இலங்கை அவசர உதவியை IMF அமைப்பிடம் இருந்து எதிர்பார்த்தாலும், அவ்வாறு விரைவில் உதவிகள் வழங்கப்படாது என்று IMF கூறி உள்ளது. IMF கூற்றுப்படி விரிவான உரையாடல்கள் செய்து (extension discussions), நிலைக்கக்கூடிய (sustainable) திட்டங்களை அறிந்து, உறுதி (assurances) மொழிகளை பெற்ற பின்னரே உதவிகள் வழங்கப்படும். இந்த கருத்தை இலங்கைக்கான IMF அதிகாரி Masahiro Nozaki இன்று கூறியுள்ளார். அத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவே அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு Rapid Financing Instrument (RFI) என்ற […]
சீனா அண்மையில் சாலமன் (Solomon) தீவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தால் விசனம் கொண்ட அமெரிக்காவும் Kurt Campbell, Daniel Kritenbrink ஆகிய அமெரிக்க அதிகாரிகளை சாலமன் தீவுக்கு அனுப்புகிறது. சீனாவுடன் சாலமன் தீவுகள் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையை தடுப்பதே இவர்களின் நோக்கம். அமெரிக்காவின் அதிகாரியான Ned Price என்பவரும் இந்த இணக்கம் “leaves the door for the deployment of P.R.C. military” என்றுள்ளார். சில தினங்களுக்கு முன் அஸ்ரேலியாவும் தனது அதிகாரிகளை சாலமன் […]
இலங்கை அதிகாரிகள் இன்று திங்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் (Washington DC) உதவி தேடி சந்திக்கின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின் IMF உதவியை நாடுவது இது 17 ஆவது தடவை. ஏனைய நாடுகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் இலங்கை உதவி பெற்றது இதில் அடங்காது. தற்போது இலங்கை $4 பில்லியன் உதவியை IMF இடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் IMF இலகுவில் பணத்தை அள்ளி வழங்காது. தனது எல்லா கடன்களையும் அடைக்க இலங்கை திட்டம் கொண்டுள்ளதா […]
Rasmus Paludan என்ற கடும்போக்கு வலதுசாரியும் குடிவரவாளரை எதிர்பவரும் இஸ்லாமிய குர்ரானை எரித்தால் சுவீடன் நகரங்களில் வன்முறைகள் தலைதூக்கி உள்ளன. இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வியாழனும், வெள்ளியும் குறைந்தது 16 போலீசார் காயமடைந்து உள்ளனர். சனிக்கிழமை Malmo என்ற இடத்தில் பல வாகனங்கள் தீயிடப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமை Norrkoping என்ற இடத்தில் வன்முறைகளுக்கு 3 பேர் காயமடைந்து உள்ளனர். Paludan தான் மேலும் பல தடவைகள் குரானை எரிக்க உள்ளதாக கூறியுள்ளார். இவர் […]
ரஷ்யாவுடன் போராடும் யூகிரேனுக்கு மேற்கு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, பெருமளவு இராணுவ உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை ரஷ்யா உத்தியோகபூர்வமாக தனது கண்டனத்தையும் அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளது. அதில் “most sensitive” ஆயுதங்கள் வழங்கப்படுவதால் “unpredictable consequences” இடம்பெறும் என்று ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதையும் அளித்திருக்கவில்லை. யுகிரேனிய இராணுவம் ரஷ்ய இராணுவத்துக்கு பாரிய இழப்புகளை வழங்குகின்றன என்பதற்கு பதிலாக அமெரிக்கா அண்மையில் யூகிரேனுக்கு வழங்கிய ஜாவலின் (Javelin) போன்ற tank தாக்கும் […]
தான் பெற்ற கடன்களை திருப்பி அடைக்க முடியாது என்று கையை உயர்த்தும் இலங்கை அரசு இலங்கையின் Srilankan விமான சேவைக்கு குத்தகை (lease) அடிப்படையில் மேலும் 21 பெரிய விமானங்களை பெற முனைகிறது. Srilankan விமான சேவை இலாபத்தில் இயங்கும் விமான சேவை அல்ல. 2020ம் ஆண்டில் இது $1.56 பில்லியனுக்கு நட்டத்தில் இயங்கி இருந்தது. இலங்கை மட்டுமல்லாது, Srilankan விமான சேவையும் முறியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மேலும் 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற […]
தென் பசுபிக் கடலில் உள்ள Solomon தீவு சீனா வசமாவதை தடுக்க அஸ்ரேலிய அமைச்சர் Zed Seselja என்பவர் Solomon தீவுக்கு விரைந்துள்ளனர். அஸ்ரேலிய பிரதமர் Scott Morrison இந்த செய்தியை புதன்கிழமை உறுதி செய்துள்ளார். அஸ்ரேலியாவின் International Development அமைச்சரே Solomon தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் மாதம் 1ம் திகதி சீனாவும், Solomon தீவும் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையை முறியடிப்பதே அஸ்ரேலியாவின் நோக்கம். ஏப்ரல் மாதம் 1ம் திகதி செய்து கொண்ட உடன்படிக்கையின்படி […]
தற்போது பொருளாதார இடரில் உள்ள இலங்கைக்கு அண்டை நாடான இந்தியா 40,000 தொன் டீசலும், 36,000 தொன் பெட்ரோலும் ‘கடன்’ அடிப்படையில் வழங்கி இருந்தது – நன்கொடையாக அல்ல, கடன் அடிப்படையில். இந்தியாவின் இந்த கடன் வழங்களால் பூரித்துப்போன இலங்கையின் முன்னாள் Cricket விளையாட்டு வீரர் அர்ஜுணா ரணதுங்க இந்தியாவை இலங்கையின் மூத்த அண்ணன் என்று புகழ்பாடி உள்ளார். இதே மூத்த அண்ணன் 1987ம் ஆண்டும் இலங்கையின் வடபகுதிக்கு, குறிப்பாக வடமராச்சி பகுதிக்கு, பருப்பு, சமையல் எண்ணெய் […]
அரச bond கடன் அடைத்தலை நிறுத்துகிறது என்று இன்று செய்வாய் இலங்கை அரசு கூறியுள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய தேவையான பணம் இல்லாத நிலையில் கடன்களை அடைப்பது தொடர்பாக அக்கறை கொள்ள முடியாது என்கிறது இலங்கை அரசு. அரசின் இந்த முடிவு ஓரளவுக்கு நியாயமானதாகவே கருதப்படுகிறது. கையிருப்பில் உள்ள பணத்தில் ஒருபகுதி கடனை அடைத்து பின் மிகுதி கடனில் முறிவதுடன் ஒப்பிடுகையில் மொத்த கடனுக்கும் முறிவதே புத்திசாலித்தனம். வெள்ளைக்கொடி தூக்குவது உறுதி என்றால் முடிந்த அளவு […]
அமெரிக்க சனாதிபதி பைடெனும், இந்திய பிரதமர் மோதியும் இன்று திங்கள் இணையம் மூலம் உரையாடி உள்ளனர். இந்த உரையாடலை தொடர்ந்து இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும், வெளியுறவு அமைச்சர்களும் நேரடியாக சந்தித்து உரையாடி உள்ளனர். இம்முறை உரையாடல்களில் ரஷ்ய-யுகிரைன் யுத்தமே பிரதான பங்கை கொண்டிருந்தது. இந்தியா தொடர்ந்தும் ரஷ்யாவை கண்டிக்காதது, ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள், எரிபொருள் கொள்வனவு செய்வது என்பன அமெரிக்காவுக்கு வெறுப்பை அளிக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெறும் எண்ணெய்யை நிறுத்த அமெரிக்கா கூறும் காலத்தில் […]