இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள, $110 மில்லியன் பெறுமதியான, Lincoln House என்ற அரண்மனை விற்பனை விசயம் தொடர்பாக இந்தியாவின் மோதி அரசும், அமெரிக்காவும் முரண்பட்டு வருகின்றனர். இந்த கிழமை இந்தியா செல்லும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Antony Blinken இந்த விசயம் தொடர்பாக மோதியை மீண்டும் அழுத்துவார் என்று கூறப்படுகிறது. Wankaner House என்ற இந்த 3-மாடி அரண்மனை 1930ம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக்கு கீழ் இருந்த அக்கால Wankaner மகாராசாவுக்கு அமைக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின் […]
அமெரிக்க படைகள் ஈராக்கையும் விட்டு வெளியேறவுள்ளது என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் கூறியுள்ளார். ஈராக்கின் பிரதமரை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்த பைடென் மேற்படி அறிவிப்பை செய்துள்ளார். தற்போது அங்கு சுமார் 2,500 அமெரிக்க படையினர் மட்டுமே உள்ளனர். ஒருகாலத்தில் அங்கு சுமார் 160,000 அமெரிக்க படையினர் போராடினர். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அணு ஆயுதம் வைத்துள்ளார் என்ற பொய் குற்றச்சாட்டின் அடிப்படியில் சதாமை விரட்ட ஈராக் சென்ற அமெரிக்க படைகள் தற்போது […]
மேற்கு நாடுகளின் அண்மைக்கால இராணுவ நகர்வுகளால் விசனம் கொண்ட ரஷ்ய சனாதிபதி தாம் எதிரிகள் மீது தவிர்க்கமுடியாத தாக்குதல் (unpreventable strike) செய்ய தயக்கம் கொள்ளோம் என்று இன்று ஞாயிறு கூறியுள்ளார். கடந்த கிழமை பிரித்தானியாவின் யுத்த கப்பலான HMS Defender கருங்கடலில் (Black Sea) கிரைமியா (Crimea) அருகே சென்று இருந்தது. ரஷ்யா 2014ம் ஆண்டு கிரைமியாவை தனதாக்கி இருந்தது. பிரித்தானியா, அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா கிரைமியாவை யுக்கிரனிடம் இருந்து பறித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. […]
இந்தியாவின் மேற்கு உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்ற கடும் மழை தோற்றுவித்த வெள்ளத்துக்கு இதுவரை குறைந்தது 125 பேர் பலியாகி உள்ளனர். சில பள்ளமான இடங்களில் வீடுகளின் கூரைவரை வெள்ளம் உயர்ந்து உள்ளது. வீதிகள், தண்டவாளங்கள் நீருள் அமிழ்ந்ததால் போக்குவரத்தும் தடைப்பட்டு உள்ளது. குறிப்பாக மும்பாய்-பெங்களூர் பெருவீதியின் பாகங்களும் வெள்ளத்துள் மூழ்கி உள்ளது. அதனால் பல்லாயிரம் பார வாகனங்களும் இடைவெளியில் முடங்கி உள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியில் பெருமழை மொழிந்து உள்ளதாக கூறப்படுகிறது. Mahabaleshwar […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பை விட்டு அவரின் மனைவி மெலனியா (Melania Trump) மெல்ல விலகுகிறாரா என்று சந்தேகிக்க வைக்கின்றன அவரின் அண்மைக்கால செயற்பாடுகள். ஜூன் மாதம் 14ம் திகதி இடம்பெற்ற ரம்பின் 75வது பிறந்ததின கொண்டாட்டத்தில் மனைவி மெலனியாவை காணவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டுமன்றி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதுவும் அறியப்படவில்லை. ரம்ப் புளோரிடாவில் வாழ மெலனியா அடிக்கடி நியூ யார்க் நகரில் காணப்பட்டு […]
தனியார் நிறுவனங்கள் மூலம் இயங்கும் டியூஷன் (tuition) வகுப்புகளுக்கு சீனாவில் பெரும் தடை நடைமுறை செய்யப்பட்டுள்ளது. தனியார் டியூஷன் நிறுவனங்கள் பெரும் பணம் உழைக்கும் நிறுவனங்கள் ஆவதை சீனா தடுக்க முனைகிறது. அரச கல்வி இலவசம் என்றாலும், சிறுவர்களுக்கான படிப்பு செலவு அதிகரிப்பதும் தம்பதிகள் குழந்தைகளை பெறாமைக்கு காரணம் என்று சீன அரசு கருதுகிறது. புதிய சட்டப்படி சனி, ஞாயிறு, விடுமுறை ஆகிய தினங்களில் டியூஷன் வகுப்புக்களை கொண்டிருக்க முற்றாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பாடசாலை […]
கரோனா வரைஸ் தாக்கத்தின் மத்தியிலும் இன்று வெள்ளிக்கிழமை (23/07/2021) பின்போடப்பட்ட Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி உள்ளன. இம்முறை போட்டிகளை நேரடியாக காண பார்வையாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் மூலமே போட்டிகள் ஆவலரை அடையும். ஆரம்ப விழாவின் வாணவேடிக்கையும் தொலைக்காட்சிக்கு பொருந்தும் வகையிலேயே இடம்பெற்றது. பங்குகொள்ளும் நாடுகளின் அணிவகுப்பும் 5,700 பேரை மட்டுமே கொண்டிருந்தது. 2016ம் ஆண்டு போட்டியில் 16,000 க்கும் அதிமானோர் அணிவகுத்து இருந்தனர். ஜூலை 1ம் திகதி முதல் ஒலிம்பிக் வளாகத்தில் மட்டும் […]
அமெரிக்காவும், சீனாவும் அரசியல் களத்தில் பெரும் மோதலில் இருப்பதாக தெரிந்தாலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்தும் வளர்ந்தே செல்கிறது. கரோனா காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட வர்த்தக வீழ்ச்சியும் தற்போது மீளப்பட்டு உள்ளது. ரம்ப் ஆட்சியோ, அல்லது பின்வந்த பைடென் ஆட்சியோ அமெரிக்க-சீன வர்த்தகத்தில் பெரிதாக மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று தரவுகள் கூறுகின்றன. தென் கொரியா, தாய்வான் ஆகிய இடங்களில் இருந்தான அமெரிக்கான ஏற்றுமதி அதிகரிக்க ஆரம்பித்து இருந்தாலும் இவை சீனாவில் இருந்து […]
சீனா 600 km/h (373 mph) வேகத்தில் செல்லவல்ல Maglev வகை ரயில் ஒன்றை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது. இது சேவைக்கு வரும்போது உலகிலேயே அதிவேக ரயில் ஆக இது இருக்கும். இது சீனாவிலேயே முற்றாக தயாரிக்கப்பட்டது. Maglev (magnetic levitation) வகை ரயில்கள் சக்கரங்களை கொண்டிரா. பதிலாக ரயிலுக்கு கீழேயும், தண்டவாளத்திலும் தற்காலிக காந்தப்புலத்தை ஏற்படுத்தி, தண்டவாளத்தில் தொடாது ரயில் பயணிக்கும். ஒரு இடத்தை ரயில் கடந்தவுடன், அந்த இடத்திலான காந்தப்புலமாக்கல் நிறுத்தப்படும். அதாவது காந்தப்புலமாக்கலும் […]
சீனாவின் ஹேனான் (HeNan) மாநிலத்தில் உள்ள ZhengZhou நகரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 624 mm மழை பொழிந்துள்ளது. அதில் 1/3 பங்கு மழை பிற்பகல் 4:00 முதல் 5:00 மணி வரையான 1 மணித்திலாத்தூள் பொழிந்துள்ளது. அந்த மழை பின்னர் ஏற்படுத்திய வெள்ளத்துக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். சாதாரணமாக ஆண்டு ஒன்றில் கிடைக்கும் மழை இங்கே கடந்த 3 தினங்களில் கிடைத்துள்ளது. சிலர் subway என்ற நிலக்கீழ் ரயிலில் அகப்பட்டு பலியாகி உள்ளனர். சுமார் 500 […]