சுமார் ஒரு ஆண்டு காலமாக இந்திய பிரதமர் மோதியின் புதிய உழவர் தொடர்பான சட்டத்துக்கு எதிராக போராடிய உழவர் இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர். பிரமர் மோதியின் அரசு 2020ம் ஆண்டு தான் நடைமுறை செய்த உழவர் தொடர்பான சட்டத்தை பின்வாங்க இணங்கி உள்ளது. கரோனா மற்றும் பாதகமான காலநிலையிலும் போராடிய உழவர் இறுதியில் தமது வெற்றியை அடைந்து உள்ளனர். இவர்களுக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் உதவிகளும் கிடைத்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் புஞ்சாப், ஹரியானா […]
ஐரோப்பாவில் மீண்டும் கரோனா தோற்று உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அஸ்ரியாவில் (Austria) முழு அளவிலான கரோனா முடக்கம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இந்த முழு முடக்கத்தை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் வீதிக்கு வந்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளனர். அதேவேளை ஐ.நாவின் WHO என்ற உலக சுகாதார அமைப்பும் கரோனா மீண்டும் உக்கிரம் அடைவதையிட்டு கவலை தெரிவித்து உள்ளது. உரிய நடவடிக்கைகளை நடைமுடை செய்யாவிடில், அடுத்த மார்ச் மாதத்துள் மேலும் 500,000 உயிர்களை கரோனாவுக்கு இழக்க நேரிடும் […]
அமெரிக்காவும் சீனாவும் தம்மிடம் உள்ள எரிபொருள் கையிருப்பை கூட்டாக சந்தைக்கு விட இணங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் எங்கும் வேகமாக அதிகரித்துவரும் எரிபொருள் விலை உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்ற பயம் காரணமாகவே இவ்வாறு கூட்டாக கையிருப்பை விடுவிக்க அமெரிக்க சனாதிபதி பைடென் சீனா ஜனாதிபதி சீ ஜின் பிங்கிடம் கேட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவசரகால பாவனைக்கென அமெரிக்கா சுமார் 727 மில்லியன் பரல் எண்ணெய்யை பதுக்கி வைக்கிறது. சீனா சுமார் 200 மில்லியன் எண்ணெய்யை […]
நேற்று அமெரிக்க சனாதிபதிக்கும் சீன சனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற இணைய மூல உரையாடலில் (virtual talk), தாய்வான் சீனாவின் அங்கம் என்றும் அதில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது (playing with fire) போன்றது என்று சீன சனாதிபதி பைடெனுக்கு கூறி உள்ளார். சூழல் மாசடைவதை தடுத்தல், வர்த்தகம் போன்ற விசயங்களில் சீனா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முன்வருவதாகவும் ஆனால் தாய்வான் போன்ற விசயங்களில் அமெரிக்கா தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்றும் சீன அரச […]
போலாந்துக்கும் (Poland), பெலரூஸுக்கும் (Belarus) இடையிலான எல்லை குதியில் பல்லாயிரம் அகதிகள் குவிந்து வருகின்றனர். இந்த அகதிகளின் குவிவால் போலாந்து, லித்துவேனியா (Lithuania), லத்வியா (Latvia) ஆகிய நாடுகள் NATO நாடுகளின் உதவியை நாடி உள்ளன. நேட்டோ அணியில் அங்கம் கொண்ட மேற்படி மூன்று நாடுகளும் நேட்டோ அணியின் Article 4 ஐ நடைமுறை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஒரு நேட்டோ நாடு ஆபத்தில் இருந்தால் ஏனைய நேட்டோ நாடுகள் ஆபத்தில் உள்ள நாட்டுக்கு உதவ முன்வரவேண்டும். […]
ஏற்கனவே கொள்வனவு செய்ய இணங்கியபடி ரஷ்யாவின் S-400 என்ற ஏவுகணை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியா வரவுள்ளன என்று ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் 2017ம் ஆண்டு அமெரிக்கா நடைமுறை செய்த சட்டம் ஒன்றின்படி S-400 ஏவுகணையை கொள்வனவு செய்யும் நாடுகளை அமெரிக்கா தண்டிக்கவேண்டும். அந்த சட்டப்படி இந்தியாவையும் அமெரிக்கா தண்டிக்குமா என்பது இதுவரை அறியப்படவில்லை. அமெரிக்காவின் மேற்படி சட்டம் Countering America’s Adversaries Sanctions Act (CAATSA) என்று அழைக்கப்படும். துருக்கி ஒரு […]
அமெரிக்க சனாதிபதி பைடெனும், சீன சனாதிபதி சீ ஜின் பிங்கும் அமெரிக்க நேரப்படி திங்கள் (சீன நேரப்படி செவ்வாய் காலை) இணையம் மூலம் (virtual meeting) உரையாட உள்ளனர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இரு தரப்புமிடையே தற்போது நிலவி வரும் முறுகல் நிலையை இந்த உரையாடல் தணிக்க முனையலாம் என்று கருதப்படுகிறது. பைடென் ஆட்சிக்கு வந்தபின் மேற்கொள்ளும் ஆழமான உரையாடலாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கரோனா, தாய்வான், ஹாங் காங், வர்த்தகம் போன்ற பல […]
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக வளி மாசு உச்ச நிலையில் உள்ளது. இங்கு தற்போது வளி மாசு சுட்டி (AQI அல்லது Air Quality Index) 556 ஆக உள்ளது. AQI சுட்டி 0 முதல் 500 வரையான அளவிலேயே குறிப்பிடப்படும். இந்த அளவீட்டையே மீறி உள்ளது டெல்லி. மிக சுத்தமான வளி 0 சுட்டியை கொண்டிருக்கும். இதனுடன் ஒப்பிடுகையில் கனடாவின் Toronto நகரில் இன்று AQI 3 மட்டுமே. இந்த மாசால் டெல்லியில் […]
உலகின் மிக பெரு நிறுவனங்கள் மூன்று தம்மை சிறு நிறுவனங்களாக துண்டாட உள்ளதாக கூறியுள்ளன. ஜப்பானின் Toshiba, அமெரிக்காவின் General Electric (GE) மற்றும் Johnson & Johnson ஆகிய நிறுவனங்களே தம்மை சிறு நிறுவனங்களாக பிரிக்கவுள்ளன. ஜப்பானின் Toshiba நிறுவனம் 3 சிறிய நிறுவனங்களாக பிரிக்கப்படும். எரிபொருள் மற்றும் கட்டுமான வர்த்தக பிரிவு ஒரு தனி நிறுவனமாகவும், semiconductors பிரிவு இன்னோர் தனி நிறுவனமாகவும், devices மற்றும் storage பிரிவு மூன்றாவது தனி நிறுவனமாகவும் பிரிக்கப்படும். […]
தாய்லாந்தின் அரசர் King Maha Vajiralongkorn, வயது 69, மீண்டும் இரகசியமாக ஜெர்மனி சென்று இனிய வாழ்வை தொடர ஆரம்பித்து உள்ளார் என்கிறது ஜெர்மனியின் Bild என்ற பத்திரிகை. இவர் தன்னுடன் 30 poodle வகை வளர்ப்பு நாய்களையும் எடுத்து சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இவருடன் 250 உதவியாளரும் இந்த கிழமையின் ஆரம்பத்தில் ஜெர்மனி சென்று உள்ளனர் என்று கருதப்படுகிறது. தாய்லாந்தில் இருந்து ஜெர்மனி செல்வோர் தம்மை குறைந்தது 5 தினங்கள் தனிமைப்படுத்துவது அவசியம் என்ற காரணத்தால் […]