உலக செல்வந்தர்களிடம் இருந்து $250 பில்லியன் வரி?

உலக செல்வந்தர்களிடம் இருந்து $250 பில்லியன் வரி?

உலகில் சுமார் 2,700 billionaires உள்ளதாகவும் அவர்களிடம் மொத்தம் $13 டிரில்லியன் ($13,000 பில்லியன்) சொத்துக்கள் உள்ளதாகவும் அவர்கள் குறைந்த அளவு வரியாவது செலுத்தினால் உலக நாடுகள் ஆண்டுக்கு $250 வரிப்பணம் பெறும் என்று கூறுகிறது EU Tax Observatory என்ற ஆய்வு அமைப்பு. 2024 Global Tax Evasion Report என்ற ஆய்வு அறிக்கை தற்போது இந்த உச்ச நிலை செல்வந்தர் ஏறக்குறைய எந்த வரியையும் செலுத்துவதில்லை என்கிறது. இவர்கள் தாம் அல்லது தமது நிறுவனம் அடையும் […]

10-ஆண்டு அமெரிக்க Treasury கடன் வட்டி 5.004% ஆகியது

10-ஆண்டு அமெரிக்க Treasury கடன் வட்டி 5.004% ஆகியது

அமெரிக்க அரசு தனது முதலீடுகளுக்கு Treasury bills (மிக குறுகிய கால கடன்), Treasury notes (குறுகிய கால கடன், சுமார் 10 ஆண்டுகள்), Treasury bond (நீண்ட கால கடன், சுமார் 30 ஆண்டுகள்), TIPS ஆகிய 4 முறைகளில் கடன் பெறுகிறது. உலகிலேயே இந்த கடன் மிகவும் நம்பிக்கையானது என்று கருதப்படுவதால் யுத்த காலம் போன்ற ஆபத்தான காலங்களில் அமெரிக்க Treasury கடனை பெறுவார். இந்த கடன்களின் முதலும், வட்டியும் பத்திரமாக கிடைக்கும் என்ற […]

மேற்கில் இஸ்ரேல் ஆதரவு சர்வாதிகாரம்?

மேற்கில் இஸ்ரேல் ஆதரவு சர்வாதிகாரம்?

வடகொரியாவின் அதிபர் Kim Jong Un க்கு எதிராக அங்கு ஒருவர் பேசினால் அவர் அங்கு அழிவார். ரஷ்யாவில் ஒருவர் பூட்டினுக்கு எதிராக பேசினால் அவர் அங்கு அழிவர். சீனாவில் ஒருவர் சீக்கு எதிராக பேசினால் அவர் அழிவர். அதனால் இந்த நாடுகளை எல்லாம் சர்வாதிகளின் நாடுகள் என்று கூறுகின்றன மேற்கு நாடுகள். ஆனால் இந்த மேற்கு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக ஒருவர் பேசினால் அவர் அழிவர் என்று ஒரு விமசகர் அண்மையில் கூறி மேற்கின் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இந்த உண்மைக்கு […]

கையாலாகாதவரின் Cairo Peace Summit பயனற்று முடிந்தது 

கையாலாகாதவரின் Cairo Peace Summit பயனற்று முடிந்தது 

உலகின் பல தலைவர்கள், பிரதான அதிகாரிகள் இன்று சனிக்கிழமை Cairo Summit for Peace என்ற தலைப்பில் காசா வன்முறைகளுக்கு தீர்வு காண எகிப்தின் தலைநகர் கைரோவில் கூடினர். ஆனால் இவர்களின் பெரும் அமர்வு தீர்வு எதுவும் இன்றி பயனற்று முடிந்துள்ளது. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், கட்டார், குவைத், துருக்கி, ஈராக், இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம், சைப்பிரஸ், தென் ஆபிரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், ஜப்பான், பிரித்தானியா, நோர்வே, ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகள் இந்த அமர்வில் கூடி […]

எரிக்காத உடல்களுக்கு சாம்பல், 189 உடல்கள் நாறின

எரிக்காத உடல்களுக்கு சாம்பல், 189 உடல்கள் நாறின

அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் உள்ள Colorado Spring என்ற இடத்தில் உள்ள Return to Nature என்ற மயான அலுவல்கள் நிறுவனத்தில் அரச அதிகாரிகள் 189 உடல்களை கைப்பற்றி உள்ளனர். அனால் அந்த உடல்களை தாம் எரித்து விட்டதாக கூறி மேற்படி நிறுவனம் மரணித்தோரின் சொந்தங்களுக்கு பொய் சாம்பலும், சான்றிதழும் ஏற்கனவே வழங்கியுள்ளது. அதிகாரிகள் மேற்படி நிலையத்துக்கு சென்றபோது அங்கிருந்த உடல்கள் சிதைவடைந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையத்தின் உரிமையாளர்களான Jon Halford, Carie Halford ஆகியோர் மீது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த […]

இலங்கை இறக்குமதியை அதிகரிக்க சீ இணக்கம்

இலங்கை இறக்குமதியை அதிகரிக்க சீ இணக்கம்

இலங்கையில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியை அதிகரிக்க சீனாவின் சனாதிபதி சீ இன்று வெள்ளி இணங்கி உள்ளார். இலங்கை சனாதிபதி ரணில் உடனான சந்திப்பின் பின்னரே சீ இந்த அறிவிப்பை செய்துள்ளார். அத்துடன் சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதையும் ஊக்குவிக்க உள்ளதாக சீ கூறியுள்ளார். ஆனால் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிய பின் குறைந்தது முட்டையையாவது  உற்பத்தி செய்ய முடியாது அதையும் இறக்குமதி செய்யும் இலங்கை எதை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும்? அது மட்டுமன்றி IMF அடுத்த தொகுதி கடனை இலங்கைக்கு வழங்க முன் […]

ரஷ்ய எண்ணெய்க்கு சீன பணம் செலுத்த இந்தியா மறுப்பு

ரஷ்ய எண்ணெய்க்கு சீன பணம் செலுத்த இந்தியா மறுப்பு

மேற்கு நாடுகள் யுக்கிறேன் ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யா மீது தடை விதித்த பின் ரஷ்யாவின் எரிபொருள் விலை வீழ்ச்சி அடைந்தது. அந்த மலிந்த எரிபொருளை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்தியா இந்திய ரூபாய் மூலம் ரஷ்ய எரிபொருளுக்கான பணத்தை செலுத்தி இருந்தாலும் தற்போது ரஷ்யா இந்திய ரூபாய்களை ஏற்க மறுக்கின்றது. ஏற்கனவே தம்மிடம் தேங்கி உள்ள இந்திய ரூபாய்களை பயன்படுத்தி ரஷ்யாவால் எதையும் கொள்வனவு செய்ய முடியாது உள்ளது. அதேவேளை மேற்கின் தடை காரணமாக ரஷ்யாவுக்கான அனைத்து […]

41 கனடிய தூதரக ஊழியர் இந்தியாவை நீங்கினர்

41 கனடிய தூதரக ஊழியர் இந்தியாவை நீங்கினர்

இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய 41 கனடிய தூதரக ஊழியர்கள் வியாழன் இரகசியமாக இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்கள் எந்த நாட்டுக்கு சென்றார்கள் என்பது கூறப்படவில்லை. மேலதிக கனடிய அதிகாரிகளை அக்டோபர் 10ம் திகதிக்கு முன் வெளியேற்றுமாறு இந்தியா கூறி இருந்தாலும், கனடா இதுவரை அதை கவனத்தில் எடுக்காது இருந்தது. ஜூன் 19ம் திகதி Hardeep Singh Nijjar என்ற சீக்கிய தீவிரவாதி கனடாவின் கொலம்பியா மாநிலத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டதில் இந்தியாவின் கை உள்ளது என்று ரூடோ கூறியதால் விசனம் […]

அமெரிக்க Republican கட்சிக்குள்ளும் ஒரு யுத்தம்

அமெரிக்க Republican கட்சிக்குள்ளும் ஒரு யுத்தம்

அமெரிக்காவில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன. ஒன்று றேகன், புஷ், ரம்ப ஆகியோரின் Republican கட்சி, மற்றையது கிளின்டன், ஒபாமா, பைடென் போன்றோரின் Democratic கட்சி. பொதுவாக இஸ்ரேலுக்கு நிபந்தனை எதுவும் இன்றி, கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவது Republican கட்சி. ஆனால் அது தற்போதைய ஹமாஸ்-இஸ்ரேல் சண்டையில் கதை எதுவுமின்றி ஒதுங்கி உள்ளது. அதற்கு காரணம் தற்போது Republican கட்சிக்கு உள்ளே பெரும் யுத்தம் ஒன்று நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் Republican கட்சி அமெரிக்க காங்கிரசின் ஒரு அங்கமான […]

1 46 47 48 49 50 340