இந்தியா மீண்டும் அணிசாரா கொள்கையில்

இந்தியா மீண்டும் அணிசாரா கொள்கையில்

தற்போது உக்கிர முறுகல் நிலையில் உள்ள யுக்கிரைன் விசயத்தில் இந்தியா மீண்டும் அணிசாரா கொள்கையை கடைப்பிடிக்க முயல்கிறது. ஆனால் அந்த கொள்கை எவ்வளவுக்கு பயனளிக்கும் என்பது இந்தியாவுக்கே தெரியாது. யுக்கிரைன் விசயத்தில் இந்தியா பழைய நண்பனான ரஷ்யாவையும், புதிய நண்பனான அமெரிக்காவையும் பகைக்காமல் இருக்கும் நோக்கிலேயே ஆழமான கருத்து எதையும் கூறாமல் மௌனம் சாதிக்கிறது. ஆனாலும் மேற்கு இந்தியா ரஷ்யாவை கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.  குறிப்பாக யுக்கிரைன் வெளியுறவு அமைச்சர் Kuleba இந்தியா ரஷ்யாவின் செய்கைகளை […]

பூட்டின் ஒரு Genius, முன்னாள் சனாதிபதி ரம்ப் புகழாரம்

ரஷ்ய சனாதிபதி பூட்டின் அண்டை நாடான யுக்கிரைனுள் நுழைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஒரு “genius” என்று புகழ்பாடி உள்ளார். அத்துடன் வழமை போல் கூடவே தற்போதைய சனாதிபதி பைடெனை சாடியும் உள்ளார். பூட்டின் யுக்கிரைனுள் நுழைந்ததை அறிந்த போது தான் “How smart is that?” கேட்டுக்கொண்டதாகவும் ரம்ப் கூறியுள்ளார். அத்துடன் பூட்டினின் செயலை “pretty savvy” என்றும் புகழ்ந்துள்ளார் ரம்ப். அத்துடன் தான் பதவியில் […]

கிழக்கு யுக்கிரைனை சுதந்திர பகுதிகளாக பூட்டின் ஏற்பு

கிழக்கு யுக்கிரைனை சுதந்திர பகுதிகளாக பூட்டின் ஏற்பு

ரஷ்ய ஆதரவுடன் யுக்கிரைனின் (Ukraine) கிழக்கு பகுதிகளில் (Donetsk மற்றும் Luhansk) சுதந்திரம் கேட்டு போராடிய பகுதிகளை ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் இன்று திங்கள் சுதந்திர பகுதிகளாக ஏற்று கொண்டுள்ளார். இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, நேட்டோ விசனம் கொண்டுள்ள. அத்துடன் சுதந்திர பகுதிக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க ரஷ்ய படைகளையும் அனுப்புமாறு தனது இராணுவத்துக்கு கட்டளையும் இட்டுள்ளார் பூட்டின். இப்பகுதிகள் பெரும்பாலும் ரஷ்ய மொழிபேசும் மக்களை கொண்டன. இங்கு இயங்கும் ஆயுத குழுக்களுக்கு ரஷ்யாவே ஆயுதங்களையும், […]

பெய்ஜிங் Winter ஒலிம்பிக் 2022 நிறைவு

பெய்ஜிங் Winter ஒலிம்பிக் 2022 நிறைவு

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற Winter 2022 ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங் நேரப்படி இன்று ஞாயிறு நிறைவு பெறுகின்றன. கரோனா மத்தியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பார்வையாளர் இன்றி இந்த போட்டிகள் இடம்பெற்றன. நோர்வே 16 தங்க பதக்கங்களையும் 8 வெள்ளி பதக்கங்களையும், 13 பித்தளை பதக்கங்களையும் வென்று முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 12 தங்க பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும், சீனா 9 தனங்க பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்திலும் உள்ளன. 2018ம் ஆண்டு இடம்பெற்ற […]

கனடாவில் 3 கல்லூரிகள் மூடல், இந்தியா விசனம்

கனடாவில் 3 கல்லூரிகள் மூடல், இந்தியா விசனம்

கனடாவின் மொன்றியால் நகர் பகுதியில் இயங்கி வந்த CCSQ College (in Longueuil), M. College (in Montreal), CDE College (in Sherbrooke) ஆகிய 3 கல்லூரிகளும் திடீரென மூடப்பட்டு உள்ளன. இந்த 3 கல்லூரிகளும் Rising Phoenix International Inc. என்ற நிறுவனத்துக்கு சொந்தமானவை. மேற்படி கல்லூரிகள் மூடப்பட்டதால் சுமார் 2,000 இந்திய மாணவர்கள் தமது கட்டுப்பணத்தை இழந்து உள்ளனர் என்று கூறுகிறது கனடாவில் உள்ள இந்திய தூதுவரகம். அத்துடன் தாம் கனடிய மத்திய […]

நேரு காலத்தை புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர் மீது மோதி அரசு விசனம்

நேரு காலத்தை புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர் மீது மோதி அரசு விசனம்

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஒரு காலத்தில் நேருவை கொண்ட இந்திய Lok Sabha வில் இன்று சுமார் அரைப்பங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் criminal குற்றச்சாட்டு வழக்குகளை கொண்டவர்கள் என்று கூறியுள்ளார். அவரின் கூற்று “almost half the MPs in the Lok Sabha have criminal charges pending against them” என்றுள்ளார். Lee குறிப்பிட்டது இன்னோர் அமைப்பின் அறிக்கையே. அந்த அறிக்கை இந்தியாவில் 43% பாராளுமன்ற உறுப்பினர் […]

மின் உற்பத்திக்கு 3 தினங்களுக்கே Diesel உண்டு

மின் உற்பத்திக்கு 3 தினங்களுக்கே Diesel உண்டு

இலங்கையில் Diesel மூலமான மின் உற்பத்தி பயன்பாட்டுக்கு 3 தினங்களுக்கு போதுமான diesel எரிபொருளே உண்டு என்று கூறப்படுகிறது. அதனால் நாட்டில் மின்வெட்டு தொடரும் என்று நம்பப்படுகிறது. கொழும்புக்கு வடக்கே உள்ள Kelanitissa Power plant, Mathugama, Kolonnawa, Thulhiriya ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்தி செய்யாது உள்ளன. அதனால் மொத்தம் 363 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டு உள்ளது. சிறு தொகை மேலதிக diesel பெப்ரவரி 20ம் திகதி வரவுள்ளது என்றும் எரிபொருள் […]

3,965 ஆடம்பர கார்களுடன் எரியும் கப்பல்

3,965 ஆடம்பர கார்களுடன் எரியும் கப்பல்

மொத்தம் 3,965 விலை உயர்ந்த ஆடம்பர ஐரோப்பிய கார்களுடன் Felicity Ace என்ற 650 அடி நீள கார் காவும் கப்பல் அத்திலாந்திக் சமுத்திரத்தில் எரிகின்றது. மிகையான தீ காரணமாக அந்த கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களும் போர்த்துக்கல் கடற்படையினால் மீட்கப்பட்டு உள்ளனர். கப்பலோட்டிகள் எவரும் இல்லாத நிலையில் கப்பல் தொடர்ந்தும் Azores தீவுகளுக்கு அருகில் எரிகிறது. கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப கப்பல் இழுபட்டும் செல்கிறது. இந்த கப்பலில் 1,100 விலை Porsche கார்களும், 189 Bentley […]

சவுதியில் 30 பதவிகளுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

சவுதியில் 30 பதவிகளுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

சவுதி அரேபியா அண்மை காலங்களில் பெண்களை பொது பணிகளுக்கு அமர்த்த முன்வந்துள்ளது. அதன்படி 30 பெண் ரயில் சாரதிகளை பணிக்கு அமர்த்த முன்வந்தது. அந்த 30 இடங்களுக்கு மொத்தம் 28,000 சவுதி பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த சாரதிகள் சவுதி நகரங்களான Mecca வுக்கும் Medina வுக்கும் இடையில் அதிவேக ரயில்களை செலுத்துவர். இவ்வகை பணிகளுக்கு பெண்கள் அமர்த்தப்படுவது இதுவே முதல் தடவை. மேற்படி ரயில் சேவையை சவுதியில் இயக்கவுள்ள ஸ்பெயின் நாட்டு நிறுவனமான Renfe இந்த […]

மூடி உடைய, கிணற்றுள் வீழ்ந்து 13 பேர் பலி

மூடி உடைய, கிணற்றுள் வீழ்ந்து 13 பேர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட 13 பெண்களும், சிறுமிகளும் கிணறு ஒன்றுள் வீழ்ந்து பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று புதன் மாலை 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்ட இவர்கள் கிணற்றை மூடி இருந்த இரும்பு தட்டு ஒன்றில் அமர்ந்து உள்ளனர். பாரம் அதிகமாக தட்டு உடைந்து கிணற்றுள் வீழ்ந்துள்ளது. கூடவே அதில் இருந்தோரும் வீழ்ந்து பலியாகினர். ஒவ்வொரு மணித்தோர் குடும்பங்களுக்கும் 4 லட்சம் உதவி […]