அமெரிக்காவின் பைடென் அரசு யுகிரேனின் சனாதிபதி செலென்ஸ்கியை (Zelenskiy) நிபந்தனைகள் எதுவும் இன்றி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்த விரும்புவதாக தெரியப்படுத்துமாறு மறைவில் அழுத்துகிறது என்று அமெரிக்காவின் The Washington Post பத்திரிகை கூறியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் யுகிரேனுக்கு தொடர்ந்தும் உதவ தீர்மானம் கொண்டிருந்தாலும், மேற்கு நாடுகளும் யுகிறேன் யுத்தத்தால் பெருமளவு பாதிப்பு அடைகின்றன. மேற்கின் பணமும் வேகமாக கரைந்து, கையிருப்பில் உள்ள ஆயுதங்களும் குறைந்து வருகிறது. பூட்டின் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் […]
இந்தியாவை, குறிப்பாக சுமார் 20 மில்லியன் மக்களை கொண்ட தலைநகர் டெல்லியை, உடல் நலத்துக்கு ஆபத்தான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் பாடசாலைகள் மூடப்பட்டு உள்ளன. உழவர்கள் அறுவடையின் பின் அடி கட்டைகளை எரித்தல், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, கட்டுமான இடங்களில் இருந்து வரும் தூசு எல்லாம் வளிமண்டலத்தின் அடியில் தேங்கி உள்ளன. வெள்ளிக்கிழமை டெல்லியில் ஒரு கன மீட்டர் வளியில் 470 மைக்ரோ கிராம் அல்லது அதற்கும் அதிகமான மாசுகள் உள்ளன. பொதுவாக 250 […]
இலங்கை பெண்ணான Nadee பதியும் Traditional Me என்ற YouTube சமையல் தொடரை தற்போது 1.6 மில்லியன் பேர் பார்வை செய்கின்றனர். மிக சாதாரண முறையில் சமையல் செய்து காட்டும் Nadee தான் Li Ziqi என்ற சீன பெண்ணின் YouTube தொடரை பார்த்தே கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். Li Ziqi தொடர் சுமார் 20 மில்லியன் பேரின் பார்வையை கொண்டது. ஆரம்பத்தில் Nadee தயாரித்த YouTube விடீயோக்கள் அதிகம் பார்வைகளை பெற்று இருக்கவில்லை. ஆனால் 2020ம் ஆண்டில் […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வயது 70, அவரை படுகொலை செய்யும் நோக்கில் சுடப்பட்டதால் காலில் காயமடைந்து உள்ளார். இன்று வியாழன் லாகூர் நகருக்கு அண்மையில் அவர் தனது ஆதரவாளருடன் ஊர்வலம் ஒன்றை நிகழ்த்துகையிலேயே சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அரச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்த Faisal Javed போன்ற மேலும் சிலரும் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி போலீசார் கூறுகின்றனர், ஆனால் போலீசார் விபரம் எதையும் வெளியிடவில்லை. […]
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ் மூலம் வைத்திய கல்வியை புகட்ட தமிழ்நாட்டு அரசு வழி செய்கிறது. இவ்வாறு தாய் மொழியில் உயர் கல்வியை கற்பதால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. இந்தியாவில் அது தீமையாக அமையும் சந்தர்ப்பம் அதிகம். முதலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசமே அந்த மாநிலத்து பிரதான மொழியான ஹிந்தியில் முதலாம் ஆண்டு வைத்திய கல்வியை வழங்க முன்வந்தது. இங்கு முதலாம் ஆண்டுக்கான anatomy, physiology, biochemistry ஆகிய மூன்று […]
இஸ்ரேலில் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 5 ஆவது தேர்தல் மீண்டும் நெற்ரன்யாஹவை (Benjamin Netanyahu, வயது 73) பிரதமர் ஆக்கவுள்ளது. ஆனால் இம்முறையும் எந்த கட்சியும் சுயமாக ஆழ முடியாததால் நெற்ரன்யாஹூ கடும்போக்கு கட்சிகளுடன் கூட்டாகவே ஆழ முடியும். இதுவரை எண்ணப்பட்ட 85% வாக்குகளின்படி மொத்தம் 120 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றில் நெற்ரன்யாஹூ கூட்டணி சுமார் 65 ஆசனங்களை பெறக்கூடும். ஏற்கனவே பலஸ்தீனர் மீது காழ்ப்பு கொண்ட நெற்ரன்யாஹூ இம்முறை பலஸ்தீனர் மீது அவரிலும் அதிகம் […]
ஈரானின் அணு ஆய்வுகள் நிறுத்தப்படல் அவசியம் என்று மேற்கு நாடுகள் அனைத்தும் முழங்குகின்றன. ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை என்றும் கூறப்படடாலும் இந்த நாடுகள் அணு ஆய்வை காரணம் கூறி ஈரான் மீது பல தடைகளையும் திணித்துள்ளன. அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது வசைபாடி வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஐ. நாவில் இஸ்ரேல் அதன் அணு ஆயுதங்களை கைவிடல் அவசியம் என்று கூறும் தீர்மானம் ஒன்று […]
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் Morbi என்ற நகரில் உள்ள பிரித்தானியர் காலத்து Hanging Bridge of Morbi என்ற பாலம் உடைந்து வீழ்ந்தால் குறைந்தது 68 பேர் பலியாகி உள்ளனர். Machhu என்ற ஆற்றுக்கு மேலால் செல்லும் இந்த பாலம் உடைந்ததால் அதில் பயணித்தோர் ஆற்றுள் விழுந்துள்ளனர். பாதசாரிகளுக்கு மட்டுமான இந்த தொங்கு பாலம் (suspension bridge) உடைந்த நேரத்தில் அதில் சுமார் 400 பேர் அதில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பலரின் இருப்பிடம் இதுவரை […]
அஸ்ரேலியாவுக்கு இறைச்சி வகைகளை தனது பொதிகளில் எடுத்து சென்று, ஆனால் அவ்வாறு எடுத்து செல்வதை பயணிகள் ஆவணத்தில் மறுத்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு அஸ்ரேலியா $2664 தண்டம் விதித்துள்ளது. அத்துடன் அவரின் விசாவும் இரத்து செய்யப்பட்டு, அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளார். இந்த பயணி தனது பொதிகளில் 3.1 kg வாத்து (duck) இறைச்சி, 1.4 kg சமைத்த மாட்டு இறைச்சி (beef rendang), 500 g உறைந்த மாட்டு இறைச்சி, 900 g கோழி […]
தென் கொரியாவில் Halloween கொண்டாட்டம் நிகழ்ந்த இடத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு குறைந்தது 146 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 150 காயமடைந்து உள்ளனர். Seoul என்ற தலைநகரில் சனிக்கிழமை இரவு 10:20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணித்தோரில் பெரும்பாலானவர்கள் தமது 20 வயதுகளில் உள்ள பெண்கள் என்றும் கூறப்படுகிறது. மிகையானோர் அவ்விடத்தில் இருந்ததால் நெரிசல் ஏற்படும் என்று கருதி போலீசார் ஏற்கனவே அவ்விடத்துக்கு சென்றுள்ளனர். சம்பவ இடம் மிகவும் ஒடுக்கமானதும், ஏற்ற இறக்கமானதும் என்று […]