Golan ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலி 

Golan ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலி 

Golan Heights பகுதியில் உள்ள Majdal Shams நகர் விளையாட்டு மைதானம் ஒன்றில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலியாகி உள்ளனர். பலியானோர் 10 முதல் 20 வயதினர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு மேலும் 20 பேர் காயமடைந்தும் உள்ளனர். சிரியாவுக்கு சொந்தமான Golan Heights பகுதியை இஸ்ரேல் 1967ம் ஆண்டு யுத்தத்தில் கைப்பற்றி இருந்தது. கடந்த அக்டோபர் 7ம் திகதிக்கு பின் இஸ்ரேலின் வடக்கு எல்லையோரம் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவே […]

அலாஸ்காவில் சீன, ரஷ்ய படைகள் கூட்டு பயிற்சி

அலாஸ்காவில் சீன, ரஷ்ய படைகள் கூட்டு பயிற்சி

வரலாற்றில் முதல் தடவையாக ரஷ்யாவின் TU-95 குண்டுவீச்சு விமானங்களும், சீனாவின் Xian H-6 குண்டுவீச்சு விமானங்களும் அமெரிக்காவின் அலாஸ்கா (Alaska) மாநிலத்தின் அருகே  யுத்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த புதன் இடம்பெற்ற இந்த பயிற்சியில் இரண்டு TU-95 களும், இரண்டு H-6 களும் பங்கெடுத்துள்ளன. இவற்றுக்கு ரஷ்யாவின் Sukhoi Su-30SM, Su-35s யுத்த விமானங்கள் பாதுகாப்பு வழங்கின. சீனாவின் H-6 விமானங்கள் ரஷ்யாவின் விமானப்படை தளம் ஒன்றில் இருந்தே பயணத்தை ஆரம்பித்துள்ளன. இவற்றை நோட்டம் விட அமெரிக்காவின் […]

மேற்கின் பெருமளவு அறிவை வட கொரியா திருடியது 

மேற்கின் பெருமளவு அறிவை வட கொரியா திருடியது 

பெருமளவு மேற்கு நாடுகளின் அறிவை வட கொரியா இணையம் மூலம் திருடி உள்ளது என்று வியாழன் அமெரிக்கா, பிரித்தானியா, தென் கொரியா தமது கூட்டறிக்கை ஒன்றில் கூறியுள்ளன. இந்த தாக்குதலுக்கு APT45 என்று பெயரிடப்பட்டுள்ளது. இராணுவ tanks, நீர்மூழ்கிகள், யுத்த கப்பல்கள், யுத்த விமானங்கள், ஏவுகணைகள், ரேடார் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் இரகசியங்கள், தரவுகள் திருடப்பட்டுள்ளன. அத்துடன் FBI, நாசா, Justice Department, Texas மாநில Randolph விமானப்படை தளம், Georgia மாநில Robins விமானப்படை தளம் […]

அமெரிக்காவை கைவிட்டு சீனா திரும்பும் விஞ்ஞானிகள்

அமெரிக்காவை கைவிட்டு சீனா திரும்பும் விஞ்ஞானிகள்

அமெரிக்க அரசு, குறிப்பாக ரம்பின் 2016 முதல் 2020 வரையான ஆட்சியும் பின் வந்த பைடென் ஆட்சியும் சீன அமெரிக்கர்களை சந்தேகத்துடன் வேவுபார்த்து, விசாரணை செய்து துன்புறுத்தியதால் அவர்களில் பலர் மீண்டும் சீனா சென்றுள்ளனர். இவ்வாறு சீனா திரும்பும் சீன விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் 75% ஆல் அதிகரித்து உள்ளது என்று அமெரிக்க Stanford ஆய்வுகள் அறிந்துள்ளன. 2010ம் ஆண்டு 900 சீன விஞ்ஞானிகளே சீனா திரும்பி உள்ளனர், ஆனால் 2021ம் ஆண்டு 2,621 சீன விஞ்ஞானிகள் […]

எதிர்ப்புகளுக்கு மத்தியில் Netanyahu காங்கிரசில் உரையாற்றுவார் 

எதிர்ப்புகளுக்கு மத்தியில் Netanyahu காங்கிரசில் உரையாற்றுவார் 

இஸ்ரேல் பிரதமர் நெற்றன்யாஹு (Netanyahu) பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க காங்கிரசில் இன்று புதன் உரையாற்றவுள்ளார். International Criminal Court (ICC) இவரை காசா யுத்த war crime குற்ற விசாரணைக்கு கைது செய்ய விண்ணப்பித்த வேளையிலேயே இவர் காங்கிரசில் உரையாற்றவுள்ளார். காங்கிரசுக்கு உள்ளே இவரின் உரையை சுமார் 80 Democratic கட்சி House உறுப்பினர்களும், 6 Democratic கட்சி செனட்டர்களும் நெற்றன்யாஹுவின் உரையை பகிஷ்கரிக்கவுள்ளனர். செவ்வாய்க்கிழமை 200 அமெரிக்க யூதர்கள் நெற்றன்யாஹு எதிர்ப்பை Capitol கட்டிடத்தின் […]

பலஸ்தீன குழுக்கள் ஒற்றுமைக்கு பெய்ஜிங்கில் இணக்கம்

பலஸ்தீன குழுக்கள் ஒற்றுமைக்கு பெய்ஜிங்கில் இணக்கம்

சீனாவின் தலைமையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்த பலஸ்தீன குழுக்களான ஹமாஸ், Fatah உட்பட 14  குழுக்கள் இன்று செவ்வாய் தம்மிடையேயான முரண்பாடுகளை தவிர்த்து பலஸ்தீனர் நலன்களுக்காக இயங்க இணங்கியுள்ளனர். இது மத்திய கிழக்கில் சீனாவுக்கு கிடைத்த இரண்டாவது பெரிய வெற்றியாகும். சில மாதங்களுக்கு முன் பரம எதிரிகளாக இருந்த சவுதிக்கும், ஈரானுக்கும் இடையே நலமான உறவை உருவாக்கி அவை தமது தூதரகங்களை ஆரம்பிக்க வைத்தது சீனாவின் முதல் வெற்றியாகும். பலஸ்தீனர் ஒரு தீர்வை பெற அவர்களிடையே ஒற்றுமை […]

பைடென் சனாதிபதி போட்டியை கைவிட்டார்

பைடென் சனாதிபதி போட்டியை கைவிட்டார்

அமெரிக்க சனாதிபதி பைடென் நவம்பரில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் தனக்கு பதிலாக உதவி சனாதிபதி கமலா ஹாரிசை சனாதிபதி பதவிக்கு போட்டியிட ஆதரவும் வழங்கியுள்ளார். பைடென் இந்த அறிவிப்பை உள்ளூர் நேரப்படி ஞாயிரு பிற்பகல் 1:45 க்கு தெரிவித்துள்ளார். பைடெனுக்கு போட்டியிலிருந்து வெளியேற விருப்பம் இருந்திருக்கவில்லை என்றாலும், மூடிய கதவுக்குள் Democratic கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த இறுதிநேர ஆள்மாற்றம் ரம்பை வெல்ல போதுமானதாக இருக்காது. ஹரிசுடன் இணைந்து போட்டியிட உதவி […]

பங்களாதேசில் மாணவர் ஆர்ப்பாட்டம், 114 பேர் பலி

பங்களாதேசில் மாணவர் ஆர்ப்பாட்டம், 114 பேர் பலி

கடந்த சில கிழமைகளாக பங்களாதேசில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருக்கும் மாணவருக்கும் இடையிலான மோதல்களுக்கு இதுவரை 114 பேர் பலியாகி உள்ளனர். தற்போது பல இடங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த வியாழன் முதல் அரசு இணைய சேவையை நிறுத்தியுள்ளது. கடந்த புதன் முதல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. அரச தொழில்களின் 30% பங்கு 1971ம் ஆண்டு அக்கால கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்கு போராடியோரின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுவதையே மாணவர் எதிர்க்கின்றனர். விடுதலை அடைந்த கிழக்கு […]

நேற்றைய தொழில்நுட்ப இடர் சீனாவை பாதிக்கவில்லை

நேற்றைய தொழில்நுட்ப இடர் சீனாவை பாதிக்கவில்லை

நேற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய Microsoft கணணிகளுக்கான Crowdstrike நிறுவன antivirus update சீனாவை பாதிக்கவில்லை. இது சீனா தன்னை அமெரிக்க தொழில்நுட்பங்களில் இருந்து விடுதலை அடைய செய்து, சொந்த தொழில்நுட்பத்தில் உரப்பானதை காட்டுகிறது.  நேற்று அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா எங்கும் விமான சேவைகள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், வங்கிகள், வர்த்தகங்கள் மேற்படி update இல் இருந்த வழு காரணமாக இயங்க முடியாது முடங்கி இருந்தன. இந்தியாவிலும் டெல்லி, பெங்களூர் விமான நிலையங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு […]

உலகளவில் தொழில்நுட்ப இடர், விமான சேவைகள் நிறுத்தம்

உலகளவில் தொழில்நுட்ப இடர், விமான சேவைகள் நிறுத்தம்

இன்று உலக அளவில் இடம்பெற்ற தொழில்நுட்ப (IT) இடர் காரணமாக பெருமளவில் விமான சேவைகள், வங்கிகள், செய்தி சேவைகள் ஆகியன முடங்கி உள்ளன. அமெரிக்காவில் Delta, United, American ஆகிய விமான சேவைகள் தொலைத்தொடர்பு இடர்பாடுகள் காரணமாக விமானங்களை வெள்ளி காலை தரையில் முடக்கி உள்ளதாக கூறியுள்ளன. Frontier, Allegiant, SunCountry ஆகிய விமான சேவைகளும் முடங்கி உள்ளன. Microsoft நிறுவனத்தின் Azure cloud சேவை மீது நேற்று வியாழன் மாலை செய்யப்பட்ட தாக்குதலேயே மேற்படி சேவைகள் […]

1 17 18 19 20 21 340