இன்று இடம்பெற்ற தேர்தலில் இம்மானுவேல் மகிறோன் (Emmanuel Macron) மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார். இம்முறை இவர் சுமார் 58% வாக்குகளை பெறுகிறார். 2017ம் ஆண்டு இவர் 66% வாக்குகளை பெற்று இருந்தார். இவர் தனது ஆதரவை பெருமளவில் இழந்து இருந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.ஏனைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மகிறோன் வெற்றியால் நிம்மதி அடைந்துள்ளனர். இவருக்கு எதிராக போட்டியிட்ட National Rally (NR) கட்சியின் Le Pen சுமார் 42% வாக்குகளை பெறுகிறார். National Rally […]
Facebook பொய்களின் தளம். மனிதரை மடையார் ஆக்கும் வல்லமை கொண்டது Facebook. ராஜபக்ச குடும்பம் இலங்கை மக்கள் பணத்தை அபகரித்ததை அறிய மக்கள் ஆவலாக உள்ள காலத்தில் சில விசமிகள் சூடான பொய் செய்திகளை பரப்பி கூதல் காய்கிறார்கள். தம்மை ‘anonymous hackers’ என்று கூறும் பொய் செய்தி புனைவோர் ராஜபக்ச குடும்ப சொத்துக்கள் என்று கூறி ஒரு பட்டியலை தயாரித்து உள்ளார்கள். அதில் சில ஏற்கனவே வேறு செய்திகளில் புகைப்படம் போன்ற சில ஆதரங்களுடன் வந்தன. […]
கனடாவின் Liberal, Conservative, NDP கட்சி பதவிகளில் குந்தி இருப்போரும், குந்தி இருக்க கனவு கொள்வோரும் கனடா ஒரு நேர்மை மிக்க நாடு, ஆக்கிரமிக்கப்படும் இலங்கை தமிழர் போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் நாடு என்றெல்லாம் புகழ் பாடுகின்றனர். உண்மையில் இந்த தமிழருக்காக கனடிய கட்சிகள் ஊளையிடுவது தமிழரின் வாக்குகளை பெற மட்டுமே. தமிழரிலும் கேவலமாக ஆக்கிரமிக்கப்படும் பாலஸ்தீனர் சார்பில் கனடிய கட்சிகளோ, அந்த கட்சிகளில் தொங்கும், தொங்க முனையும் தமிழ் பாத்திரங்களே என்றைக்கும் பாலஸ்தீனர் சார்பில் […]
பண நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு $300 மில்லியன் முதல் $600 மில்லியன் வரையிலான உதவியை வழங்க இன்று வெள்ளி உலக வங்கி முன்வந்துள்ளது. இந்த உதவி அடுத்த 4 மாத காலத்தில் மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மட்டும் பயன்படுத்தப்படும். IMF உதவி வழங்குவதற்கு சில காலம் தேவைப்படும் என்று கூறப்பட்ட நிலையிலேயே உலக வங்கியின் உதவி கிடைக்கவுள்ளது. அதேவேளை இந்தியா மேலும் $500 மில்லியன் உதவியை எரிபொருள் கொள்வனவுக்கு வழங்கும். மேலும் $1 […]
தற்போது இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் ஜான்சன் (Boris Johnson) இந்திய பிரதமர் மோதியுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளார். ஆனாலும் இந்த உடன்படிக்கை விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த உடன்படிக்கை இந்தியா இலகுவில் பிரித்தானிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவை அதிகரிக்கவும் விரும்புகிறது. இந்தியா விதிக்கும் அதிக அளவிலான இறக்குமதி வரிகள் காரணமாக தம்மால் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று […]
சீனாவில் கல்வி கற்று, கரோனா காரணமாக இலங்கை திரும்பிய மாணவர்களில் சிலரை மீண்டும் சீனாவுக்கு அழைத்து அவர்களின் படிப்பை தொடர இடமளிக்கவுள்ளது சீனா. இந்த அறிவிப்பு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் வியாழன் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்திய மாணவர் எப்போது மீண்டும் சீனா செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. சுமார் 20,000 இந்திய மாணவர் சீன பல்கலைக்கழகங்களில் உயர் படிப்பை செய்கின்றனர். இவர்களில் அதிகமானோர் வைத்திய படிப்பை செய்கின்றனர். தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற […]
தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் நிருபமா ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான பண விசாரணைகள் புதைத்து மறைக்கப்படுகின்றன என்று Pandora அறிக்கையை வெளியிட்ட International Consortium of Investigative Journalism (ICIJ) கூறியுள்ளது. கடந்த ஆண்டு ICIJ இலங்கையின் முன்னாள் உதவி அமைச்சரும், முன்னாள் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நிருபமா ராஜபக்சவும் அவரின் தமிழ் கணவர் திருக்குமரன் நடேசனும் முகந்தெரியாத நிறுவனங்கள் மூலம் $18 மில்லியன் பணத்தை வெளிநாட்டுகளில் ஒளித்து வைத்துள்ளதாக கூறி […]
Netflix என்ற இணையம் மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் (streaming) நிறுவனம் இன்று நியூ யார்க் பங்கு சந்தையில் (Nasdaq) சுமார் $60 பில்லியனை இழந்துள்ளது. அந்த நிறுவனம் சுமார் 200,000 வாடிக்கையாளரை இழந்ததே இந்த பங்கு வீழ்ச்சிக்கு காரணம். நேற்று சுமார் $348 க்கு விற்பனை செய்யப்பட்ட Netflix பங்கு ஒன்று இன்று $212 வரையிலே விற்பனை செய்யப்படுகிறது. அதவாது கடந்த 24 மணி நேரத்தில் இந்த பங்கு ஒன்று சுமார் 39% வெகுமதியை இழந்து […]
இலங்கை அவசர உதவியை IMF அமைப்பிடம் இருந்து எதிர்பார்த்தாலும், அவ்வாறு விரைவில் உதவிகள் வழங்கப்படாது என்று IMF கூறி உள்ளது. IMF கூற்றுப்படி விரிவான உரையாடல்கள் செய்து (extension discussions), நிலைக்கக்கூடிய (sustainable) திட்டங்களை அறிந்து, உறுதி (assurances) மொழிகளை பெற்ற பின்னரே உதவிகள் வழங்கப்படும். இந்த கருத்தை இலங்கைக்கான IMF அதிகாரி Masahiro Nozaki இன்று கூறியுள்ளார். அத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவே அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு Rapid Financing Instrument (RFI) என்ற […]
சீனா அண்மையில் சாலமன் (Solomon) தீவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தால் விசனம் கொண்ட அமெரிக்காவும் Kurt Campbell, Daniel Kritenbrink ஆகிய அமெரிக்க அதிகாரிகளை சாலமன் தீவுக்கு அனுப்புகிறது. சீனாவுடன் சாலமன் தீவுகள் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையை தடுப்பதே இவர்களின் நோக்கம். அமெரிக்காவின் அதிகாரியான Ned Price என்பவரும் இந்த இணக்கம் “leaves the door for the deployment of P.R.C. military” என்றுள்ளார். சில தினங்களுக்கு முன் அஸ்ரேலியாவும் தனது அதிகாரிகளை சாலமன் […]