கனடியாருக்கு விசா வழங்கலை இந்தியா நிறுத்தம்

கனடியாருக்கு விசா வழங்கலை இந்தியா நிறுத்தம்

கனடியாருக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதுவர் பணியாகங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியே விசா வழங்கும் பணிகளை நிறுத்தியதாக இந்தியா கூறியுள்ளது. ஆனால் தற்போது மூன்றாம் நாடுகளில் உள்ள கனடியருக்கும் விசா வழங்கப்பட வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் முறிந்து உள்ளது. குறிப்பாக Hardeep Singh Nijjar என்ற சீக்கியர் பிரிவினைவாதி கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டமையும், அதன் பின்னணியில் இந்தியா […]

கனடிய சிக்கியர் கொலையில் இந்தியா, ரூடோ

கனடிய சிக்கியர் கொலையில் இந்தியா, ரூடோ

சீக்கிய பிரிவினை வாதியான கனேடிய சீக்கியர் ஒருவர் கனடாவின் British Columbia மாநிலத்தில் ஜூன் 18ம் திகதி சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். Hardeep Singh Nijjar, வயது 45, என்ற சீக்கியரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். இவரின் கொலை Guru Nanak Sikh Gurdwara என்ற சீக்கிய ஆலயம் ஒன்றின் கார் தரிப்பு இடத்திலேயே நிகழ்ந்தது. இவர் இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க இயங்குபவர். இவரை யார் கொலை செய்தார் என்பதை கனடிய போலீசார் […]

ஆபிரிக்காவில் 3 இராணுவ ஆட்சிகள் கூட்டணி

ஆபிரிக்காவில் 3 இராணுவ ஆட்சிகள் கூட்டணி

Mali, Burkina Faso, Niger ஆகிய இராணுவ ஆட்சிகளை கொண்ட மூன்று நாடுகளும் தாம் பாதுகாப்பு கூட்டணியில் ஒன்றில் இணைவதாக அறிவித்துள்ளன. Alliance of Sahel Staes என்ற இந்த அணியில் ஒன்றை வெளிநாடு ஒன்று தாக்கினால் மற்றைய இரண்டும் பாதுகாப்புக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் முன்னர் பிரான்சின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகள். சுதந்திரத்துக்கு பின்னரும் பிரான்ஸ் தனது ஆளுமையை இங்கே செலுத்தி வந்தது. ஆனால் தற்போதைய இராணுவ ஆட்சியாளர் பிரான்சுக்கு எதிராக […]

சீன பாதுகாப்பு அமைச்சர் வீட்டு காவலில்?

சீன பாதுகாப்பு அமைச்சர் வீட்டு காவலில்?

இரண்டு கிழமைகளாக பொது இடங்களில் தோன்றாது உள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Li Shangfu ஊழல் விசாரணைகள் காரணமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சீன சனாதிபதி சீயின் ஆட்சியில் அரச ஊழியர் ஊழல் செய்வது கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் போன்ற உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். Li Shangfu சனாதிபதி சீயினால் பதவிக்கு கொண்டுவரப்பட்டு இருந்தாலும் ஊழல் அறியப்பட்டவுடன் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. Li Shangfu இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்யும் பிரிவுக்கு […]

Miami விமான நிலையத்தில் திருடும் TSA ஊழியர்

Miami விமான நிலையத்தில் திருடும் TSA ஊழியர்

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Miami சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்யும் TSA (Transportation Security Administration) ஊழியர்கள் இருவர் பயணிகளின் கை பைகளில் இருந்து பணம் திருடுவது CCTV விடீயோக்களில் பதிவாகி உள்ளன. இந்த இரண்டு ஊழியர்களும் தற்போது பதவி விலக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

நிலநடுக்க நேரத்தில் வானத்திலும் ஒளி?

நிலநடுக்க நேரத்தில் வானத்திலும் ஒளி?

சில தினங்களுக்கு முன் மொராக்கோவில் 6.8 அளவில் நிலநடுக்கம் இடம்பெற்றது. அப்போது வானத்திலும் பிரகாசமான ஒளி இடம்பெற்றுள்ளது. இதை நில நடுக்க ஒளி (earthquake light) என்கின்றனர். விஞ்ஞானம் இந்த ஒளிக்கான காரணத்தை திடமாக கூறவில்லை. பதிலுக்கு சில அனுமானங்களையே முன்வைத்துள்ளது. மொராக்கோவில் மட்டுமன்றி முன்னரும் பல நில நடுக்கங்கள் வானத்தில் நில நடுக்க ஒளியை கொண்டிருந்தன. தற்போது மக்களின் தொலைபேசிகளில் வீடியோ வசதிகள் உள்ளதால் இவ்வகை ஒளி ஆதாரங்கள் கிடைக்கின்றன. 2007ம் ஆண்டு Pisco என்ற […]

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியது

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியது

லிபியாவில் ஞாயிறு இரவு சுனாமி போல் பாய்ந்து வந்த வெள்ளம் மக்களை கடலுள் தள்ளியுள்ளது. இந்த வெள்ளத்துக்கு இதுவரை சுமார் 2,300 பலியாகி உள்ளதாகவும், சுமார் 10,000 பேர் இருப்பிடம் அறியாது உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. Derna என்ற லிபியாவின் கடலோர நகரிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் விடியோக்கள் வீதிகளில் வெள்ளம் மக்களை இழுத்து செல்வதை காட்டுகின்றன. பல வாகனங்களும் இழுத்து செல்லப்பட்டன. பலர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் அவர்களின் உடல்கள் மீட்கப்படாது போகலாம். […]

லிபியா வெள்ளத்துக்கு 2,000 பேர் பலி, 6,000 தொலைவு

லிபியா வெள்ளத்துக்கு 2,000 பேர் பலி, 6,000 தொலைவு

வட ஆபிரிக்க நாடான லிபியாவில் இடம்பெற்ற வெள்ளத்துக்கு குறைந்தது 2,000 பலியாகி உள்ளதுடன், சுமார் 6,000 பேர் இடமறியாதும் உள்ளனர். Daniel என்ற சூறாவளி கிழக்கு லிபியாவை தாக்கியதாலேயே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட 2,000 பேர் Derna என்ற நகரில் பலியானோர் தொகை மட்டுமே Al-Bayda, Al-Marj, Tobruk, Takenis, Battah ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வீழ்ச்சியால் அணைகள் நிரம்பி உடைந்ததாலேயே திடீரெனெ வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. லிபியாவின் தலைநகர் திரிபோலியில் […]

வட கொரிய கிம் ரஷ்யா பணிக்கிறார்?

வட கொரிய கிம் ரஷ்யா பணிக்கிறார்?

வட கொரியாவின் தலைவர் கிம் (Kim Jong Un) ரஷ்யா நோக்கி பயணிப்பதாக செய்திகள் கூறுகின்றன. கிம் ரஷ்ய சனாதிபதி பூட்டினை சந்திப்பார் என்று இன்று திங்கள் ரஷ்யா கூறியுள்ளது. சந்திப்பு நாளை செவ்வாயும் இடம்பெறலாம். கிம் தனது ரயில் மூலமே பயணிப்பதாக கூறப்படுகிறது. கிம் பொதுவாக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரயில் மூலமே நீண்ட தூரங்கள் பயணிப்பார். பூட்டின் ரஷ்யாவின் கிழக்கு நகரமான Vladivostok இன்று திங்கள் சென்றுள்ளார். சந்திப்பு இந்த நகரத்தில் இடம்பெறலாம். ரஷ்யாவின் […]

1 50 51 52 53 54 340