கியூபாவில் உள்ள Guantanamo Bay என்ற அமெரிக்க இராணுவ தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளின் குதங்களில் குழாய் செலுத்தி துன்புறுத்திய உண்மை தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் பரிசோதனை செய்த Dr. Sondra Crosby என்ற வைத்தியரே இந்த உண்மையை நீதிமன்றில் கூறியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதலின் பின் பெருமளவு இஸ்லாமியர் பல சட்டவிரோத வதை முகாம்களில் வைத்து அமெரிக்க CIA உளவு பிரிவால் வதை செய்யப்பட்டு இருந்தனர். அதில் Abd al-Rahim […]
(Alagan Elavalagan, February 26, 2023) On February 24th of 2023, on the eve of one year since the Ukraine invasion by Russia, China tabled its 12 points “position” paper on the war in Ukraine. American President Joe Biden quickly rejected China’s publication, calling it “not rational” for China to mediate since it has been supporting […]
The Associated Press (AP) இன்று பலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை விபரித்து சிறு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1998ம் ஆண்டு Shivi Drori என்ற பெண் இஸ்ரேல் இராணுவத்தில் தனது கடமையை முடித்து வெளியேறிய உடனே 3 இழுத்து செல்லும் வாகன வீடுகளை (trailers) கொள்வனவு செய்து, இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனரின் West Bank இடமொன்றில் raspberry என்ற பழம் பயிரிட ஆரம்பித்தார். இது சட்டவிரோத குடியிருப்பு என்றாலும் இஸ்ரேல் இராணுவம் இவருக்கு பாதுகாப்பை […]
2022ம் ஆண்டு தென் கொரியாவில் பிள்ளை பெறக்கூடிய தாய் ஒருவருக்கான சராசரி பிறப்பு விகிதம் 0.78 ஆக இருந்துள்ளது. 1970ம் ஆண்டின் பின் இதுவே அந்த நாட்டுக்கான மிக குறைந்த பிறப்பு விகிதமாகும். 2021ம் ஆண்டு இங்கு இது 0.81 ஆக இருந்தது. 2022ம் ஆண்டு இங்கே 249,000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. Seoul என்ற தென் கொரியாவின் தலைநகரில் பிறப்பு விகிதம் 0.59 ஆக மட்டுமே இருந்துள்ளது. ஒரு நாடு தனது சனத்தொகையை அதிகரிக்காமலும், குறையாமலும் […]
அமெரிக்காவின் 29 மாநிலங்களில் உள்ள சுமார் 65 மில்லியன் மக்கள் அங்கு நிலவும் கடும் குளிர் காலநிலையில் அகப்பட்டுள்ளனர். இந்த கடுங்குளிர் மேற்கே கலிபோர்னியா மாநிலம் முதல் கிழக்கே நியூ யார்க் வரை தாக்கவுள்ளது. இதன் எச்சங்கள் Toronto, Ottawa போன்ற கனடாவின் கிழக்கு பகுதிகளையும் தாக்கும். Minneapolis பகுதி புதன்கிழமை மட்டும் சுமார் 20 அங்குல (51 cm) snow வை பெறும் என்றும் மொத்தத்தில் 24 அங்குல snow வை பெறும் என்றும் கூறப்படுகிறது. […]
ரஷ்யா இறுதியாக நடைமுறையில் இருந்த அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக இன்று செவ்வாய் ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். New START இந்த ஒப்பந்தமே அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடைமுறையில் இருந்த இறுதி அணுவாயுத குறைப்பு இணக்கமாகும். மேற்படி இணக்கம் இருதரப்பும் எவ்வளவு மற்றும் எவ்வகை அணு ஆயுதங்களை கொண்டிருக்கலாம் என்று விதிமுறை செய்கிறது. இன்றில் இருந்து அந்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்காது. இந்த இணக்கம் 2021ம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகளுக்கு, 2026ம் ஆண்டு வரை, […]
அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் காலை யூகிரேனுக்கு முன்னறிவிப்பு இன்றிய திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரஷ்யா யூகிரேனை ஆக்கிரமித்த பின் இதுவே பைடெனின் யூகிரேனுக்கான முதல் பயணம். பைடெனும், பைடெனுக்கு முன் பல மேற்கு நாடுகளின் தலைவர்களும் யூகிரேன் சென்று படமெடுத்து இருந்தாலும் இந்த பயணங்களால் அங்கு இடம்பெறும் யுத்தத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. ரஷ்யா தான் விரும்பிய வெற்றியை அடையவுமில்லை, யூகிரேன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை விரும்பிய அளவு தடுக்கவுமில்லை. இந்த யுத்தம் ஆரம்பித்து […]
இந்த மாதம் 6ம் திகதி துருக்கியிலும், சிரியாவிலும் இடம்பெற்ற 7.8 மற்றும் 7.5 அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படுத்திய நில பிளவுகளின் மொத்த நீளம் ஒப்பிட்ட அளவில் சுமார் இலங்கை அளவு நீளமானது என்று California Institute of Technology அறிந்துள்ளது. சுமார் 300 km நீளம் கொண்ட இந்த இரண்டு பிளவுகளிலும் ஒரு பக்க நிலம் ஒரு திசையில் நகர, அடுத்த பக்கம் எதிர் திசையில் நகர்ந்துள்ளது. சில இடங்களை ஒரு பக்கம் அடுத்த பக்கத்தில் […]
உலக செல்வந்தர்களின் ஒருவரான ஜோர்ஜ் சரோஸ் (George Soros) மீதும் இந்திய பிரதமர் மோதியின் பாரதீய ஜனதா கட்சி பாய்கிறது. அதானி விசயம் தொடர்பாக சரோஸ் கருத்து கூறியமையே பா. ஜ. பாச்சலுக்கு காரணம். இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சரோசை “வயதான, செல்வந்த, கருத்துக்களை கொண்ட, ஆபத்தான” (old, rich, opinionated, dangerous) நபர் என்று சாடியுள்ளார். வியாழக்கிழமை சரோஸ் தனது உரை ஒன்றில் “இந்தியா ஒரு சனநாயக நாடு, ஆனால் மோதி ஒரு […]
அடுத்த கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபை (UN Security Council) இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனர் நிலங்களில் புதிய யூத குடியிருப்புகளை அமைக்க முனைவதை தடுக்கும் நோக்கில் தீர்மானம் ஒன்றை வாக்கெடுப்புக்கு விட உள்ளது. இதை veto வாக்கு கொண்ட அமெரிக்கா தடுக்குமா என்பது இதுவரை அறியப்படவில்லை. தற்போது இஸ்ரேலில் ஆட்சியில் உள்ள அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு பலஸ்தீன காழ்ப்பு கொண்ட இனவிரோத கூட்டணியாகும். இந்த அரசு மேலும் 10,000 சட்டவிரோத யூத குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ள […]