ஜேர்மனியில் உள்ள 34 பல்கலைக்கழக உணவகங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் விற்பனை செய்யப்படும் உணவுகளில் 96% உணவுகள் சைவ அல்லது vegan உணவுகளாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இறைச்சி வகை உணவுகள் 2% அளவிலும் மீன் உணவுகள் 2% அளவிலும் மட்டுமே இருக்கும். இந்த செய்தியை பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு வழங்கும் மாணவர் அமைப்பான Studierenden தெரிவித்து உள்ளது. வழங்கப்படவுள்ள மொத்தம் 510 உணவுகளில் (meals) 341 உணவுகள் பால் பொருட்களையும் தவிர்த்த vegan உணவாகவும், […]
நியூசிலாந்தின் Auckland நகரில் இலங்கையர் ஒருவர் செய்த கத்தி குத்துக்கு 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். கத்தி குத்தை செய்த இலங்கையர் போலீசால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த வன்முறையை செய்தவர் ஒரு ISIS ஆதரவாளர் என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் நியூசிலாந்துக்கு 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்று இருந்தார். இன்று வெள்ளி பிற்பகல் 2:40 மணியளவில் அப்பகுதியில் உள்ள Countdown என்ற கடைக்கு சென்ற இவர் அங்கு […]
சூறாவளி ஐடா (Hurricane Ida) ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்கு அமெரிக்காவின் நியூ யார்க் நகர் மற்றும் அதை அண்டிய Connecticut, New Jersey, Pennsylvania, Maryland, Virginia மாநில பகுதிகளில் குறைந்தது 45 பேர் பலியாகி உள்ளனர். நியூ யார்க் நகரில் பல நிலக்கீழ் ரயில் நிலையங்களுள் வெள்ளம் புகுந்ததால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பல பயணிகள் புதன் இரவு ரயில் நிலையங்களில் தங்க நேரிட்டது. Philadelphia நகரில் உள்ள Schuylkill ஆற்று நீர்மட்டம் […]
இன்று செப்டம்பர் 1ம் திகதி முதல் சீனாவில் இளைஞர்கள் கிழமைக்கு 3 மணித்தியாலங்கள் மட்டுமே இணையம் மூலம் video game விளையாட அனுமதிக்கப்படுவர். இளைஞர்கள் video game விளையாடலுக்கு அடிமையாவதை தவிர்ப்பதே சீன அரசின் நோக்கம். புதிய சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்டோர் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், மாலை 8 மணி முதல் 9 மணி வரையே இணையத்தில் விளையாட அனுமதிக்கப்படுவர். விடுமுறை தினங்களிலும் 1 மணித்தியாலம் விளையாட அனுமதிக்கப்படுவர். Computer, smartphone, tablet, […]
புதிதாக கனடாவுக்கு குடிவரவு செய்யும் செல்வந்தர் வரி குற்றங்களை செய்கிறார்கள் என்று அறிந்திருந்தும் கனடா அவற்றை கண்டுகொள்ளாது இருந்துள்ளது என்று தற்போது அறியப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு பெருமளவு பணம் வருவதை விரும்பிய கனடா செல்வந்த குடிவரவாளர் செய்யும் வரி குற்றங்களை மூடி மறைத்து உள்ளது. 1996ம் ஆண்டு Canada Revenue Agency (CRA) என்ற கனடாவின் வரி திணைக்களம் செய்த இரகசிய ஆய்வில் அக்காலத்தில் வான்கூவர் (Vancouver) பகுதிக்கு வரும் செல்வந்தர் மில்லியன் டாலர் பெறுமதியான […]
நேற்று ஞாயிறு அமெரிக்க விமானப்படை ஏவிய ஆளில்லா விமானம் மூலமான ஏவுகணை தாக்குதலுக்கு குறைந்தது 10 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. காபூலில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது தாக்கிய பொழுதே மேற்படி குடும்பம் பலியாகி உள்ளது. இந்த செய்தியை தாம் ஆராய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது. பலியானவர்களில் Malika என்ற 2 வயது சிறுமியும் ஒருவர். மரணித்தவருள் இன்னொருவர் முன்னர் அமெரிக்க படைகளுக்கு மொழிபெயர்ப்பு தொழில் செய்ததாகவும், அவர் வெளிநாட்டுக்கு […]
அஸ்ரேலியா சென்று அங்குள்ள தோட்டங்களில் (farm) நீண்ட காலம் தொழில் செய்ய இணங்கும் பிற நாட்டவருக்கு தோட்ட தொழில் விசா வழங்கி, பின்னர் அவர்களுக்கு நிறைந்த வதிவுரிமையும் வழங்க அஸ்ரேலியா தீர்மானித்து உள்ளது. பிலிப்பீன், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாட்டவரே முதலில் இந்த திட்டத்துக்கு உட்படுவர். அஸ்ரேலியாவில் தோட்ட வேலைகள் செய்யும் தொழிலாருக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டதே காரணம். இவர்கள் Northern Territory பகுதியில் மாம்பழம், வெள்ளரி, பூசணி போன்றவற்றையும், Queensland பகுதியில் தக்காளி, raspberries போன்றவற்றையும், […]
2025ம் ஆண்டளவில் சீனா உருவாக்கும் STEM (Science, Technology, Engineering, Mathematics) PhD களின் எண்ணிக்கை அமெரிக்கா உருவாக்கும் STEM PhD களின் எண்ணிக்கையை பின்தள்ளும் என்கிறது அமெரிக்காவின் Georgetown University யுடன் இணைந்து இயங்கும் Center for Security and Emerging Technology என்ற think tank ஆய்வு ஒன்று. 2025ம் ஆண்டில் சீனா 77,000 STEM PhD களையும், அமெரிக்கா 40,000 STEM PhD களையும் உருவாக்கும் என்று மேற்படி ஆய்வு கணித்துள்ளது. அதனால் […]
தமிழ்நாட்டில் தற்போது தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 317 கோடி இந்திய ரூபாய்களை ஓதுக்கவுள்ளார். Rule 110 சட்டத்துக்கு அமைந்த இந்த அறிவிப்பை அவர் இன்று வெள்ளி தெரிவித்துள்ளார். அதில் 231 கோடி பணம் மொத்தம் 7,469 வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும். முதல் கட்டத்தில் 3,520 வீடுகள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு ஏரி வாயு, அடுப்பு ஆகியனவும் இலவசமாக வழங்கப்படும். அதேவேளை கல்வி அமைச்சு 50 மாணவார்களுக்கு […]
காபூலில் இன்று வியாழன் இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 60 பொதுமக்களும், 12 அமெரிக்க படைகளும் பலியாகி உள்ளன. இந்த தாக்குதல்களை ISIS-K என்ற ஆப்கானிஸ்தான் ISIS குழுவே செய்ததாக கூறப்படுகிறது. தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் அங்கு ISIS குழுவும் பரவ ஆரம்பித்து உள்ளது. தலிபானும், ISIS குழுவும் பரம எதிரிகள். அத்துடன் 15 அமெரிக்க படையினரும், 140 பொதுமக்களும் காயமடைந்தும் உள்ளனர். மேற்படி தாக்குதல்களில் ஒன்று காபூல் விமான நிலையத்தின் Abbey […]