தற்போது ஐ.நா. அமர்வுக்கு அமெரிக்கா சென்று இருக்கும் இந்திய பிரதமர் மோதி, அங்கு அமெரிக்க உதவி சனாதிபதி கமலா ஹாரிஸை இன்று வியாழனும், சனாதிபதி பைடெனை நாளை வெள்ளியும் வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார். அமெரிக்க அரசியவாதிகள் மட்டுமன்றி Qualcomm, Adobe, First Solar, General Atomics, Blackstone ஆகிய வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளையும் மோதி சந்திக்கவுள்ளார். சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை வளர்ப்பதே அமெரிக்காவின் நோக்கம். ஆனாலும் இந்தியாவை AUKUS அமைப்பில் அமெரிக்கா உள்ளெடுக்கவில்லை. 2002ம் ஆண்டு குஜராத்தில் […]
கடந்த மாதம் அமெரிக்கா வெளியேறிய பின் தலிபான் ஆப்கானிஸ்தான் ஆட்சியை யுத்தமின்றி கைப்பற்றி இருந்தது. ஆனால் அந்த தலிபான் குழுவுக்குள் முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தலிபானின் உதவி பிரதமராக பதவியேற்ற Mullah Abdul Ghani Baradar தற்போது இருப்பிடம் அறியப்படாது உள்ளார். Mullah Abdul Ghani Baradar கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் ஆதாரம் இன்றிய செய்திகள் கூறுகின்றன. இந்த சந்தேகம் தோன்றியபின் தலிபான் Baradar கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆனால் அந்த […]
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருந்த $2.7 பில்லியன் பெறுமதியான heroin போதையை தாம் கைப்பற்றி உள்ளதாக இந்தியாவின் Directorate of Revenue Intelligence (DRI) கூறியுள்ளது. இதை இறக்குமதி செய்த இருவரும் கூடவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இவை New Delhi நகருக்கு செல்லவிருந்தன என்றும் கூறப்படுகிறது. சுமார் 2,988 kg எடை கொண்ட இந்த போதை நாடுகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானின் Bandar Abbas Port என்ற துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து 2 […]
இன்று திங்கள் (செப்டம்பர் 20, 2021) இடம்பெற்ற கனடிய தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்றுகிறது. தேர்தல் முடிவுகள் தற்போதும் வெளிவந்துகொண்டிருந்தாலும், ஏற்கனவே 155 ஆசனங்களை மட்டும் கொண்டு சிறுபான்மை ஆட்சியை கொண்டுருந்த பிரதமர் ரூடோவின் அரசு மீண்டும் ஒரு சிறுபான்மை அரசையே அமைக்கக்கூடும். மொத்தம் 338 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க 170 ஆசனங்கள் தேவையாக இருக்கும் நிலையில் லிபரல் கட்சி, 82% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 157 தொகுதிகளில் மட்டுமே […]
அமெரிக்கா பிரித்தானியாவுடனும், அஸ்ரேலியாவுடனும் இரகசியமாக செய்து கொண்ட AUKUS கூட்டின் பின் பிரான்ஸ் தொடர்ந்தும் வெறுப்பில் உள்ளது. இந்த கிழமை பிரித்தானியவுடன் செய்துகொள்ளவிருந்த பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்களை பிரான்ஸ் இடைநிறுத்தி உள்ளது. பிரித்தானிய பிரதமர் Boris Johnson பிரான்ஸ் AUKUS கூட்டையிட்டு பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தாலும், பிரான்ஸ் பெரும் விசனத்தில் உள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் Ben Wallace உடன் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் Florence Parly செய்யவிருந்த பேச்சே இடைநிறுத்தப்பட்டு உள்ளது. […]
ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று ஏவிய ஏவுகணைக்கு ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் 10 பேர் பலியாகி இருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) மேற்படி தாக்குதலில் மரணித்தோர் பொதுமக்களே என்றும், தமது தவறை மன்னிக்கும்படியும் கேட்டுள்ளார். இந்த மன்னிப்பு வேண்டுகோளை இராணுவத்தின் மத்திய தலைமையக அதிகாரி ஜெனரல் Frank McKenzie விடுத்துள்ளார். தாக்குதல் நேரத்தில் குறி உண்மையில் ISIS-K என்றே தான் நம்பியதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் […]
அமெரிக்கா நேற்று பிரித்தானியாவுடனும் அஸ்ரேலியாவுடனும் செய்துகொண்ட AUKUS என்ற இராணுவ கூட்டு எதிரி நாடான சீனாவிலிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற நேச நாடுகளில் இருந்தும் எதிர்ப்பை பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு அஸ்ரேலியா பிரான்சிடம் இருந்து 12 அணுமின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்ய இணங்கி இருந்தாலும், நேற்று அந்த இணக்கத்தை அஸ்ரேலியா முறித்துள்ளது. பதிலாக தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளையே அஸ்ரேலியா கொள்வனவு செய்யவுள்ளது. அதனால் பிரான்ஸ் விசனம் கொண்டுள்ளது. பிரான்சின் வெளியுறவு அமைச்சர் Jean-Yves […]
அமெரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இன்று புதன்கிழமை கூட்டாக AUKUS என்ற புதியதோர் கூட்டணியை அறிவித்துள்ளன. இந்த புதிய கூட்டணியின் எதிரி சீனா என்று கூறப்படாவிட்டாலும் அந்த உண்மை பொதுவாக அறியப்பட்டது. AUKUS கூட்டின் இணக்கப்படி மூன்று நாடுகளும் தமது இராணுவ, தொழில்நுட்ப அறிவுகளை பகிர்ந்து கொள்ளும். 2016ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து அஸ்ரேலியா 12 அனுமினில் இயங்கும் நீர்மூழ்கிகளை $90 பில்லியன் பெறுமதிக்கு கொள்வனவு செய்ய இணங்கி இருந்தாலும் அந்த உடன்படிக்கை தற்போது […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியில் இருந்த காலத்தில், அவர் சீனாவை தாக்கும்படி கட்டளை இட்டாலும் அமெரிக்க இராணுவம் அவ்வாறு சீனாவை முன்னறிவிப்பு இன்றி தாக்காது என்று அமெரிக்க முப்படை தலைவர் ஜெனரல் Mark Milley சீன படைகளுக்கு இரண்டு தடவைகள் உறுதி கூறியுள்ளார். இந்த செய்தி முதலில் Bob Woodward மற்றும் Robert Costa எழுதிய Peril என்ற நூலில் வெளிவந்திருந்தாலும், இன்று புதன்கிழமை பென்ரகன் (Pentagon) வெளியிட்ட அறிக்கை ஒன்று முப்படை தளபதி சீனாவுக்கு […]
அண்மை காலங்களில் உலகம் எங்கும் மக்கள் வீட்டு கொள்வனவுகளை முதலீட்டு வழியாக (investment vehicle) பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வீடு மற்றும் condo கட்டுமானம், கொள்வனவு எல்லாம் அளவுக்கு மிஞ்சி வளர்ந்துள்ளது. தேவைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி சில இடங்களில் பாரிய இழப்புகளுக்கு காரணமாகி வருகிறது. தற்போது சீனாவின் China Evergrande என்ற நிறுவனம் பலரின் முதலீடுகளையும் அழித்து, தானும் அழியக்கூடும் என்ற நிலையில் உள்ளது. 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட China Evergrande என்ற வீடு கட்டுமான நிறுவனம் […]