முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும் அவரின் குடும்பத்துக்கும் கணக்கியல் சேவைகளை செய்து வந்த Mazars USA என்ற கணக்கியல் நிறுவனம் (accounting firm) தாம் ரம்புடனும், அவரின் குடும்பத்துடனுமான தொடர்புகளை துண்டிப்பதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பு இந்த மாதம் 9ம் திகதி ரம்புக்கு விடுக்கப்பட்டு உள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்தில் ரம்ப் நிறுவனத்தின் கணக்கியல், மற்றும் வரி ஆவணங்களை Mazars USA நிறுவனமே தயாரித்து இருந்தது என்றாலும் அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை […]
இந்தியாவில் இன்னோர் தனியார் நிறுவனம் பல வங்கிகளின் பணத்தை திருடி உள்ளதாக கூறுகிறது இந்திய CBI. குஜராத்தில் இயங்கும் ABG Shipyard என்ற கப்பல் கட்டும் நிறுவனமே இந்திய வங்கிகளில் பெற்ற $3 பில்லியனை திருடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் State Bank of India, ICICI Bank, IDBI Bank, Bank of Baroda, Punjab National Bank உட்பட மொத்தம் 28 வங்கிகளில் $3 பில்லியன் கடனை பெற்று இருந்தது. அந்த கடன்கள் […]
அமெரிக்கரான 32 வயது Jeremy Smith Beijing 2022 Winter ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் hockey அணியின் goalie ஆக விளையாடினார். வியாழக்கிழமை அமெரிக்க அணிக்கும் Jeremy Smith அங்கம் வகிக்கும் சீன அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா 8 க்கு 0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டது. ஆனாலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஜெர்மனிக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியில் ஜெர்மனி 3 புள்ளிகளை பெற, சீனா 2 புள்ளிகளை பெற்றது. சீன hockey […]
Equatorial Guinea என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டில் சீனா தனது விமான மற்றும் கடற்படை தளம் ஒன்றை அமைக்க முயற்சித்து வருகின்றது. அந்த முயற்சி கைகூட உள்ள நிலையில் அதை தடுக்க அமெரிக்க அதிகாரிகள் Equatorial Guinea க்கு அடுத்த கிழமை செல்லவுள்ளனர். சீனா இங்கு தனது படைத்தளத்தை அமைத்தால் அந்த தளம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும் என்பதே அமெரிக்காவின் கவலை. அடுத்த கிழமை அமெரிக்க அதிகாரிகளான Molly Phee மற்றும் மேஜர் […]
அடுத்து வரும் சில மாதங்களில் உத்தர பிரதேசம் உட்பட 5 இந்திய மாநிலங்களில் மாநில தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. ஆனாலும் அவற்றில் உத்தர பிரதேச தேர்தல் பிரதானமானது. பிரதமர் மோதி தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பாரா என்பதை உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் கூறும். உத்தர பிரதேசத்தில் 240 மில்லியன் மக்கள் உள்ளனர். இது ஒரு நாடானால், சனத்தொகை அடைப்படையில், இது உலகத்தின் 5ஆவது பெரிய நாடாக இருக்கும். சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து உத்தர […]
Marinella Beretta என்ற 70 வயது பெண்ணின் உடலை இத்தாலியின் வடக்கு பகுதியில் Lake Como என்ற இடத்து அதிகாரிகள் கண்டெடுத்து உள்ளனர். தனியே வாழ்ந்த இவர் மரணித்து 2 ஆண்டுகளுக்கு மேல். மேற்படி பெண்ணின் வீட்டு தோட்டத்து மரம் ஒன்று அளவுக்கு மிகையாக வளர்ந்து முறிந்து இருந்தது. இதை அவதானித்த அயலவர் அதிகாரிகளுக்கு அறிவித்து உள்ளனர். அந்த வீட்டை அடைந்த அதிகாரிகள் பெண்ணின் வீட்டில் மரணித்த உடலை கண்டுள்ளனர். இந்த செய்தியை Como City அதிகாரி […]
Caixuan Qin என்ற பெண்ணும், Jian Jun Zhu என்ற அவரின் கணவனும் சட்டவிரோத பணத்தை சட்டவிரோத வங்கி ஒன்று மூலம் தூய பணமாக்கும் செயலில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆனால் கணவர் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் கணவர் வான்கூவர் உணவகம் ஒன்றில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். தற்போது கனடிய குடியுரிமை பெற முனையும் மனைவி Qin கனடிய அரசை நீதிமன்றம் இழுக்கிறார். 2015ம் ஆண்டு Silver International Investments என்ற சட்டவிரோத வங்கி […]
நீண்ட காலமாக இந்தியாவின் முதலாவது பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி நேற்று திங்கள் அடானி (Gautam Adani) இந்தியாவின் முதலாவது செல்வந்தர் ஆகியுள்ளார். தற்போது அடானியிடம் $88.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும், அம்பானியிடம் $87.9 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் பெரும்பாலும் திடமான பெறுமதியை கொண்டிராத பங்கு சந்தை பங்குகளே. அம்பானி பெருமளவு முதலீட்டை Facebook நிறுவனத்தில் செய்திருந்தார். அண்மையில் Facebook நிறுவன பங்கு பெரும் வீழ்ச்சி அடைந்த போது அம்பானியின் வெகுமதியும் […]
தற்போது பெய்ஜிங்கில் இடம்பெறும் 2022 Winter ஒலிம்பிக் போட்டியில் சீன கொடியின் கீழ் விளையாடும் பல சீன விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் பிறந்த இரண்டாம் சந்ததியினரே. சீனாவின் மிகையான வளர்ச்சி இவர்களை சீனா சார்பில் விளையாட தூண்டி உள்ளது. Eileen Gu என்ற 18 வயதான freestyle skier பெண் வீரர் அமெரிக்காவின் San Francisco நகரில் பிறந்த அமெரிக்கர். இவரின் தாய் சீனர், தந்தை அமெரிக்கர். ஆனால் சீன கொடியின் கீழ் விளையாடும் நோக்கில் இவர் […]
இரண்டு கரோனா தடுப்பு ஊசிகளை பெற்ற வெளிநாட்டவருக்கு அஸ்ரேலியாவுள் நுழைய பெப்ரவரி 21ம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளின் பின் அஸ்ரேலியா வெளிநாட்டவரை அனுமதிக்கவுள்ளது. உல்லாச பயணிகள் மட்டுமன்றி அங்கு கல்வி பயில விரும்பும் மாணவர்களையும் அழைக்கிறது அஸ்ரேலியா. சீனாவில் இருந்து பெருமளவு மாணவர் அஸ்ரேலியா செல்வதுண்டு. நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாட்டவர் ஏற்கனவே அஸ்ரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய தடுப்பு மருந்துகள் மட்டுமா ஏற்றுக்கொள்ளப்படும், அல்லது […]