மியன்மாரில் சனிக்கிழமை மேலும் 12 பேர் பலி

மியன்மாரில் சனிக்கிழமை மேலும் 12 பேர் பலி

மியன்மாரில் (பர்மா) இடம்பெறும் இராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் 12 ஆர்பாட்டக்காரர் சனிக்கிழமை பலியாகி உள்ளனர். பெப்ரவரி 1ம் திகதி முதல் இதுவரை அங்கு சுமார் 103 பேர் இராணுவத்தின் தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். அதேவேளை தப்பிய League of Democracy (NLD) பாராளுமன்ற உறுப்பினர் மக்களை புரட்சிக்கு அழைக்கின்றனர். இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள Aung San Suu Kyi தலைமயிலான NLD கட்சியின் உறுப்பினரான Mahn Win Khaing என்ற பாராளுமன்ற உறுப்பினர் மறைவு இடம் […]

சில நாடுகள் AstraZeneca கரோனா மருந்தை இடைநிறுத்தம்

சில நாடுகள் AstraZeneca கரோனா மருந்தை இடைநிறுத்தம்

சில நாடுகள் AstraZeneca தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை தம் நாட்டவருக்கு வழங்குவதை இடைநிறுத்தம் செய்துள்ளன. இந்த மருந்து சிலவேளைகளில் குருதியை திரைய அல்லது கட்டியாக (blood colt) வைக்கிறது என்று மேற்படி நாடுகளால் கூறப்படுகிறது. குருதி திரைவது குருதி ஓட்டத்தை தடை செய்வதால் அது உயிருக்கு ஆபத்தானது. பல்கேரியாவே (Bulgaria) AstraZeneca கரோனா தடுப்பு மருந்தை இடைநிறுத்திய கடைசி நாடு. ஏற்கனவே டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே, தாய்லாந்து ஆகிய நாடுகள் மேற்படி மருந்தை இடைநிறுத்தி உள்ளன. […]

இந்திய சர்வாதிகாரத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறது V-Dem

இந்திய சர்வாதிகாரத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறது V-Dem

தற்போதைய பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ. கட்சி ஆட்சியை பாகிஸ்தானின் சவாதிகார ஆட்சியுடன் ஒப்பிடுகிறது சுவீடனை தளமாக கொண்ட V-Dem (Varieties of Democracy) என்ற அமைப்பு. அதனால் இதுவரை “world’s largest democracy” என்று கணித்த  இந்தியாவை மேற்படி அமைப்பு தற்போது “electoral autocracy” என்று கணிக்கிறது. V-Dem தனது 0 முதல் 1 வரையான கணிப்பு சுட்டியில், இந்தியா 2013ம் ஆண்டில் 0.57 புள்ளியை கொண்டு இருந்ததாகவும், ஆனால் 2020ம் ஆண்டு 0.34 புள்ளியை […]

சந்திரனில் ரஷ்யா சீனா இணைந்த ஆய்வுகூடம்

சந்திரனில் ரஷ்யா சீனா இணைந்த ஆய்வுகூடம்

ரஷ்யாவும் சீனாவும் இணந்து சந்திரனில் ஆய்வுகூடம் ஒன்றை அமைக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவின் Roscosmos அமைப்பும் சீனாவின் National Space Administration அமைப்பும் இணங்கி உள்ளன. செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பு விடப்பட்டு உள்ளது. International Lunar Research Station (ILRS) என்ற இந்த ஆய்வுகூடம் சந்திரனின் விண்ணில் அல்லது நிலத்தில் அமையலாம். சாதகமான நிலை ஏற்படின் சந்திரனின் விண்ணிலும், நிலத்திலும் இரண்டு ஆய்வு கூடங்கள் அமையலாம். இந்த ஆய்வு கூடம் (அல்லது கூடங்கள்) மற்றைய நாடுகளின் […]

அமெரிக்கா, சீனா அலாஸ்காவில் நேரடி பேச்சு?

அமெரிக்காவும், சீனாவும் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நேரடி பேச்சுக்களை விரைவில் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இருதரப்பும் இந்த விசயம் தொடர்பாக முறைப்படி அறிவிப்புகள் எதையும் இதுவரை செய்யவில்லை. முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்காலத்தில் முறிந்துபோன அமெரிக்க-சீன உறவை மீண்டும் புதுப்பிக்க பைடென் ஆட்சியில் உள்ள அமெரிக்கா முனைகிறது. அலாஸ்காவின் Anchorage நகரில் இடம்பெறக்கூடும் இந்த பேச்சில் சீனாவின் Yang Jiechi மற்றும் Wang Yi கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தரப்பில் Antony Blinken […]

நைஜீரியா திரும்புகிறது $5.8 மில்லியன் திருட்டு பணம்

நைஜீரியா திரும்புகிறது $5.8 மில்லியன் திருட்டு பணம்

நைஜீரியாவின் முன்னாள் ஆளுநர் ஒருவர் திருடிய $5.8 மில்லியன் பணத்தை மீண்டும் நைஜீரியாவுக்கு அனுப்ப பிரித்தானியா இணங்கி உள்ளது. நைஜீரியாவின் Delta மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் James Ibori என்பவரிடம் இருந்தே இந்த பணம் முடக்கப்பட்டது. 1980ம் ஆண்டுகளில் பிரித்தானியா சென்ற Ibori அங்கு கடை ஒன்றில் காசாளராக பணிபுரிந்தார். அப்போது அவர் செய்த திருட்டுகள் காரணமாக 1991ம் ஆண்டு குற்றவாளியாக காணப்பட்டு இருந்தார். பின் அவர் மீண்டும் நைஜீரியா சென்று அங்கு அரசியல் குதித்தார். தனக்கு […]

இலங்கைக்கான கனடிய தூதுவர் கண்காணிப்பில்?

இலங்கைக்கான கனடிய தூதுவர் கண்காணிப்பில்?

இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon தான் இலங்கையின் கண்காணிப்பில் உள்ளேனா என்று கேள்வி ஒன்றை விடுத்துள்ளார். அண்மையில் அவர் Tareq Ariful Islam என்ற இலங்கையில் உள்ள பங்களாதேசத்தின் தூதுவருடன் தனிப்பட்ட முறையில் கதைத்து உள்ளார். Colombo 7 இல் உள்ள Canada House நிலையத்தில் இடம்பெற்ற இந்த உரையாடல் பகிரங்கம் செய்து இருக்கப்படவில்லை. ஆனால் The Island செய்தி நிறுவனம் இந்த உரையாடலை மார்ச் மாதம் 3ம் திகதி பகிரங்கம் செய்துள்ளது. The island […]

அமெரிக்க ஊழலாலேயே கரோனா தடுப்பு தோல்வியுற்றது

அமெரிக்க ஊழலாலேயே கரோனா தடுப்பு தோல்வியுற்றது

அமெரிக்க மக்களை கரோனாவில் இருந்து தகுந்த முறையில் அமெரிக்கா பாதுகாக்க தவறியதற்கான காரணங்களுள் ஊழலே முதற்காரணம் என்கிறது The New York Times செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரை ஒன்று. குறிப்பாக அரசியல் செல்வாக்கு கொண்ட Emergent என்ற தனியார் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்துகளை மட்டுமே அமெரிக்க அரசின் Centers for Disease Control and Prevention என்ற திணைக்களத்துக்கு மிகையாக விற்பனை செய்து வந்துள்ளது. Centers for Disease Control and […]

பல்லாயிரம் Microsoft email servers மீது தாக்குதல்

பல்லாயிரம் Microsoft email servers மீது தாக்குதல்

Microsoft நிறுவனத்தின் Exchange என்ற email server களை கொண்ட குறைந்தது 60,000 நிறுவனங்களின் மீது hackers தாக்கி, தரவுகளை களவாடி உள்ளதாக Microsoft நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி வழங்க உள்ளதாக வெள்ளைமாளிகை கூறியுள்ளது. இந்த தாக்குதலை சீனாவின் ஆதரவு கொண்ட hackers குழுவே செய்ததாக தாம் நம்புவதாக Microsoft கூறியுள்ளது. Exchange server softwareரில் இருந்த பலவீனத்தை (bug) அறிந்த hackers […]

பாகிஸ்தான் ஊடு சீனாவின் Peace Cable, அமெரிக்கா விசனம்

பாகிஸ்தான் ஊடு சீனாவின் Peace Cable, அமெரிக்கா விசனம்

சீனா ஐரோப்பிய நாடுகளுடனான தனது இணைய தொடர்பை வலுப்படுத்த புதியதோர் கடலடி fiber optic cable இணைப்பை பதித்து வருகிறது. Peace Cable என்ற பெயர் கொண்ட இந்த இணைப்பு சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஊடு (CPEC திட்டத்தில்) அரபு கடலை நிலம் வழியே சென்று அடைந்து, பின் அங்கிருந்து பிரான்சின் Marseille துறைமுகத்தை இந்துசமுத்திரம், சுயஸ் கால்வாய் ஊடு நீருக்கு அடியே சென்று அடையும். இந்த cable தென்னாபிரிக்கா, கென்யா, Djibouti ஆகிய பல நாடுகளையும் […]