Academy Award ஆஸ்கர் மேடையில் Will Smith என்ற நடிகர் பரிசு வழங்களில் ஈடுபட்டு இருந்த Chris Rock என்பவரை கன்னத்தில் வன்மையாக அறைந்து தாக்கி உள்ளார். முதலில் இது ஒரு நடிப்பு நிகழ்வு என்று கருதப்பட்டாலும் விரைவில் வன்முறை உண்மை என்பது தெரிய வந்துள்ளது. Will Smith தின் மனைவி Jada Pinkett 2018ம் ஆண்டு alopecia என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவரின் தலைமுடி உதிர்ந்து இருந்தது. அதை Chris Rock நையாண்டி […]
கனடாவில் களவாடப்பட்ட பல ஆடம்பர கார்கள் நைஜீரியா, கானா (Ghana) போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அறிந்துள்ளது Marketplace என்ற புலனாய்வு செய்தி அமைப்பு. சில களவாடப்பட்ட கனடாவின் Ontario மாகாணத்து வாகனங்கள் Ontario மாகாணத்தில் வழங்கப்பட்ட பதிவு தகடுகளுடன் (license plates) நைஜீரியாவில் விற்பனைக்கு இருந்துள்ளன. அதில் ஒன்று CTBC 474 என்ற Ontario தகட்டை கொண்டுள்ளது. கனடாவில் களவாடப்பட்ட 2018 Lexus RX 350 வாகனம் […]
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்க் ஈ (Wang Yi) இன்று இந்தியா சென்றுள்ளார். அங்கு அவர் பல இந்திய அதிகாரிகளுடன் இன்று வெள்ளி உரையாடி உள்ளார். சீன அமைச்சரின் நோக்கம் இந்திய-சீன உறவை நலப்படுத்துவது என்றாலும், இந்திய எல்லையோரம் உள்ள சீன படைகளின் தொகை இந்தியாவுக்கு இடராக உள்ளது. சீன அமைச்சரின் திடீர் இந்திய பயணம் நேற்று வியாழன் இடம்பெற்றது. 2020ம் ஆண்டு Ladakh பகுதியில் இடம்பெற்ற சீன-இந்திய இராணுவங்களுக்கு இடையேயான வன்முறைகளுக்கு பின் சீன உயர் […]
ரஷ்யாவுக்கு எதிரான நாடுகள் தாம் கொள்வனவு செய்யும் ரஷ்ய எரிவாயுவை ரஷ்யாவின் நாணயமான ரூபெல் (Ruble) மூலமே கொள்வனவு செய்யலாம் என்று ரஷ்ய சனாதிபதி பூட்டின் இன்று கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான், நோர்வே ஆகியன எதிரி நாடுகள் பட்டியலில் அடங்கும். ரஷ்யா யுகிரைனை தாக்க ஆரம்பித்த பின் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பாரிய தடைகளை விதிக்க ஆரம்பித்தன. அதனால் ரஷ்ய நாணயத்தின் பெறுமதி வெகுவாக வீழ்ச்சி அடைந்தது. வீழ்ச்சி அடைந்த தனது […]
இலங்கை சீனாவிடம் இருந்து மேலும் $2.5 பில்லியன் கடன் பெறவுள்ளதாக திங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் $1 பில்லியன் கடனாகவும் (loan), மிகுதி $1.5 பில்லியன் credit line ஆகவும் இருக்கும். இந்த செய்தியை இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்து உள்ளார். இந்தியாவிடம் இருந்து $1 பில்லியன் கடன் பெற்ற பின்பே இலங்கை இந்த புதிய கடனை சீனாவிடம் இருந்து பெறுகிறது. போதிய அந்நியசெலவாணி இன்மையால் இலங்கை உணவு, எரிபொருள், […]
China Eastern என்ற சீன விமான சேவைக்கு சொந்தமான Boeing 737-800 வகை விமானம் ஒன்று இன்று 132 பேருடன் வீழ்ந்து உள்ளது. சீனாவின் தென் மேற்கே உள்ள Kunming என நகரத்தில் இருந்து Guangzhou சென்ற விமானமே வீழ்ந்து உள்ளது. இன்று 13:11 மணிக்கு Kunming நகரில் பயணத்தை ஆரம்பித்த Flight MU5735 Guangzhou நகரை 15:05 மணிக்கு அடைய இருந்தது. பயணத்தை ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் […]
பூட்டினின் யுகிரைன் மீதான யுத்தத்தை கட்டுப்படுத்த சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்கா. இன்று வியாழன் வெள்ளைமாளிகை தெரிவித்த கூற்றுப்படி பைடென் நாளை வெள்ளிக்கிழமை சீனாவின் சனாதிபதி சீயுடன் இது தொடர்பாக உரையாடவுள்ளார். யுகிரைன் மீதான யுத்தம் காரணமாக ரஷ்யாவை பொருளாதார வழிகளில் தண்டிக்கின்றன அமெரிக்காவும் மேற்கும். அந்த தண்டனைகளில் இருந்து தப்ப பொருளாதாரத்தில் பலமான சீனாவின் உதவியை நாடுகிறது ரஷ்யா. அதையே தடுக்க முனைகிறார் பைடென். அத்துடன் சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதையும் தடுக்க முனைகிறது அமெரிக்கா. […]
ஜப்பானில் புதன்கிழமை இரவு 7.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இப்பகுதியிலேயே 2011ம் ஆண்டு 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இரவு 11:36 மணிக்கு இடம்பெற்ற இந்த நடுக்கத்தின் மையம் Fukushima கரையோரம், 60 km ஆழத்தில் இருந்துள்ளது. இந்த நடுக்கத்துக்கு டோக்கியோ நகரும் உள்ளாகி இருந்தது. நடுக்கத்தின் விளைவாக 1 மீட்டர் (3.3 அடி) சுனாமி ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுவரை பெரும் பாதிப்புகள் எதுவும் பதியப்படவில்லை என்றாலும், […]
ரஷ்ய சனாதிபதி பூட்டினின் நண்பரான Roman Abramovich சட்டவிரோத முறையில் பல பில்லியன் ரஷ்ய மக்கள் பணத்தை சூறையாடி உள்ளார் என்கிறது Panorama அமைப்பு. 1995ம் ஆண்டு ரஷ்ய அரசுக்கு சொந்தமான Sibneft என்ற எண்ணெய் நிறுவனத்தை Roman, பொய் ஏலம் மூலம், $250 மில்லியனுக்கு ($0.250 பில்லியன்) கொள்வனவு செய்திருந்தார். பின்னர் இதை 2005ம் $13 பில்லியனுக்கு மீண்டும் ரஷ்ய அரசுக்கு விற்பனை செய்திருந்தார். தற்போது யுக்கிரைனில் இடம்பெறும் யுத்தம் காரணமாக Roman மீதும் மேற்கு […]
அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ யுக்கிரைன-ரஷ்யா யுத்தத்தில் பங்கெடுப்பது மூன்றாம் உலக யுத்தமாகும் என்று கூறியுள்ளார் அமெரிக்க சனாதிபதி பைடென். அதனால் அமெரிக்க அல்லது நேட்டோ படைகள் யுக்கிரைன் யுத்தத்தில் பங்கெடுக்க என்று பைடென் திடமாக கூறியுள்ளார். அது மட்டுமன்றி அமெரிக்கா யுக்கிரைன் மீது no-fly zone உருவாக்கி ரஷ்ய யுத்த விமானங்களையும் தடுக்காது என்றும் பைடென் கூறியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை Philadelphia நகரில் தனது கட்சி ஆதரவாளர் மத்தியில் பேசுகையிலேயே பைடென் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்ய […]