ஐ.நா. காசா யுத்த நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்தது 

ஐ.நா. காசா யுத்த நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்தது 

நேற்று புதன் ஐ. நா. பாதுகாப்பு சபை அறிமுகம் செய்த காசாவுக்கான உடனடி யுத்த நிறுத்த  தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ (veto) வாக்கு மூலம் மீண்டும் தடுத்து உள்ளது. ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிராக எந்த தண்டனையும் வராதபடி தொடர்ந்தும் அமெரிக்கா பாதுகாக்கிறது. மொத்தம் 15 அங்கத்துவ நாடுகளை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் 14 நாடுகள் மேற்படி தீர்மானத்தை ஆதரித்து இருந்தாலும் வீட்டோ வாக்கு கொண்ட அமெரிக்கா மட்டும் இஸ்ரேலை பாதுகாத்து உள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் […]

அமெரிக்காவில் சீனரை பின் தள்ளிய இந்திய மாணவர் தொகை

அமெரிக்காவில் சீனரை பின் தள்ளிய இந்திய மாணவர் தொகை

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வரும் இந்திய மாணவர்களின் தொகை முதல் முறையாக சீன மாணவர் தொகையிலும் அதிகமாகி உள்ளது. அமெரிக்க-சீன முறுகல் நிலை காரணமாக சீன மாணவர் அமெரிக்கா செல்வது குறைந்து வருகிறது. அமெரிக்க State Department நவம்பர் 18ம் திகதி வெளியிட்ட தரவின்படி தற்போது அமெரிக்காவில் 331,602 இந்திய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இத்தொகை கடந்த ஆண்டிலும் 23% அதிகம். அதேவேளை இக்காலத்தில் 277,398 சீன மாணவர்கள் மட்டுமே அமெரிக்காவில் கல்வி கற்கின்றனர். இத்தொகை கடந்த ஆண்டிலும் 4.2% […]

நீதிமன்றம் ராசையாவின் கடவுச்சீட்டை பறிக்க, கனடா புதியதை வழங்கியது

நீதிமன்றம் ராசையாவின் கடவுச்சீட்டை பறிக்க, கனடா புதியதை வழங்கியது

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு காரணமாக போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்றம் தேசிங்கராசன் ராசையாவின் (Thesingarasan Rasiah) கடவுச்சீட்டை பறிக்க, கனடிய அரசு புதியதோர் கடவுச்சீட்டை ராசையாவுக்கு வழங்கியுள்ளது. ராசையாவுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்ட போது அவர் கனடிய போலீசாரால் electronic ankle bracelet பொருத்தப்பட்டு Cornwall (Ontario) பகுதியில் வீட்டு காவலில் இருந்துள்ளார். இந்த குழப்பம் கனடாவில் போலீஸ், நீதிமன்ற குற்றச்செயல் பட்டியலுக்கும் (database) கடவுச்சீட்டு திணைக்களத்துக்கு இடையில் தரமான தேடல் வசதி இல்லை என்பதை காட்டியுள்ளது. 2021ம் ஆண்டு இரண்டு இலங்கை அகதிகளை அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு […]

டெல்லியில் மீண்டும் சுவாசத்துக்கு ஆபத்தான வளி

டெல்லியில் மீண்டும் சுவாசத்துக்கு ஆபத்தான வளி

இன்று திங்கள் இந்தியாவின் தலைநகர் நியூ டெல்லியில் மீண்டும் சுவாசத்துக்கு ஆபத்தான வளி பரவியுள்ளது. அதனால் பாடசாலைகள் மூடப்பட்டு, வெளி நகரங்களில் இருந்து வரும் பார வாகனங்கள் தடுக்கப்பட்டு, கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. உலக சுகாதார அமைப்பின் (WHO – World Health Organization) ஆய்வின்படி 2.5 மைக்ரோ-மீட்டர் விட்டம் கொண்ட PM2.5 என்று அழைக்கப்படும் துகள்கள் நுரையீரல் வரை சென்று உடலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லன. WHO கணிப்பின்படி 1 மீட்டர் கனவளவு வளியில் 5 மைக்ரோ-கிராம் PM2.5 துகள்களுக்கு […]

Hypersonic ஏவுகணையை இந்தியா பரிசோதித்து

Hypersonic ஏவுகணையை இந்தியா பரிசோதித்து

இன்று ஞாயிறு இந்திய ஒலியிலும் பல மடங்கு வேகமாக செல்ல வல்ல Hypersonic ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இவ்வகை ஏவுகணைகளை ஏற்கனவே கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா நாலாவது நாடாக இணைகிறது. இந்தியாவின் இந்த ஏவுகணை குறைந்தது 1,500 km தூரம் சென்று தாக்க வல்லது என்று இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்துக்கு கிழக்கே APJ அப்துல் கலாம் தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த சோதனை ஏவுகணை கடலில் குறியை சரியாக […]

பெருவில் சீனாவின் மிகப்பெரிய அதிநவீன துறைமுகம்

பெருவில் சீனாவின் மிகப்பெரிய அதிநவீன துறைமுகம்

சீனா தென் அமெரிக்க நாடான பெருவில் (Peru) இந்த கிழமை மிகப்பெரிய, அதிநவீன துறைமுகம் ஒன்றை சேவைக்கு விட்டுள்ளது. இந்த துறைமுகம் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் இராணுவ நலன்களுக்கு மிக அச்சுறுத்தல் ஆகியுள்ளது. பெருவின் தலைநகர் லீமாவுக்கு (Lima) வடக்கே சுமார் 80 km தூரத்தில் Chancay என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகம் சீனாவின் Belt and Road Initiative (BRI) திட்டத்தின் கீழ் சீனாவின் Cosco Shipping நிறுவனத்தால் $1.3 பில்லியன் செலவில் கட்டப்பட்டது. இந்த துறைமுகத்தில் […]

இந்திய ‘பயங்கரவாதி’ கனடாவில் கைது, உறவில் மேலும் திருப்பம்

இந்திய ‘பயங்கரவாதி’ கனடாவில் கைது, உறவில் மேலும் திருப்பம்

இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையில் சீக்கியர் தொடர்பாக உறவு முறுகல் நிலையில் இருக்கையில் இந்திய அரசு பயங்கரவாதி என்று கூறும் Arsh Dalla என்று அழைக்கப்படும் Arshdeep Singh Gill (வயது 28) கனடாவில் துப்பாக்கி சூடு ஒன்று காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட, சீக்கிய பிரிவினை வாதியான Hardeep Nijjar என்பவருக்கும் Dalla வுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. இந்தியாவே Nijjar ஐ படுகொலை செய்தது என்று ரூடோ அரசு குற்றம் […]

2/3 பெற்றார் AKD, 3ம் சாதனையில் சிங்களத்துடன் இணைந்த தமிழ் 

2/3 பெற்றார் AKD, 3ம் சாதனையில் சிங்களத்துடன் இணைந்த தமிழ் 

நேற்று நாடளாவிய அளவில் இடம்பெற்ற இலங்கை பொது தேர்தலில் அனுர குமார (AKD) தலைமையிலான ஆட்சி மொத்தம் 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்களை பெற்று 2/3 பெரும்பான்மை ஆட்சி அமைக்கவுள்ளது. சிங்ககளத்துடன் தமிழும் இணைந்து செய்த இந்த சாதனை இலங்கைக்கு பெரும் பயனை வழங்காவிட்டாலும் பெரும் கொள்ளைகளை நிறுத்தும் அல்லது குறைக்கும். இது மேற்கு நாடுகளையே வியக்க வாய்த்த சிங்களத்தின் 3ம் சாதனை. முதலாவது கோத்தபாயாவை விரட்டியது, இரண்டாவது AKD யை சனாதிபதி ஆக்கியது. சிங்களத்தின் முதல் இரண்டு சாதனைகளிலும் தமிழ் அரசியல் நாட்டாண்மைகளின் கூற்றுக்கு […]

Equal Value Trade (EVT)

Equal Value Trade (EVT)

(Elavalagan, November 13, 2024) Two tools of global cross-border trading of the early days are naturally grown into two pillars of the global economy; one is the US dollar and the other is the global financial messaging system SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunications). These two readily available financial tools made recent globalization much […]

இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை தாக்கும் நாணய இடர்பாடு

இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை தாக்கும் நாணய இடர்பாடு

இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படக்கூடிய நாணயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலை இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கர் India-Russia Business Forum அமர்வில் ஏற்று கொண்டதுடன் அதற்கு ஒரு தீர்வு அவசியம் என்றும் கூறியுள்ளார். தற்போது ஆண்டு ஒன்றில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் $66 பில்லியன் ஆக உள்ளது. இதில் பெருமளவு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கொள்வனவு செய்யும் எரிபொருளுக்கானது. ரஷ்யா இந்தியாவிடம் இருந்து பெருமளவில் கொள்வனவு செய்ய எதுவும் இல்லை. […]

1 5 6 7 8 9 339