இலங்கையை தாக்கவுள்ள அடுத்த புயல் Burevi

இலங்கையை தாக்கவுள்ள அடுத்த புயல் Burevi

நிவார் (Nivar) புயலுக்கு பின் இன்னோர் புயல் இலங்கைக்கு கிழக்கே உருவாகி வருகிறது. Burevi என்று பெயரிடப்படவுள்ள இந்த சூறாவளி புதன்கிழமை (2020/12/02) இலங்கையை தாக்க ஆராம்பிக்கும் என்று இந்தியாவின் Meteorological Department (IMD) கூறுகின்றது. ஆனால் இதுவரை அந்த தாழமுக்கம் சூறாவளிக்கான உக்கிரத்தை அடையவில்லை. இந்த சூறாவளியின் மையம் இலங்கையின் கிழக்கே நுழைந்து, மேற்கே வெளியேறி மீண்டும் இந்துசமுத்திரத்தை அடையும். Burevi இந்த ஆண்டுக்கான 5 ஆவது இந்து சமுத்திர சூறாவளி. இந்த சூறாவளி சுமார் […]

நைஜீரியாவில் குறைந்தது 110 உழவர் படுகொலை

நைஜீரியாவில் குறைந்தது 110 உழவர் படுகொலை

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Koshobe என்ற கிராமத்தில் குறைந்தது 110 உழவர் சனிக்கிழமை பிற்பகல் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் பல பெண்களும் கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆயுதங்களுடன் வந்தவர்கள் நெல் அறுவடை செய்யும் இடங்களில் இருந்தவர்களையே படுகொலை செய்துள்ளனர். இவர்களில் பலர் அறுவடை தொழில் தேடி வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள். இப்பகுதி அண்மை காலங்களில் பல வன்முறைகளுக்கு இரையாகி உள்ளது. தாக்குதலுக்கு ஒருவரும் உரிமை கூறவில்லை. ஆனால் இப்பகுதியில் Boko […]

இந்தியா, பாகிஸ்தான் முறுகல், பஸ்மதி அரிசி காரணம்

இந்தியா, பாகிஸ்தான் முறுகல், பஸ்மதி அரிசி காரணம்

ஐரோப்பிய அரிசி சந்தையில் பஸ்மதி (basmati) என்ற சொல்லை பயன்படுத்தும் உரிமையை இந்தியாவின் 7 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் உற்பத்தியாகும் பஸ்மதி அரிசிக்கு மட்டும் வழங்குமாறு இந்தியா விண்ணப்பம் செய்துள்ளது.  பஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடான பாகிஸ்தான் இந்திய விண்ணப்பத்தை நிராகரித்து வாதாடுகிறது. உண்மையில் இந்தியாவின் விண்ணப்பம் 2018 ஆம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், அந்த விசயம் தற்போதே பகிரங்கத்துக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பாகிஸ்தான் எதிர்ப்பு […]

பாகிஸ்தானிலிருந்து கம்போடியா போகும் இலங்கை யானை

பாகிஸ்தானிலிருந்து கம்போடியா போகும் இலங்கை யானை

பாகிஸ்தானில் உள்ள காவன் (Kaavan) என்ற வயது முதிர்ந்த ஆண் யானை ஒன்று கம்போடியா செல்கிறது. ஊழல் காரணமாக தற்போது அந்த யானை உள்ள Marghuzar மிருகக்காட்சி சாலை தரம் அற்றது என்றபடியால், நீதிமன்றம் அந்த காட்சி சாலையை மூட கட்டளையிடுள்ளது. Four Paws International என்ற அமைப்பும், Friends of Islamabad Zoo என்ற அமைப்பும் இணைந்து காவனை சரணாலயம் அனுப்பும் நற்பணியை செய்கின்றன. இதனுடன் இருந்த Saheli என்ற  பங்களாதேசத்து  பெண் யானை 2012 […]

ஈரானின் அணு விஞ்ஞானி இன்று படுகொலை

ஈரானின் அணு விஞ்ஞானி இன்று படுகொலை

ஈரானின் முதன்மை அணு விஞ்ஞானியான Mohsen Fakhrizadeh இன்று தலைநகர் தெஹிரானுக்கு அண்மையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்கிறது ஈரானிய செய்தி நிறுவனமான Fars News Agency. மேற்படி கொலையை அந்நிய அரச பயங்கரவாதம் என்று அழைத்துள்ளார் ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Mohammad Javad Zarif. Fakhrizadeh ஈரானின் இரகசிய அணு ஆயுத தயாரிப்பின் முக்கிய நபர் என்கிறது இஸ்ரேல். 2018 ஆம் ஆண்டு இஸ்ரேலின் பிரதமர் Netanyahu தனது உரை ஒன்றில் Fakhrizadeh […]

ஹம்பந்தோட்டையில் 2026 Commonwealth போட்டிகள்?

ஹம்பந்தோட்டையில் 2026 Commonwealth போட்டிகள்?

2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டிகள் இலங்கையின் ஹம்பந்தோட்டை நகரில் இடம்பெற சந்தர்ப்பங்கள் உண்டு என்று கருதப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில், Toronto நகருக்கு மேற்கே, அமைந்துள்ள Hamilton என்ற நகரமே 2026 Commonwealth போட்டிகளை கொண்டிருக்க விரும்பும் நகரங்களில் முன்னணியில் உள்ளது. ஆனால் ஒன்றாரியோ மாநிலம் அதை விரும்பவில்லை. 2026 ஆம் ஆண்டு FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிகள் கனடா (Toronto), அமெரிக்கா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளதால் 2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth […]

உதைபந்தாட்ட வீரர் Diego Maradona மரணம்

உதைபந்தாட்ட வீரர் Diego Maradona மரணம்

உலகின் மிக சிறந்த உதைபந்தாட்ட வீரரான டியேகோ மரடோனா (Diego Maradona) இன்று புதன் (2020/11/25) தனது 60 ஆவது வயதில் மாரடைப்புக்கு பலியானார். இவர் captain ஆக இருந்து 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா World Cup உதைபந்தாட்ட வெற்றியை அடைய வழி வகுத்தவர். 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவுக்கும், பிரித்தானியாவுக்கு இடையில் இடம்பெற்ற FIFA போட்டியின் 90 நிமிட காலிறுதி (quarterfinal) ஆட்டத்தின்போதான மரடோனாவின் விளையாட்டு தரம் உலக புகழ் பெற்றது. ஆர்ஜென்டீனாவை உலக […]

முரண்டு செய்தலை கைவிட்டார் ரம்ப், பைடென் தயாராகிறார்

நவம்பர் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், ரம்ப் இதுவரை தானே வென்றதாக முரண்டு செய்துவந்திருந்தார். அவரின் வாதத்துக்கு ஏற்ப பல வழக்குகளையும் அவர் தரப்பு பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்திருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை ஏற்கனவே நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இறுதியில் ரம்ப்  தனது அலுவலகர்களை பைடெனின் அணியுடன் இணைந்து பதவி கைமாற்றத்துக்கு ஏற்ப செயற்படுமாறு கூறியுள்ளார். ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க General Services Administration என்ற அலுவலகம் பைடென் அணியின் […]

சந்திரனில் மண் எடுக்க கலம் ஒன்றை ஏவியது சீனா

சந்திரனில் மண் எடுக்க கலம் ஒன்றை ஏவியது சீனா

சந்திர மேற்பரப்பின் சிறிதளவு மாதிரியை எடுத்துவர கலம் ஒன்றை இன்று சீனா ஏவி உள்ளது. Chang’e-5 என்ற இந்த கலத்தை Long March-5 என்ற ஏவுகணை காவி சென்றது. இது சீன நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஏவப்பட்டது. சீனாவின் இந்த செயற்பாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றால், சந்திரனில் இருந்து மாதிரியை எடுத்துவந்த 3 ஆவது நாடாக சீனா அமையும். அமெரிக்காவும், சோவியத்தும் ஏற்கனவே அவ்வாறு செய்துள்ளன. ஏவப்பட்ட கலம் மட்டும் 3 பாகங்களை கொண்டது. Orbitor […]

இரகசியமாக சவுதி இளவரசரை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்?

இரகசியமாக சவுதி இளவரசரை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்?

இஸ்ரேல் பிரதமர் நெட்ரன்யாஹூ (Benjamin Netanyahu) இரகசியமாக சவுதி சென்று அந்நாட்டு இளவரசர் Mohammed bin Salman னை சந்தித்து உள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அச்செய்திகள் உண்மை என்றால், பரம எதிரிகளான இருபகுதியும் உறவாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. ஆனாலும் சவுதி தரப்பு அவ்வாறு சந்திப்பு இடம்பெறவில்லை என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு முதலில் மேற்படி செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. பின்னர் இஸ்ரேலின் கல்வி அமைச்சர் Yoav Gallant சந்திப்பதை உறுதி […]