ஏவுகணை தாக்கி ரஷ்ய விமானம் விழுந்தது, 74 பேர் பலி

ஏவுகணை தாக்கி ரஷ்ய விமானம் விழுந்தது, 74 பேர் பலி

ரஷ்ய படைகளின் Ilyushin Il-76 வகை விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 74 பேரும் பலியாகி உள்ளனர். தாம் கைப்பற்றிய 65 யூக்கிறேன் படையினரை கைதிகள் பரிமாற்றத்துக்கு எடுத்து வந்த விமானத்தை யூக்கிறேன் ஏவுகணை கொண்டு தாக்கி அழித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அந்த விமானம் S-300 ஏவுகணைகளை எடுத்து வந்ததாலேயே தாம் அதை தாக்கியதாக யூக்கிறேன் முதலில் கூறியிருந்தது. பின்னர் கைதிகளை ரஷ்யா அந்த விமானத்தில் எடுத்து […]

இலங்கையில் Fresh Orange Juice Rs. 6,075.00

இலங்கையில் Fresh Orange Juice Rs. 6,075.00

இலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள Cinnamon BEY என்ற உல்லாச பயணிகள் விடுதி ஒன்று orange juice க்கு  மொத்தம் Rs. 6,075.00 அறவிட்டு உள்ளது. Orange juice Rs. 4,565.00 என்றும், சேவை கட்டணம் 456.50 என்றும், அரச வரி 1,055.80 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதன் விலை சுமார் $19.00 ஆகையால் இதுவே உலகின் அதி கூடிய விலை கொண்ட orange juice ஆக இருக்கும். இந்த கொள்வனவு விபரம் இணையம் எங்கும் பேசப்படுகிறது. […]

ஒரு காசா தாக்குதலில் 21 இஸ்ரேல் படையினர் பலி

ஒரு காசா தாக்குதலில் 21 இஸ்ரேல் படையினர் பலி

காசாவின் Khan Younis என்ற தெற்கு பகுதியில் ஹமாஸ் இன்று திங்கள் செய்த தாக்குதல் ஒன்றுக்கு 21 இஸ்ரேல் படையினர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் ஆயுத குழுவினர் இஸ்ரேலின் கவச வாகனம் ஒன்று மீது ஏவிய RPG தாக்குதலுக்கே 21 படையினர் பலியாகினர். இஸ்ரேல் படையினர் பதித்த வெடி பொருட்களும் கூடவே வெடித்து தாக்குதலை உக்கிரம் அடைய செய்துள்ளது என்று இஸ்ரேல் கூறுகிறது. இன்று மேலும் 3 இஸ்ரேலின் படையினர் வேறு தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். அதனால் இதுவரை […]

DeSantis விலகினார், ரம்ப் கை மேலும் வலுக்கிறது

DeSantis விலகினார், ரம்ப் கை மேலும் வலுக்கிறது

Florida மாநில ஆளுநர் Ron DeSantis தான் 2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி போட்டியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். Republican கட்சியின் சார்பில் போட்டியிட தேவையான உட்கட்சி ஆதரவு இன்மையாலேயே அவர் விலகி உள்ளார். அத்துடன் DeSantis தனது ஆதரவை முன்னாள் சனாதிபதி ரம்புக்கு வழங்கி உள்ளார். அதனால் ரம்பின் கை மேலும் வலு அடைந்துள்ளது. உட்கட்சி தேர்தலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ள Nikki Haley மிக குறைந்த அளவு ஆதரவையே கொண்டுள்ளார். ரம்ப் உட்கட்சி தேர்தலில் […]

இஸ்ரேல் அரசில் பிளவு, ஹமாசை அழிப்பது கடினம்

இஸ்ரேல் அரசில் பிளவு, ஹமாசை அழிப்பது கடினம்

கடந்த 100 தினங்களுக்கு மேலாக அமெரிக்கா வழங்கும் அதிநவீன ஆயுதங்களை காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தினாலும் இஸ்ரேல் எதிர்பார்த்த அளவுக்கு ஹமாசை அழிக்க முடியவில்லை. இதனால் இஸ்ரேல் அரசில் பிளவு ஏற்படுகிறது. காசா யுத்தத்துக்கு பொறுப்பான அமைச்சர்களில் ஒருவரான Gadi Eisenkot ஹமாசை முற்றாக அழிக்க முடியாது என்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு ஹமாசை முற்றாக அழிக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கூறியதன் பின்னரே Gadi Eisenkot தனது மறுப்பு கருத்தை தெரிவித்து பிளவை பகிரங்கம்  செய்துள்ளார். […]

இந்தியாவில் இருந்து இந்திய கனடியருக்கு பண மிரட்டல் 

இந்தியாவில் இருந்து இந்திய கனடியருக்கு பண மிரட்டல் 

கனடாவின் எட்மன்டன் பகுதியில் வீடு கட்டும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இந்தியாவில் இருந்து பண மிரட்டல்கள் வருவதாகவும், அடிபணியாதோர் மீது தீ வைப்பு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் Dave Paton என்ற Edmonton Police அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு மிரட்டல்களுக்கு உள்ளானோரை தம்முடன் தொடர்புகொண்டு விபரங்களை வழங்குமாறும் எட்மன்டன் போலீசார் கேட்டுள்ளனர். தற்போது 5 பண மிரட்டல், 15 தீவைப்பு, 7 துப்பாக்கி மூல வன்முறைகள் ஆகியன எட்மன்டன் போலீசால் விசாரணை செய்யப்படுகின்றன. அத்துடன் […]

சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைது, இலஞ்சம் காரணம்

சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைது, இலஞ்சம் காரணம்

சிங்கப்பூர் அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் இலஞ்ச குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது 27 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர் மொத்தம் $160,000 பெறுமதியான விமான பயணம், விடுதி, Grand Prix formula 1 அனுமதி ஆகியவற்றை இலவசமாக Ong Beng Seng என்ற வர்த்தகரிடம் இருந்து பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அதேவேளை தனது அமைச்சர் பதவியையும் விட்டு நேற்று வியாழன் விலகியுள்ளார்.  […]

ஈரானுள் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்

ஈரானுள் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான் உள்ளே நிலைகொண்டிருந்த Jaish al-Adi என்ற ஆயுத குழு மீது ஈரான் செவ்வாய் ஏவுகணை தாக்குதலை செய்ததை தொடர்ந்து பாகிஸ்தான் இன்று வியாழன் ஈரானில் நிலைகொண்டுள்ள Baluch Liberation Army என்ற ஆயுத குழு மீது ஏவுகணை தாக்குதல் செய்துள்ளது. ஈரான் தனது தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்று கூறியதை போலவே பாகிஸ்தானும் தனது தாக்குதல் ஈரானுக்கு எதிரானது அல்ல என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள […]

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான்-பாகிஸ்தான் எல்லையோரம் பாகிஸ்தான் உள்ளே இருந்த Jaish al-Adi என்ற ஆயுத குழு மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை செய்துள்ளது.  சுனி இஸ்லாமிய ஆயுத குழுவான Jaish al-Adi சியா இஸ்லாமிய ஈரானில் பல தாக்குதல்களை செய்திருந்தது. ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நலமான தொடர்பாடல் உண்டு. இந்நிலையில் ஈரான் பாகிஸ்தான் உள்ளே பாகிஸ்தானுக்கு முன்னறிவித்தல் வழங்காது தாக்குதல் செய்வது எதிர்பார்க்காத ஒன்று. அறிவிப்பு இன்றி செய்யப்பட்ட இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

போட்டியில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி

போட்டியில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி

இந்த ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முயற்சிகளை கைவிட்டார் விவேக் ராமசாமி. Republican கட்சி சார்பில் போட்டியிட தான் தெரிவு செய்யப்படமாட்டார் என்பதை அறிந்தே இவர் போட்டியில் இருந்து விலகினார். திங்கள் அயோவா மாநிலத்தில் இடம்பெற்ற உட்கட்சி தேர்தலில் இவர் 4ம் இடத்தை அடைந்திருந்தார். அங்கு இவருக்கு 7.1% வாக்குகளே கிடைத்தன. போட்டியில் இருந்து வெளியேறிய விவேக் 51.3% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ள ரம்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தான் சனாதிபதி ஆக […]

1 36 37 38 39 40 340