காசா மானிட பேரழிவை நிறுத்த ஐ.நா. செயலாளர் அழைப்பு

காசா மானிட பேரழிவை நிறுத்த ஐ.நா. செயலாளர் அழைப்பு

காசாவில் இடம்பெறும் மானிட பேரழிவை (humanitarian catastrophe) நிறுத்தும்படி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு (Security Council) எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.நா. செயலாளர் Antonio Guterres. மிக நீண்ட காலம் பயன்படுத்தாத ஐ.நாவின் Article 99 மூலமே செயலாளர் இந்த எச்சரிக்கையை பாதுகாப்பு சபைக்கு விடுத்துள்ளார். மிக குறைந்த அளவிலேயே உணவுகளையும், எரிபொருளை இஸ்ரேல் கசாவுள் அனுமதிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஐ.நா. செயலாளர். விரைவில் காசாவில் நோய்கள் பரவலாம் என்றும் அந்த நோய்கள் மேலும் பலரை பலியாக்கும் […]

யுத்த விமான பாதுகாப்புடன் சவுதி சென்றார் பூட்டின்

யுத்த விமான பாதுகாப்புடன் சவுதி சென்றார் பூட்டின்

ரஷ்யாவின் நான்கு Sukhoi-35s வகை யுத்த விமானங்கள் பாதுகாப்பு வழங்க Ilyushin-96 வகை விமானம் ஒன்றில் ரஷ்ய சனாதிபதி சவுதி சென்றுள்ளார்.  யூக்கிறேன் ஆக்கிரமிப்புக்கு பின் பூட்டின் வெளிநாடுகளுக்கு செல்வதை  தவிர்த்து வந்துள்ளார். பூட்டின் சவுதி இளவரசர் Mohammed bin Salman உடன் பேச்சுவார்த்தைகள் செய்வார். குறிப்பாக எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதே இருவரின் பிரதான நோக்கமாகும். சவுதி செல்லும் வழியில் பூட்டின் முதலில் UAE சென்று இருந்தார். அங்கு பூட்டின் அபுதாபி  சனாதிபதியுடன் உரையாடி இருந்தார். கடந்த […]

இஸ்ரேல்: ஒரு ஹமாசுக்கு 2 பலஸ்தீனர் பலியாதல் நியாயம் 

இஸ்ரேல்: ஒரு ஹமாசுக்கு 2 பலஸ்தீனர் பலியாதல் நியாயம் 

இதுவரை சுமார் 15,000 பலஸ்தீனர் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இத்தொகையில் இறந்த ஹமாஸ் குழுவினரும் அடங்குவாரா என்று பிரித்து கூறப்படவில்லை. இஸ்ரேல் பலஸ்தீனர் பக்கத்தில் எத்தனைபேர் பலியாகினர் என்று இதுவரை கூறாவிட்டாலும் மேற்படி தொகையில் 5,000 பேர் ஹமாஸ் உறுப்பினராக இருக்கும் என்றும் மரணித்த பலஸ்தீனர் பொதுமக்கள் தொகை 10,000 ஆக இருக்கும் என்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார் Jonathan Conricus என்ற இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர். இவ்வாறு 1 […]

யூக்கிரேனுக்கான அமெரிக்க உதவி விரைவில் அற்று போகும்?

யூக்கிரேனுக்கான அமெரிக்க உதவி விரைவில் அற்று போகும்?

யூக்கிரேனுக்கான அமெரிக்காவின் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் டிசம்பர் மாதத்திற்கு பின் அற்று போகும் அபாயம் உள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்க காங்கிரசுக்கு இன்று திங்கள் ஆனுப்பிய அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யூக்கிரேன், இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு உதவ சனாதிபதி பைடென் $106 பில்லியன் வழங்குமாறு அமெரிக்க காங்கிரசை கேட்டிருந்தார். ஆனால் அதற்கு காங்கிரசில் போதிய ஆதரவு இருக்கவில்லை. பதிலுக்கு காங்கிரசின் அங்கமான Senate இஸ்ரேலுக்கு மட்டும் உதவி வழங்க முன்வந்தது. அதை […]

தனது படைகளை மாலைதீவிருந்து பின்வாங்குகிறது இந்தியா

தனது படைகளை மாலைதீவிருந்து பின்வாங்குகிறது இந்தியா

மாலைதீவில் இருந்து தனது படைகளை பின்வாங்க இந்தியா இணங்கி உள்ளது என்று மாலைதீவின் சனாதிபதி Mohamed Muizzu இன்று ஞாயிறு கூறியுள்ளார். COP28 மாநாட்டின் அமர்வுக்கு சென்ற Muizzu அங்கு வந்திருந்த இந்திய பிரதமர் மோதியுடன் உரையாடிய பின்னரே மேற்படி தீர்மானத்தை பகிரங்கம் செய்துள்ளார். ஆனால் மோதி இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவித்து இருக்கவில்லை. மாலைதீவில் நிலை கொண்டுள்ளது சுமார் 77 இந்திய இராணுவம் மட்டுமே என்றாலும், அவை வெளியேற இருப்பது மாலைதீவில் இந்தியாவின் ஆளுமை நீங்கி மீண்டும் சீன […]

வாழ்க்கை செலவில் சிங்கப்பூர் முதலாம் இடத்தில்

வாழ்க்கை செலவில் சிங்கப்பூர் முதலாம் இடத்தில்

உலக அளவில் வாழ்க்கை செலவு மிக அதிகமான நகராக சிங்கப்பூராக மீண்டும் அறியப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 9 தடவைகள் சிங்கப்பூர் வாழ்க்கை செலவில் முதலாம் இடத்தில் இருந்துள்ளது. மேற்படி ஆய்வை Economist Intelligence Unit (EIU) என்ற ஆய்வு அமைப்பு 173 நாடுகளில் உள்ள நகரங்களை உள்ளடக்கி செய்து உள்ளது. இந்த ஆண்டு சிங்கப்பூர் சுவிஸ் நாட்டின் சூரிச் நகருடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரம் 3ம் இடத்தில் உள்ளது. ஹாங்காங் […]

அமெரிக்க சீக்கியர் கொலைக்கு இந்தியா $100,000

அமெரிக்க சீக்கியர் கொலைக்கு இந்தியா $100,000

அமெரிக்க-கனேடிய இரட்டை குடியுரிமை கொண்ட சீக்கியரான Gurpatwant Singh Pannun என்பவரை படுகொலை செய்ய Nikhil Gupta என்ற இந்திய அதிகாரி $100,000 கூலிப்பணம் வழங்க முன் வந்தமை நியூ யார்க் நீதிமன்ற வழக்கில் ஆதாரமாக பதியப்பட்டுள்ளது. இந்திய அதிகாரியான Nikhil Gupta, வயது 52, விடம் இருந்து பணம் பெற்று கூலி கொலையை செய்ய முன்வந்தவர் ஒரு அமெரிக்க undercover FBI போலீஸ் அதிகாரி என்பது Gupta வுக்கு தெரியாது. Nikhil Gupta தற்போது Czech […]

விடுதலையாகும் 80% பலஸ்தீனர் குற்றச்சாட்டு அற்றவர்கள்

விடுதலையாகும் 80% பலஸ்தீனர் குற்றச்சாட்டு அற்றவர்கள்

வழமையாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதரவு கொண்டவை. இஸ்ரேலுடன் மோதும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுத குழுக்களை terrorist என்று கூறும் இந்த செய்தி நிறுவனங்கள் Free Syrian Army, PKK போன்ற மேற்கின் ஆதரவில் இயங்கும் ஆயுத குழுக்களை terrorist என்று அழைப்பதில்லை. தற்காலங்களில் இணையம் செய்தி நிறுவனங்களுக்கு அப்பால் உண்மைகளை பகிரங்கம் செய்வதால் அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உண்மைகளை கூற தள்ளப்பட்டுள்ளன. வழமையாக இஸ்ரேல் பக்கம் சாய்த்து செய்திகளை வெளியிடும் CNN […]

சீனாவின் 3ம் விமானம் தாங்கி கடல் பரிசோதனையில்

சீனாவின் 3ம் விமானம் தாங்கி கடல் பரிசோதனையில்

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான 316 மீட்டர் நீளம் கொண்ட Fujian கடல் பரிசோதனையில் இறங்கி உள்ளது என்று செய்மதி படங்கள் கூறுகின்றன.  இந்த கப்பல் கட்டும் துறையில் இருந்து நவம்பர் 19ம் திகதி 27 மீட்டர் கடலுள் சென்று, இரண்டு தினங்களின் பின் கட்டும் துறைக்கு வந்துள்ளதை European Space Agency யின் Sentinel-2 என்ற செய்மதி படம் பிடித்துள்ளது. முற்றாக சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல் காந்தப்புலம் (electromagnetic catapults) […]

அமெரிக்காவில் வலு பெறும் 3ம் கட்சி No Labels

அமெரிக்காவில் வலு பெறும் 3ம் கட்சி No Labels

நீண்ட காலமாக அமெரிக்காவை Democratic கட்சியும், Republican கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. ஒரு முறை தண்டிக்கப்படும் கட்சி அதை மறந்து மறுமுறை ஆட்சியில் அமர்த்தப்படும். ஆனால் தற்போது சில அமெரிக்கர் இந்த இரண்டு கட்சிகளிலும் வெறுப்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் 3ம் கட்சி ஒன்று தலைதூக்க முனைகிறது. Democratic, Republican ஆகிய இரண்டு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்களே ஒன்றாக இணைந்து No Labels கட்சியை ஆரம்பிக்கின்றனர். சுமார் 80% அமெரிக்கர் Democratic கட்சியின் […]

1 41 42 43 44 45 340