தாய்வான் தீவை தாக்குவது போல் சீன இராணுவம் ஒத்திகை செய்கிறது. சனி, ஞாயிரு, திங்கள் ஆகிய 3 தினங்கள் செய்யப்படும் சீனாவின் இந்த இராணவ ஒத்திகை தாய்வான் சனாதிபதி அண்மையில் அமெரிக்கா சென்று அமெரிக்க House அவை தலைவரை சந்தித்ததை கண்டிக்கும் நோக்கில் செய்யப்படுகிறது. பெரும்பலாலான ஒத்திகை நடவடிக்கைகள் தாய்வானின் தென்மேற்கு கடல் பகுதியில் இடம்பெற்றாலும், தாய்வானின் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுகின்றன. சனிக்கிழமை சீனாவின் 71 யுத்த விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. ஞாயிரு […]
யூக்கிறேனில் இடம்பெறும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சீனா சனாதிபதி சீயின் உதவியை நாடியுள்ளார் பிரஞ்சு சனாதிபதி மக்கிறான். தற்போது சீனாவுக்கு 3-தின பயணத்தை மேற்கொண்டுள்ள பிரஞ்சு சனாதிபதிக்கு சீனாவில் முழு அளவிலான மரியாதை வழங்கப்படுள்ளது. பூட்டினை பேச்சுக்கு அழைக்க சீயால் முடியும் என்று தான் கருதுவதாக மக்கிறான் கூறியுள்ளார். அமெரிக்கா யூக்கிறேன் யுத்தம் தொடர்வதை விரும்பினாலும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் யுத்தத்தை விரைவில் நிறுத்த விரும்புகின்றன. அதேவேளை மக்கிறான் சீனாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக […]
உலக அளவில் அதிகம் hedge fund முதலீட்டை கொண்ட வங்கி கனடாவின் TD Bank (Toronto Dominion Bank, TD.TO) என்று அறியப்படுகிறது. TD வங்கியின் பங்குச்சந்தை பங்கில் சுமார் $3.7 பில்லியன் hedge fund முதலீடுகளில் உள்ளது என்று அறியப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் JP Morgan பங்குகளில் $2.3 பில்லியன் பங்குகளே hedge fund முதலீடுகளில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை வீழ்ச்சி அடைய உள்ளது என்று கருதும் பொழுதே hedge […]
பின்லாந்து (Finland) இன்று முதல் ஒரு நேட்டோ நாடு ஆகிறது. நேட்டோ அணியில் இணையும் 31 ஆவது நாடாகிறது பின்லாந்து. பின்லாந்து நேட்டோவுடன் இணைவதால் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லை மேலும் 1,340 km ஆல் அதிகரித்துள்ளது. யூக்கிறேன் நேட்டோ அங்கம் கொள்வதை எதிர்த்து பூட்டின் யூக்கிறேனை ஆக்கிரமித்து ஒரு ஆண்டுக்கு மேலாக யுத்தத்தில் அவதிப்பட, பின்லாந்து இலகுவில் நேட்டோ நாடாகியுள்ளது. அதேவேளை சுவீடனும் நேட்டோ அணியில் இணைய விண்ணப்பித்துள்ளது. அந்த முயற்சியை நேட்டோ நாடான துருக்கி […]
Florida மாநிலத்தில் வாழும் முன்னாள் அமெரிக்க சனாதிபதி தற்போது நியூ யார்க் நகரை நோக்கி பறந்து கொண்டிருக்கிறார். இவர் நாளை செவ்வாய் நியூ யார்க் நீதிமன்றில் சரணடைவார். இவர் மீது 30 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் பிரதானமானது ரம்ப் Stormy Daniel என்ற உயர்வர்க்க விபசாரிக்கு 2016ம் ஆண்டு சட்டவிரோத முறையில் பணம் வழங்கி ($130,000 hush money) உண்மையை மறைக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டே. அமெரிக்க சனாதிபதி ஒருவர் இவ்வாறு சரண் அடைவது […]
இந்திய மத்திய பிரதேச மாநிலத்து Indore என்ற நகரில் இடம்பெற்ற ராம் நவமி நிகழ்வின்போது கிணற்று மூடி ஒன்று பாரத்தால் உடைய, அதில் இருந்தோர் உள்ளே விழுந்து உள்ளனர். அவர்களில் குறைந்தது 36 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் வைத்தியசாலைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். Beleshwar Mahadev Jhulelal என்ற ஆலயத்தில் இருந்த சுமார் 40 அடி (12 மீட்டர்) ஆழ கிணறு ஒன்றுக்கு சீமெந்து மூடி இருந்துள்ளது. விழாவுக்கு வந்த மக்கள் இந்த […]
அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி விரைவில் கைதாகும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. நியூ யார்க் ஜூரி ரம்ப் criminal குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்கவேண்டும் என்று இன்று வியாழன் கூறியுள்ளது. ரம்ப் Stormy Daniel என்ற உயர்வர்க்க விபசாரிக்கு 2016 சட்டவிரோத முறையில் பணம் ($130,000 hush money) வழங்கி உண்மையை மறைக்க முயன்றார் என்பதே ரம்ப் மீதான குற்றச்சாட்டு. ரம்ப் அடுத்த கிழமை சரண் அடையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு தற்போது Florida மாநிலத்தில் வாழும் ரம்ப் நியூ […]
அலிபாபா (Alibaba) என்ற மிகப்பெரிய சீன நிறுவனம் 6 பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளது. இந்த பிரிவை சீன அரசே முன்னின்று செய்யதாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை தனியார் வர்த்தகங்கள் அரசிலும் பெரிதாக வளர்வதை சீன அரசு தடுக்க முயல்வதாக தெரிகிறது. 1999ம் ஆண்டு ஜாக் மா (Jack Ma) என்ற சீனரால் ஆரம்பிக்கப்பட்ட அலிபாபா என்ற eCommerce வர்த்தகம் விரைவில் வளர்ந்து உலகின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றானது. தனது பண பலத்தால் அலிபாபா வட்டிக்கு கடன் வழங்கும் […]
முன்னாள் தாய்வான் சனாதிபதி மா (Ma Ying-jeou, வயது 73) இன்று திங்கள் சீனா சென்றுள்ளார். தாய்வானின் சனாதிபதி ஒருவரோ அல்லது முன்னாள் சனாதிபதி ஒருவரோ சீனா செல்வது இதுவே முதல் தடவை. தற்போதைய சனாதிபதி Tsai Ing-wen, ஒரு DPP (Democratic Progressive Party) கட்சி உறுப்பினர், மா சீனா செல்வதை வன்மையாக கண்டித்துள்ளார். மா ஒரு KTM (Kuomintang) கட்சி உறுப்பினர். மாவின் பயணம் அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று கூறப்பட்டாலும் அவர் […]
அம்ரிட்பால் சிங் (Amritpal Singh) என்பவரை கைது செய்ய இந்திய காவல்துறை கடந்த ஒரு கிழமையாக தேடுதல் வேட்டை செய்கிறது. புஞ்சாப் சீக்கியரான அம்ரிட்பால் மீண்டும் புஞ்சாப் பிரிவினையை தூண்டுகிறார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. 1993ம் ஆண்டு புஞ்சாப்பில் பிறந்த அம்ரிட்பால் 3ம் ஆண்டுடன் கல்லூரி படிப்பை நிறுத்தி இருந்தார். 2012ம் ஆண்டில் இவர் டுபாய் சென்று பெற்றோரின் போக்குவரத்துக்கு வர்த்தகத்தில் பணியாற்றினார். 2019ம் ஆண்டு இவர் புஞ்சாப் உழவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி இருந்தார். […]