தென்சீன கடலில் நீருக்கு கீழே பயணித்த அமெரிக்க நீர்மூழ்கி ஒன்று அறியா பொருள் ஒன்றுடன் மோதியுள்ளது. அதில் பயணித்த படையினருக்கு உயிர் ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், 15 படையினர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பாதிப்புக்களின் முழு விபரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. USS Connecticut என்ற இந்த அணுமின் மூலம் இயங்கும் (nuclear powered) நீர்மூழ்கி நீண்ட நேரம் கடலுக்கு கீழே பயணிக்கும் வசதி கொண்டது. Diesel எரிபொருள் மூலம் இயங்கும் நீர்மூழ்கிகள் […]
கரோனா காரணமாக கடந்த 18 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு மூடி இருந்த இந்தியா மீண்டும் அவர்களை அனுமதிக்க உள்ளது என்று இன்று வியாழன் அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானங்களில் இந்தியா செல்வோரும், பின் நவம்பர் 15ம் திகதி முதல் பொது விமானங்களில் செல்லும் பயணிகளும் அனுமதிக்கப்படுவர். 2018ம் ஆண்டில் இந்தியா உல்லாச பயணிகள் மூலம் $28.6 பில்லியன் வருமானத்தை பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. கரோனாவுக்கு முன், 2019ம் […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி $2.5 பில்லியனாக குறைந்துள்ளது என்கிறது Forbes magazine. அதனால் ரம்ப் Forbes 400 என்ற அமெரிக்காவின் முதல் 400 செல்வந்தர் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். சனாதிபதி ஆகுமுன், 2016ம் ஆண்டு ரம்பிடம் $3.7 பில்லியன் சொத்துக்கள் இருந்துள்ளன. 2017ம் ஆண்டு அத்தொகை $3.1 ஆக குறைந்து உள்ளது. வீழ்ச்சி 2021 வரை தொடர்ந்து உள்ளது. இவர் தனது சொத்துக்களை பெருமளவில் கட்டிடங்களில் மட்டும் கொண்டுள்ளதே வீழ்ச்சிக்கு […]
பெண் பிள்ளைகளுக்கு Facebook நிறுவனத்தின் Instagram app பெரும் பாதிப்பை அளிக்கிறது என்று தெரிந்தும் facebook அதை மறைத்து உள்ளது என்கிறார் Frances Haugen என்ற முன்னாள் Facebook நிறுவன Product Manager. Haugen இதை அமெரிக்க காங்கிரசுக்கு இன்று செவ்வாய் வழங்கும் விசாரணை ஒன்றிலேயே கூறியுள்ளார். இளம் பிள்ளைகள் மிரட்டல்களுக்கு (bullying) உள்ளாகியது தெரிந்தும் Facebook அதை தடுக்கவில்லை என்கிறார் Haugen. இந்த மிரட்டல்கள் பிள்ளைகளின் படுக்கையறை வரை சென்றது Facebook நிறுவனத்துக்கு தெரியும் என்றும் […]
இன்று திங்கள் மொத்தம் 56 சீன யுத்த விமானங்கள் தாய்வானின் வான்பரப்புள் நுழைந்து உள்ளன என்கிறது தாய்வான். இதுவரை தாய்வான் வானுள் நுழைந்த அதிகூடிய யுத்த விமானங்களின் தொகை இதுவே. இந்த 56 விமானங்களில் சீனாவின் புதிய J-16 வகை தாக்குதல் விமானங்கள் 38, H-6 வகை குண்டு வீச்சு விமானங்கள் 12, ரஷ்ய தயாரிப்பான SU-30 வகை யுத்த விமானங்கள் 2, Y-8 வகை நீர்மூழ்கி கண்டறியும் விமானங்கள் 2 ஆகியனவும் அடங்கும். இவற்றை தடுத்து […]
Pandora அறிக்கையில் Nirupama Rajapaksa, கணவர் Thirukumar Nadesan ஆகியோரின் சொத்துக்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அதில் Raja Ravi Varma வரைந்த 19ம் நூற்றாண்டு நாலு கை இலக்குமி (goddess Lakshmi) ஓவியம் ஒன்றும் அடங்கும். 2018ம் ஆண்டு சுமார் $1 மில்லியன் பெறுமதியான 31 ஓவியங்கள் லண்டன் நகரில் இருந்து சுவிற்சலாந்தில் உள்ள Geneva Freeport க்கு அனுப்பட்டன என்று கூறுகிறது பன்டோரா அறிக்கை. பதிந்த தரவுகளின்படி அதன் உரிமை Samoa நாட்டில் பதியப்பட்ட Pacific […]
பனாமா அறிக்கைகள் (Panama Papers) உலகின் திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணத்தை உலகுக்கு காட்டியது போல் தற்போது பன்டோரா அறிக்கை (Pandora Papers) மேலும் பல திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணத்தை உலகிற்கு காட்டுகிறது. இந்த அறிக்கையை International Consortium of Investigative Journalist (ICIJ) தயாரித்து உள்ளது. இந்த அறிக்கைக்கு 14 தரவாளர் மூலம் பெறப்பட்ட 11,903,676 ஆவணங்களும், 2.94 terabytes (2.94 TB = 2,940 GB/gigabytes = 2,940,000 MB/megabytes) […]
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 38 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்ததாக தாய்வான் கூறியுள்ளது. மொத்தம் 38 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைவது இதுவே முதல் தடவை. மேற்படி 38 விமானங்களில் சீனாவின் புதிய J-16 வகை யுத்த விமானங்கள் பதினெட்டும், H-6 வகை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் அடங்கும். அதற்கு சற்று முன் வெள்ளிக்கிழமை பகலும் 25 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்து இருந்தன. இன்று சனிக்கிழமையும் […]
அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடையுள் இருக்கும் Venezuela புதிய நாணயத்தை வெளியிடுகிறது. பழைய நாணயத்தில் இருந்து கடைசி 6 பூச்சியங்கள் விலக்கப்பட்டு புதிய நாணயம் உருவாக்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதார தடை காரணமாக அந்த நாட்டு நாணயத்தின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததே புதிய நாணய அறிமுகத்துக்கு காரணம். அங்கு தற்போது நடைமுறையில் உள்ள அதி கூடிய தொகை தாள் நாணயம் 1 மில்லியன் bolivar. ஆனால் அந்த 1 மில்லியன் bolivarருக்கான அமெரிக்க டாலர் பெறுமதி […]
மத்திய அமெரிக்க நாடான Ecuador இல் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைக்கு குறைந்தது 116 கைதிகள் பலியாகி உள்ளனர். Guayas சிறையில் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த வன்முறைக்கு ஆயுதங்கள், குண்டுகள் என்பன பயன்படுத்தப்பட்டு உள்ளன. மறுதினம் புதன்கிழமை நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்து இருந்தாலும் நிலைமை அவ்வாறு அல்ல என்று கூறப்படுகிறது. வியாழனும் சிறையுள் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. Los Choneros, Jalisco New Generation ஆகிய இரண்டு போதை கடத்தும் வன்முறை குழுக்களுக்கு […]