அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள Buffalo நகரில் உள்ள பெரிய கடை ஒன்றில் (TOPS supermarket) சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 10 பலியாகியும், 3 பேர் காயமடைந்தும் உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 18 வயதுடைய வெள்ளை இனத்தவர் என்றும், பலியான அல்லது காயமடைந்த 13 பேரில் 11 பேர் கருப்பு இனத்தவர் என்றும் கூறப்படுகிறது. ஏனைய இருவரும் வெள்ளை இனத்தவர். சுட்டவர் சுடும் நிகழ்வை இணயத்தில் நேரடியாக […]
அரசியல் கட்சிகளுக்கு அப்பால், இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையில் ஒரு புரட்சி இடம்பெற்றது. Gota Go Gama என்று ஆரம்பித்து, Mina Go Gama என்று வளர்ந்த இந்த புரட்சி இலங்கையின் உச்சத்தில் இருந்த ஆட்சி குடும்பத்தை விரட்ட முனைந்து. அந்த குடும்பத்தின் பிரதானியான பிரதமர் மகிந்தவை விரட்டியும் இருந்தது. இந்த புரட்சி இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்ததற்கு நிகரான ஒரு புரட்சியாக தொடர்கிறது. இந்த வன்முறை அற்ற, நியாயமான புரட்சியையே உலகம், குறிப்பாக […]
தங்களுக்கு பேரப்பிள்ளைகளை பெற்று தரவில்லை என்று மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் தந்தை. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்து Haridwar நகரில் வாழும் தந்தையே இவ்வாறு மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தந்தை 50 மில்லியன் இந்திய ரூபாய்களை ($650,000) நட்ட ஈடாக கேட்டுள்ளார். Sanjeev Sadhana என்ற ஓய்வு பெற்ற தந்தையும், வயது 62, அவரின் மனைவியும் தமது மகன் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன என்றும், மகனும் அவரது மனைவியும் 6 ஆண்டுகளாக பிள்ளை பெறுவதை […]
கடந்த ஆண்டு சுமார் $68,789 பெறுமதியை கொண்டிருந்த bitcoin ஒன்று இன்று சுமார் $29,400 பெறுமதியை கொண்டுள்ளது. அதாவது சுமார் 57% ஆல் bitcoin தனது பெறுமதியை இழந்து உள்ளது. Bitcoin மட்டுமன்றி ethereum போன்ற ஏனைய crypto நாணயங்களும் தமது பெறுமதியை பாரிய அளவில் இழந்து உள்ளன. கடந்த வெள்ளிக்கும் இந்த கிழமை திங்களுக்கும் இடையில் Bitcoin, Ethereum, BNB, XRP, Solana, Cardano, Luna ஆகிய அனைத்து crypto நாணயங்களும் கூட்டாக சுமார் $400 […]
கடந்த சில கிழமைகளாக இடம்பெற்றுவரும் ரஷ்ய-யுக்ரைன் யுத்தத்தில் எந்த ஒரு தரப்பும் வெற்றி கொள்ளவில்லை என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் இருவர் கூறியுள்ளனர். அத்துடன் யுத்தத்தை நீண்ட காலம் இழுத்தடித்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளை பொருளாதாரத்தில் நலிவடைய செய்வதே பூட்டினின் நோக்கம் என்றும் அந்த உளவாளி அதிகாரிகள் கூறி உள்ளனர். அமெரிக்காவின் National Intelligence Director Avril Haines, மற்றும் Defense Intelligence Agency Director Scott Barrier ஆகிய இருவருமே இந்த கணிப்பை அமெரிக்காவின் […]
சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிலிப்பீன் சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் பொங்பொங் (Marcos Jr) முன்னணியில் உள்ளார். சுமார் 80% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பொங்பொங் சுமார் 25.9 மில்லியன் அல்லது 67.8% வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள தற்போதைய உதவி சனாதிபதி Leni Roberedo 12.3 மில்லியன் வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார். ஜூன் 30ம் திகதி ஆட்சிக்கு வரும் பொங்பொங் 6 ஆண்டுகளுக்கு சனாதிபதியாக பதவி வகிக்கலாம். பொங்பொங் வெற்றி […]
முன்னாளில் பிலிப்பீன் நாட்டை ஆண்ட சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் திங்கள்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் சனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடும் என்று கருதப்படுகிறது. பொங்பொங் (Bongbong) என்று அழைக்கப்டும் மகன் Marcos Jr. தனது சர்வாதிகார தந்தையை ஒரு அரசியல் அறிவாளி (political genius), தாயை அதிஉயர் அரசில்வாதி (supreme politician) என்றெல்லாம் புகழ் பாடி இருந்தும் அவருக்கு பெருமளவு மக்கள் வாக்களிக்கலாம் என்று கருதப்படுகிறது. சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோஸ் காலத்தில் பல்லாயிரம் மக்கள் சட்டத்துக்கு […]
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் (Havana) இன்று இடம்பெற்ற ஹோட்டல் வெடிப்புக்கு குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்தும் உள்ளனர். அங்கே தேடுதல் பணிகள் தொடர்கின்றன. Hotel Saratoga என்ற இந்த ஹோட்டல் வெடிப்புக்கு எரிவாயு கசிவே காரணம் என்று கூறப்படுகிறது. அப்போது அங்கு எரிவாயு காவும் கனரக வாகனம் நிலைகொண்டிருந்தது. மொத்தம் 96 அறைகளை கொண்ட இந்த 19ம் நூற்றாண்டு ஹோட்டல் தற்போது புனரமைப்பு வேலைகளில் உள்ளதால் இங்கு உல்லாச பயணிகள் […]
2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் கரோனாவுக்கு சுமார் 14.9 மில்லியன் பேர் பலியாகி இருக்கலாம் என்று World Health Organization (WHO) தற்போது கணிக்கிறது. முன்னர் 5.42 மில்லியன் பேரே பலியாகி இருந்ததாக WHO கூறி இருந்தது. அதாவது முன்னைய கணிப்பிலும் உண்மை மரணம் 2.7 மடங்கு அதிகம். WHO பொதுவாக ஒவ்வொரு நாடுகளின் தரவுகளை பயன்படுத்தியே உலக அளவிலான கணிப்புகளை செய்யும். அதன் நோக்கம் ஒரு வரலாற்று அனர்த்தத்தை சரியாக பதிவு செய்வதே. ஆனால் பல […]
இலங்கையின் தற்போதைய டாலர் கையிருப்பு (foreign reserve) $50 மில்லியனிலும் குறைவு என்று கூறியுள்ளார் நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry). இரண்டு மாதங்களுக்கு முன் இத்தொகை $2.3 பில்லியன் ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் டாலர் இருப்பு சுமார் 70% ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இலங்கை தான் பெறும் வருமானத்துக்கும் அதிகமான அளவில் செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் இலங்கையின் மொத வருமானம் 1,500 பில்லியன் இலங்கை ரூபாய்கள் என்றும் […]