ரஷ்யாவுக்கு ஆதரவாக ஐரோப்பியாவில் உள்ள நாடான சேர்பியாவுக்கு (Serbia) இன்று வியாழன் சீனா 6 பெரிய விமானங்களில் ஏவுகணைகள் அனுப்பி உள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளன அமெரிக்காவும் மேற்கு நாடுகளும். Y-20 என்ற சீன இராணுவ விமானங்களே சீனா தயாரித்த HQ-22 (Hong Qi 22) வகை ஏவுகணைகளை காவி சென்றுள்ளன. நிலத்தில் இருந்து வானத்துக்கான இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் Patriot அல்லது ரஷ்யாவின் S-300 வகை ஏவுகணைகளுக்கு நிகரானவை. யுகிரேனில் ரஷ்யா யுத்தம் செய்யும் வேளையில் […]
சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 174 வாக்குகள் பெற்று இம்ரானை பதவியில் இருந்து நீக்குகிறது. அவையின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 342 மட்டுமே. இந்த தீர்மானத்தின்படி அவை புதியதோர் பிரதமரை திங்கள் தெரிவு செய்யும். எதிர்க்கட்சி தலைவரான Shehbaz Sharif என்பவர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. இவர் முன்னாள் பிரதமர் Nawaz Sharif இன் சகோதரர். தெரிவி செய்யப்படவுள்ள பிரதமர் 2023ம் ஆண்டு […]
Rishi Sunak பிரித்தானியாவின் Chancellor of the Exchequer. இவர் ஒரு Boris Johnson ஆதரவாளர். இவரின் மனைவி Akshata Murty தனது வருமானத்துக்கு பிரித்தானிய வரி செலுத்த தவறியமை தற்போது கணவனின் அரசியலுக்கு குந்தகமாக அமைத்துள்ளது. Akshata இந்தியாவின் InfoSys என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்த நாராயண மூர்த்தி என்பவரின் மகள். மகளுக்கு தந்தையின் InfoSys நிறுவனத்தில் சுமார் $1 பில்லியன் பெறுமதியான பங்குகள் உண்டு. அந்த பங்குகள் மூலம் பெற்ற வருமானத்துக்கே Akshata பிரித்தானிய […]
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் அழிந்து வருகிறது. சட்டப்படியான வங்கிகள் தற்போது அமெரிக்க டாலர் ஒன்றுக்கு சுமார் 315 ரூபாய்களை வழங்கி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை நாணயம் சுமார் 57% வீழ்ச்சியை அடைந்து உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன் டாலர் ஒன்றுக்கு வங்கிகள் சுமார் 200 ரூபாய்களை வழங்கியிருந்தன. தற்போது 315 ரூபாய்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த மாதம் 18ம் திகதி (ஏப்ரல் 18, 2022) இலங்கைக்கு அடுத்த நெருக்கடியான மிக்க […]
இந்தியா வழங்கும் 36,000 தொன் பெட்ரோலும், 40,000 தொன் டீசலும் இன்று புதன் இலங்கை வந்துள்ளன என்று கூறுகிறது இலங்கையில் உள்ள இந்திய தூதரகம். மேற்படி எரிபொருள் இரண்டு தொகுதிகளாக இலங்கை வந்துள்ளன. இன்றைய வரவுடன் இந்தியா வழங்கிய எரிபொருள் அளவு 270,000 தொன் ஆக உள்ளது. இந்த உதவி இந்தியாவின் $500 மில்லியன் எரிபொருள் Line of Credit சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. முன்னாள் கிறிக்கெட் வீரரான அர்ஜுனா ரணதுங்க எரிபொருள் வழங்கும் இந்தியாவை பாராட்டி […]
முதல் முறையாக அமெரிக்க டாலர் ஒன்றுக்கு இலங்கை ரூபா 300 க்கும் அதிகமாக தற்போது கிடைக்கிறது. சட்டப்படியான வங்கிகள் இத்தொகையை வழங்கும் அதேவேளை தனியார் உண்டியல்கள் சில இடங்களில் 400 ரூபாய் வரை வழங்குகின்றன. தற்போது இலங்கையிடம் உள்ள அந்நிய செலவாணி சுமார் $2 பில்லியன் மட்டுமே. ஆனால் இந்த ஆண்டு முடிவடைதற்குள் இலங்கை சுமார் $7 பில்லியன் கடனை அடைக்கவேண்டும். அதற்கான பணம் தற்போது இலங்கையிடம் இல்லை. ஏற்றுமதி, உல்லாச பயண மற்றும் மத்திய கிழக்கு […]
ரஷ்ய சனாதிபதி ஒரு war criminal என்கிறார் அமெரிக்க சனாதிபதி பைடென். பைடென் இன்று திங்கள் தனது உரையில் பூட்டினுக்கு எதிராக war criminal வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் பைடென் கூறியுள்ளார், அதாவது International Criminal Court (ICC) இதை விசாரணை செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கா தான் ICC அமைப்பில் அங்கத்துவம் கொள்ள மறுப்பதுடன், ICC அதிகாரிகள் அமெரிக்கா சென்று அமெரிக்கர்களை war crime குற்றங்களுக்காக விசாரணை செய்வதை தடுத்து […]
இலங்கை சனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ வதிவிடத்தை ஆர்பாட்டக்காரர் இன்று வியாழன் இரவு முற்றுகை இட்டு உள்ளனர். பலர் கல் போன்ற பொருட்களை வீசி வன்முறையில் ஈடுபட்டும் உள்ளனர். அதனால் கொழும்பின் பல பகுதிகள் மறு அறிவிதல்வரை ஊரடங்கு சட்டத்தில் உள்ளன. Go home Gota, Gota is a dictator என்றெல்லாம் ஆர்பாட்டக்காரர் குரல் கொடுத்து உள்ளனர். குறைந்தது ஒரு பாதுகாப்பு படையின் பஸ் தீயிடப்பட்டு உள்ளது. கொழும்பு வடக்கு, மத்தி, தெற்கு, களனி, நுகேகொட பகுதிகளே […]
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை சந்திக்கிறார். இவரை இதுவரை ஆதரித்த Pakistan Tehreek-e-Insaf (PTI) எதிராணியுடன் இணைந்ததாலேயே இம்ரான் கான் அரசியல் ஆபத்தை எதிர்கொள்கிறார். அதேவேளை தனக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் திட்டமிட்டு சதி செய்கின்றன என்கிறார் இம்ரான் கான். அதற்கு உடந்தையாக எதிர் கட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மை காலங்களில் இம்ரான் அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்தார். யுக்கிரைன் யுத்தம் ஆரம்பித்த […]
இலங்கையில் வியாழன் (31-03-2022) 13 மணி நேர மின்வெட்டு இடம்பெறவுள்ளது. இந்த 13 மணி நேர மின்வெட்டு 3 கட்டங்களாக இடம்பெறலாம். ABCDEF பகுதிகளில் 3:00 am முதல் 6:00 am வரையும், 12:00 pm முதல் 4:00 பின் வரையும், 6:00 pm முதல் 12:00 am வரையும் மின்வெட்டு இடம்பெறும். GHIJKL பகுதிகளில் 12:00 am முதல் 3:00 am வரையும், 8:00 am முதல் 12:00 am வரையும், 4:00 pm முதல் […]