ஹமாஸின் வரலாறு காணாத தாக்குதல், 300 பேர் பலி

ஹமாஸின் வரலாறு காணாத தாக்குதல், 300 பேர் பலி

சனிக்கிழமை ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த தாக்குதல் 50 ஆண்டு காலத்தில் இஸ்ரேல் மீது செய்யப்பட்ட மிக பெரிய தாக்குதலாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு மரணித்த யூதர் தொகை 300 என்றும் காயமடைந்தோர் தொகை 1,500 கூறப்படுகிறது.  மேலும் பல யூதர்களும், இஸ்ரேல் படையினரும் ஹமாஸால் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் ஆக்கிரமித்து உள்ள யூத நகரங்களிலும், சிலர் காசா பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது ஒரு இஸ்ரேல் போலீஸ் நிலையத்தை ஹமாஸ் உறுப்பினர் கைப்பற்றி உள்ளனர். அதை இஸ்ரேல் படைகள் சூழ்ந்துள்ளன. […]

இஸ்ரேலுள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல், 40 யூதர் பலி

இஸ்ரேலுள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல், 40 யூதர் பலி

Gaza பகுதியை ஆளும் பலஸ்தீனர் ஆயுத குழுவான ஹமாஸ் (Hamas) இஸ்ரேலுள் இரகசியமாக நுழைந்து செய்த தாக்குதலுக்கு குறைந்தது 40 யூதர் பலியாகியும், 800 யூதர் காயமடைந்தும் உள்ளனர். ஹமாஸின் இந்த செயலால் தாம் யுத்தத்தில் உள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் நெட்யன்யாகு கூறியுள்ளார். ஹமாஸ் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் இஸ்ரேலுள் ஏவியுள்ளது. இஸ்ரேல் தாம் பதிலுக்கு 17 ஹமாஸ் நிலையங்களை தாக்கியுள்ளதாக கூறுகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள Ofakim என்ற நகரில் சில யூதர்களை ஹமாஸ் பணயம் வைத்துள்ளதாக Reshet 13 என்ற இஸ்ரேல் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களை விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. […]

ரம்பின் சுவரை வெறுத்த பைடெனின் சொந்த சுவர் 

ரம்பின் சுவரை வெறுத்த பைடெனின் சொந்த சுவர் 

முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்கு வருமுன் செய்த பரப்புரைகளில் ஒன்று “Build That Wall”. அதாவது ரம்ப் அமெரிக்க-Mexico எல்லை முழுவதும் எல்லை சுவர் கட்டி அகதிகள் அமெரிக்காவுள் நுழைவதை தடுக்க விரும்பினார். அக்காலத்தில் ரம்பின் திட்டத்தை நிராகரித்து பரப்புரை செய்திருந்தார் Democratic கட்சி சார்பில் போட்டியிட்ட பைடென். எல்லை சுவர் மனிதாபிமானம் அற்றது என்று கூறியிருந்தார். சனாதிபதி பதவியை வென்ற உடனேயும் பைடென் அமெரிக்க வரிப்பணத்தில் எல்லை சுவர் கட்ட முடியாது என்று ஒரு proclamation செய்திருந்தார். ஆனால் இன்று வியாழன் அகதிகள் நுழைவதை தடுக்க […]

சிங்கப்பூரில் கார் பதிவுக்கு U$106,000

சிங்கப்பூரில் கார் பதிவுக்கு U$106,000

சிங்கப்பூரில் ஒருவர் கார் போன்ற குடும்ப வாகனம் ஒன்றை பதிவு செய்ய தற்போது சுமார் U$106,000 தேவைப்படுகிறது. இந்த செலவு வாகனத்தை வீதியில் செலுத்த உரிமை கொள்வதற்கான செலவு மட்டுமே. மிக சிறிய நாடான சிங்கப்பூர் அங்கு வாகன நெரிசலை குறைக்க பாவனையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்துகிறது. வாகனம் ஒன்றை கொண்டிருக்கும் உரிமையை (COE, certificate of entitlement) சிலருக்கு மட்டுமே சீட்டிழுப்பு மூலம் வழங்குகிறது. ஒரு CEO 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். சிங்கப்பூரில் ஒருவர் […]

SAS விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது

SAS விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது

SAS என்று பொதுவாக அழைக்கப்படும் Scandinavian Airlines System Denmark-Norway-Sweden விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1946ம் ஆண்டு ஆரம்பித்த இந்த விமான சேவை பல காரணங்களால் அழிந்துள்ளது. தனது செலவுகளை கட்டுப்படுத்தாமை, கரோனா நோயின் பரவல், யுக்கிறேன் யுத்தத்தால் ரஷ்யா மேலால் பறந்து ஆசியாவை அடைய முடியாமை ஆகியன இதன் அழிவுக்கான சில காரணங்கள் ஆகும். 2020ம் ஆண்டில் இதனிடம் 160 விமானங்கள் வரை இருந்துள்ளன. 2018ம் ஆண்டில் இது 2,041 மில்லியன் krona இலாபம் அடைந்திருந்தது.  ஆனால் 2020ம் ஆண்டு […]

தமிழ் மொழியில் அல்லல்படும் ChatGPT

தமிழ் மொழியில் அல்லல்படும் ChatGPT

ChatGPT புதியதொரு AI (Artificial Intelligence) தொழில்நுட்பம். இது ஆங்கிலம் போன்ற பிரதான மொழிகளில் ஓரளவு தரமான ஆக்கங்களை உருவாக்கினாலும், தமிழ் போன்ற சில மொழிகளில் அல்லல்படுகிறது. தமிழ் மொழியில் உள்ள சிக்கலான அங்கங்களும் நிலைமையை மேலும் குழப்பியடிக்கின்றன. பெயர் சொற்களில் உள்ள பால் அடையாளம் (வந்தான், வந்தாள், வந்தது), ஒருமை, பன்மை (வந்தார்கள், வந்தன) மட்டுமன்றி ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய உருபுகளும்  கூடவே ChatGPT யை குழப்புகின்றன. அவரால், அவரோடு ஆகிய பாதங்களை ChatGPT இலகுவில் அறிய முடியாது உள்ளது. இப்படி […]

41 கனேடிய தூதரக நபர்களை வெளியேற இந்தியா அறிவிப்பு

41 கனேடிய தூதரக நபர்களை வெளியேற இந்தியா அறிவிப்பு

இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் 41 பேரை கனடாவுக்கு மீண்டும் திரும்ப இந்தியா கட்டளை இட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த 41 பேரும் அக்டோபர் 10ம் திகதிக்கு முன் வெளியேற வேண்டும் என்றும், தவறின் அவர்களின் diplomatic immunity பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 62 கனேடிய தூதரக ஊழியர்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 41 பேர் வெளியேறினால் 21 பேரே தொடர்ந்தும் இந்தியாவில் பணியாற்றுவார். அத்தொகை சாதாரண பணிகளுக்கு போதுமானது அல்ல. The Financial Times […]

யுக்கிறேனுக்கான மேற்கின் ஆதரவு ஆட்டம் காண்கிறது

யுக்கிறேனுக்கான மேற்கின் ஆதரவு ஆட்டம் காண்கிறது

யுக்கிறேனை ரஷ்யாவுடன் மோத முன்னின்று ஆதரித்த மேற்கின் ஆதரவு மெல்ல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்நிலை மேலும் உக்கிரம் ஆகினால் யுக்கிறேன் யுத்தத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படலாம். இதுவரை அமெரிக்காவே யுக்கிறேனுக்கு முதலாவது பெரிய அளவில் உதவிகளை செய்து வந்தது. ஆயுதம், பணம், இராணுவ பயிற்சி, உளவு ஆகிய பல முனைகளில் அமெரிக்கா உதவியது. ஆனால் ஞாயிறு இரவு முதல் அந்த உதவி கேள்விக்குறி ஆகியுள்ளது. சில அமெரிக்க அரசியல்வாதிகள், குறிப்பாக Republican கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் யுக்கிறேனுக்கான உதவியை நிறுத்த […]

இந்தோனேசியாவில் 350 km/h வேக ரயில் சேவை

இந்தோனேசியாவில் 350 km/h வேக ரயில் சேவை

அக்டோபர் 1ம் திகதி முதல் மணித்தியாலத்துக்கு 350 km வேகத்தில் பயணிக்கக்கூடிய (350 km/h) ரயில் ஒன்று சேவைக்கு வந்துள்ளது. தற்போது தென் ஆசியாவில் இதுவே அதிவேக ரயில் சேவையாகும். இந்த ரயில் தலைநகர் Jakarta வுக்கும் Bandung என்ற இன்னோர் நகருக்கும் இடையில் சேவை செய்யும். தற்போது சாதாரண ரயில் மூலம் இந்த தூரத்தை கடக்க 3 மணித்தியாலங்களுக்கு அதிகம் எடுக்கும். ஆனால் புதிய ரயில் 30 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தையே எடுக்கும். சாதாரண ரயில் இந்த தூரத்துக்கு சுமார் […]

மாலைதீவில் மீண்டும் சீன ஆதரவு சனாதிபதி 

மாலைதீவில் மீண்டும் சீன ஆதரவு சனாதிபதி 

மாலைதீவில் சனிக்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் மீண்டும் சீன ஆதரவு கொண்ட சனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீன சார்பு Mohamed Muizzu 54.06% வாக்குகளை பெற்று தேர்தலில் வென்றுள்ளார். தற்போதைய இந்திய சார்பு சனாதிபதி Ibrahim Mohamed Solih தேர்தலில் வெற்றி பெற்ற Muizzu வை வாழ்த்தியுள்ளார். புதிய சனாதிபதி வரும் நவம்பர் 7ம் திகதி முதல் பதவியை கையேற்பார். அதன் பின் மாலைதீவு மீண்டும் சீனாவின் ஆளுமையில் இருக்கும். தற்போது அங்கு நிலைகொண்டுள்ள இந்திய படைகள் வெளியேற்றப்படலாம். 2018ம் ஆண்டுவரை மாலைதீவில் ஆட்சி செய்த சீன […]

1 48 49 50 51 52 340