. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியா வரும் இந்து அகதிகள் இந்திய குடியுரிமை பெற உரிமை இருந்தது. இந்த சட்டம் மிக சிறு தொகையினரை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இந்தியா சென்ற பல்லாயிரம் இந்துக்களுக்கு அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு […]
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை நசுக்கும் நோக்கில் இதுவரை காலமும் அமெரிக்கா அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு தரம் உயர்ந்த கணனி chip விற்பனை செய்வதை தடை செய்திருந்தது. பின்னர் சீனாவுக்கு chip தயாரிக்கும் இயந்திரங்கள் விற்பனை செய்வதையும் தடை செய்தது. தற்போது அமெரிக்க chip அறிவாளிகள் சீனாவில் பணியாற்றுவதையும் தடை செய்கிறது. பல சீனர்கள் முற்காலங்களில் அமெரிக்கா சென்று, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து, அமெரிக்க chip நிறுவனங்களில் பணியாற்றி அமெரிக்க குடியுரிமையும் பெற்று இருந்தனர். இவர்கள் பின்னர் சீனாவில் […]
2002ம் ஆண்டுக்கான உலக பசி கொடுமை சுட்டியில் (2022 Global Hunger Index) இலங்கை (Moderate) 64ம் இடத்தில் உள்ளது. இந்த சுட்டியின்படி 2000ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் Serious அளவிலான பசி கொடுமையில் இருந்த இலங்கை 2014ம் ஆண்டிலும் இந்த ஆண்டிலும் Moderate பசி கொடுமையில் உள்ளது. இந்த சுட்டி கணிப்பில், 9.9 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் Low நிலை பசி கொடுமை நாடுகளாகவும், 10.0 முதல் 19.9 வரையான புள்ளிகளை பெறும் நாடுகள் […]
உலகின் தற்போதைய முதலாவது செல்வந்தரான Elon Musk ஆரம்பித்த SpaceX என்ற தொழில்நுட்ப நிறுவனம் Starlink என்ற செய்மதி தொடர் மூலம் உலகின் எந்த பாகத்துக்கும் இணைய சேவையை வழங்கும் வசதிகளை கொண்டது. ஆனால் இந்த சேவைக்கான செலவுகள் அதிகம். ஒரு கருவிக்கான மாத செலவு $4,500 வரை ஆகலாம். ரஷ்யா யுக்கிரேனை தாக்கி அவர்களின் இணைய தொடர்புகளை அழித்த வேளையில் Starlink நிறுவனம் சுமார் 20,000 சிறிய இணைய இணைப்பு கருவிகளை யுகிரேனுக்கு வழங்கி அவை […]
பிரித்தானியா பிரதமர் டிரஸ் தனது நிதி அமைச்சரை பலியாக்கி தவறுகளில் இருந்து தான் தப்ப முனைகிறார். Kwasi Kwarteng என்ற நிதி அமைச்சரை பதவியில் இருந்து விலக்கியது மட்டுமன்றி அவர் நடைமுறை செய்யவிருந்த வரி குறைப்பு திட்டங்களையும் பிரதமர் டிரஸ் கைவிடுகிறார். முதலில் பிரதமர் டிரஸ் நிதி அமைச்சரின் வரி திட்டங்களுடன் உடன்பட்டு இருந்தாலும், அந்த திட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு உருவாக அந்த திட்டங்களில் இருந்து தன்னை விடுவித்து தப்ப முனைகிறார் டிரஸ். ஆனாலும் தற்போது இங்கிலாந்தில் […]
இன்று புதன்கிழமை ஐ.நா. பொதுச்சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான ஆனால் பயன் எதுவுமற்ற தீர்மானம் 143 நாடுகளின் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரஷ்ய உட்பட 5 நாடுகள் தீர்மானத்துக்கு எதிர்த்தை வாக்களிக்க, 35 நாடுகள் வாக்களியாது பின்வாங்கி உள்ளன. இன்றைய தீர்மானம் ரஷ்ய உடனே யுத்தத்தை நிறுத்தி, ரஷ்யாவுடன் அண்மையில் இணைத்த Donetsk, Luhansk, Kherson, Zaporrizhia ஆகிய யூக்கிறேன் பகுதிகளை விடுவிக்க கேட்டுள்ளது. கடந்த மாதம் இவ்வகை தீர்மானம் ஒன்று ஐ.நா. சட்டமாகக்கூடிய Security […]