பங்களாதேஷ் பிரதமர் பதவி துறந்தார்

பங்களாதேஷ் பிரதமர் பதவி துறந்தார்

பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina அங்கு நிலவும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவி விலகியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர் பிரதமரின் வதிவிடத்துள் நுழைந்த பின் அந்த நாட்டு இராணுவ தலைவர் இந்த அறிவிப்பை செய்துள்ளார். சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி செய்த Hasina, வயது 76, இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரின் காலத்தில் அங்கு பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்தது. அரச தொழில்களின் 30% பங்கு 1971ம் ஆண்டு அக்கால கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்கு போராடியோரின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுவதையே மாணவர் எதிர்க்கின்றனர். […]

லெபனானை நீங்க தம்மவர்க்கு மேற்கு நாடுகள் கட்டளை

லெபனானை நீங்க தம்மவர்க்கு மேற்கு நாடுகள் கட்டளை

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜோர்டான், சுவீடன், இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் தமது நாட்டவரை உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளன. இஸ்ரேலுடனான யுத்தம் வடக்கே லெபனான் பக்கம் திரும்பலாம் என்ற அச்சமே மேற்படி அழைப்புக்கு காரணம். Air France, Lufthansa, Kuwaiti Airlines ஆகிய விமான சேவைகளும் லெபனானுக்கான சேவைகளை இடைநிறுத்தி உள்ளன. இஸ்ரேல் Ismail Haniyeh என்ற ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரை ஈரானின் தலைநகர் தெகிரானில் வைத்து படுகொலை செய்ததே முறுகல் நிலைக்கு […]

இலங்கையில் மீண்டும் பழைய விசா வழங்கல் முறை?

இலங்கையில் மீண்டும் பழைய விசா வழங்கல் முறை?

நேற்று வெள்ளி இலங்கை நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு அமைய இலங்கைக்கான விசா (e-visa) வழங்கல் பணிகளை செய்யும் பொறுப்பு இந்திய நிறுவனமான VFS Global இடம் இருந்து பறித்து மீண்டும் பழைய இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைக்கு ஒரு இடைக்கால தீர்மானம் மட்டுமே. வழக்கு இறுதியில் உறுதியான தீர்ப்பு வழங்கப்படும். VFS மூல விசா வழங்கல் முறைக்கு எதிராக வழக்கு தொடுத்தோர் பகிரங்க கேள்வி மூலம் தகுந்த நிறுவனத்தை தெரிவு செய்யாது VFS Global நிறுவனத்துக்கு […]

பிறப்பு குறைவால் சீனாவில் மூடப்படும் பாடசாலைகள் 

பிறப்பு குறைவால் சீனாவில் மூடப்படும் பாடசாலைகள் 

பிறப்பு வீதம் வேகமாக குறையும் சீனாவில் போதிய சிறுவர்கள் இல்லாமையால் அங்கு பெருமளவு பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதனால் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஒரு பிள்ளைக்கு மேல் குழந்தைகள் பெறுவதை குற்றமாக்கிய சீன அரசு தற்போது பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள அழைத்தாலும் புதிய சந்ததி குழந்தைகளை பெற மறுக்கின்றன. Jiangxi மாநிலத்தில் இந்த ஆண்டு புதிதாக நியமனம் செய்யப்படும் pre-school, primary, secondary ஆசிரியர்களின் எண்ணிக்கை 54.7% ஆல் குறைக்கப்பட உள்ளது. இந்த மாநிலத்தில் […]

அமெரிக்கா, ரஷ்யா மிகப்பெரிய கைதிகள் கைமாற்றம்

அமெரிக்கா, ரஷ்யா மிகப்பெரிய கைதிகள் கைமாற்றம்

அமெரிக்கா, ரஷ்யா இடையே இன்று மிகப்பெரிய கைதிகள் கைமாற்றம் இடம்பெறுகிறது. இந்த இணக்கப்படி மொத்தம் 26 கைதிகள் கைமாற்றம் செய்யப்படுவர். அமெரிக்கா, ஜேர்மனி, போலந்து, Slovenia, நோர்வே, ரஷ்யா, பெலரூஸ் ஆகிய நாடுகளில் உள்ள 26 கைதிகள் தமது நாடுகளிடம் கையளிக்கப்படுவர். இந்த கைதிகளில் Evan Gershkovich, Paul Whelan, Alsu Kurmasheva, Vadim Krasikov ஆகியோரும் அடங்குவர். சில கைதிகள் துருக்கி மூலம் கைமாற்றம் செய்யப்படுவர். ஏற்கனவே ரஷ்யாவின் விமானம் ஒன்று துருக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்மனியில் […]

ஒலிம்பிக் anti-doping அமைப்புள் அமெரிக்க, சீன சண்டை 

ஒலிம்பிக் anti-doping அமைப்புள் அமெரிக்க, சீன சண்டை 

World Anti-Doping Agency (WADA) ஒலிம்பிக் போட்டியாளர் ஊக்க போதையை பயன்படுத்துவதை தடுக்க பரிசோதனைகள் செய்யும் பொது அமைப்பு. இந்த அமைப்பு தற்போது அமெரிக்க, சீன சண்டையில் அகப்பட்டு இழுபடுகிறது. சீன போட்டியாளர் ஊக்க போதை பயன்படுத்துவதை அறியும் WADA பரிசோதனை தரவுகளை அழிகிறது என்று அமெரிக்க அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர். அவற்றை மறுக்கும் WADA குற்றச்சாட்டை நிரூபிக்க கேட்டுள்ளது. அதேநேரம் WADA சீன போட்டியாளரை மிகையான அளவில் பரிசோதனை செய்து துன்புறுத்துவதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. […]

ஹமாஸ் அரசியல் தலைவர் தெகிரானில் படுகொலை 

ஹமாஸ் அரசியல் தலைவர் தெகிரானில் படுகொலை 

பலஸ்தீன இயக்கமான ஹமாசின் அரசியல் தலைவர் Ismail Haniyeh புதன் அதிகாலை ஈரானின் தலைநகர் தெகிரானில் படுகொலை செய்யப்பட்டார். பொதுவாக கட்டாரில் அல்லது துருக்கியில் வாழும் இவர் ஈரானின் புதிய சனாதிபதி பதவி ஏற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தெகிரான் சென்றிருந்தார். இந்த படுகொலையை செய்தது இஸ்ரேல் என்று கூறப்பட்டாலும், இஸ்ரேல் குற்றச்சாட்டை ஏற்கவோ அல்லது மறுக்கவே இல்லை. Haniyeh ஒரு guided ஏவுகணை மூலம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த படுகொலைக்கு பதிலடி வழங்க ஈரானும், ஹமாசும் உறுதி […]

ஒலிம்பிக் போட்டியை குழப்பும் அழுக்கான பாரிஸ் ஆறு

ஒலிம்பிக் போட்டியை குழப்பும் அழுக்கான பாரிஸ் ஆறு

தற்போது பாரிஸ் நகரில் இடம்பெறும் 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான triathlon போட்டி புதன்கிழமைக்கு பின் போடப்பட்டுள்ளது. இந்த போட்டி இடம்பெற இருந்த Seine என்ற ஆறு அழுக்காக உள்ளமையே பின் போடலுக்கு காரணம். பாரிஸ் நகரினூடு செல்லும் இந்த ஆற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவு E. coli கிருமிகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக அங்கு பெய்த மழை ஆறை மேலும் அழுக்காக்கி உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு முன் $1.5 பில்லியன் […]

உலகின் 47.5% சொத்துக்கள் 1.5% மக்கள் கையில் 

உலகின் 47.5% சொத்துக்கள் 1.5% மக்கள் கையில் 

உலகின் 47.5% சொத்துக்கள் 1.5% மக்கள் கையில் உள்ளதாக 2024ம் ஆண்டுக்கான UBS வங்கியின் Global Wealth Report என்ற ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த 47.5% சொத்தின் பெறுமதி சுமார் $213 டிரில்லியன் ($213,000 பில்லியன் ஆகும். இந்த சொத்துக்களில் பெருமளவானவை பங்குச்சந்தை சொத்துக்கள் ஆனபடியால் இவற்றின் பெறுமதி திட்டமானது அல்ல. உலகில் சுமார் 58 மில்லியன் அமெரிக்க டாலர் millionaires உள்ளதாக மேற்படி அறிக்கை கூறுகிறது. அதில் 21.95 மில்லியன் millionaires அமெரிக்காவிலும், 6.01 மில்லியன் […]

Golan ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலி 

Golan ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலி 

Golan Heights பகுதியில் உள்ள Majdal Shams நகர் விளையாட்டு மைதானம் ஒன்றில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலுக்கு 12 இளையோர் பலியாகி உள்ளனர். பலியானோர் 10 முதல் 20 வயதினர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு மேலும் 20 பேர் காயமடைந்தும் உள்ளனர். சிரியாவுக்கு சொந்தமான Golan Heights பகுதியை இஸ்ரேல் 1967ம் ஆண்டு யுத்தத்தில் கைப்பற்றி இருந்தது. கடந்த அக்டோபர் 7ம் திகதிக்கு பின் இஸ்ரேலின் வடக்கு எல்லையோரம் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவே […]

1 16 17 18 19 20 340