பலஸ்தீனரை கேடயமாக பயன்படுத்தும் இஸ்ரேலிய படைகள் 

பலஸ்தீனரை கேடயமாக பயன்படுத்தும் இஸ்ரேலிய படைகள் 

காசாவில் பலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேலிய படைகள் மனித கேடயமாக பயன்படுத்துவதாகவும், பொறிகள் இருக்கும் என்றுகருதப்படும் வீடுகளை, அறைகளை பரிசோதிக்க சிறுவர்கள் உட்பட பொதுமக்களை முதலில் அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. ஒரு இஸ்ரேலிய படையினன் ஒருவரும், 5 பலஸ்தீனரும் வழங்கிய உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனம் ஆக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தாம் புக பயப்படும் இடங்களுக்கு பலஸ்தீன பொதுமக்களை அனுப்புவதை இஸ்ரேல் படையினர் “mosquito protocol” என்று அழைப்பதாகவும் மேற்படி படையினன் கூறியுள்ளார். அதற்காக தாம் இரண்டு பலஸ்தீன சிறுவர்களை பிடித்து […]

யூத உல்லாச பயணிகளுக்கு இலங்கையில் அபாயம்?

யூத உல்லாச பயணிகளுக்கு இலங்கையில் அபாயம்?

இலங்கையில் உள்ள யூத உல்லாச பயணிகள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் “Level 4” எச்சரிக்கையை விடுத்துள்ளன. குறிப்பாக அறுகம் குடா மற்றும் அகங்கம, காலி, ஹிக்கடுவ, வெலிகம ஆகிய இடங்களில் உள்ள யூதர்களை உடனடியாக இந்த பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேற கேட்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இலங்கையை விட்டு வெளியேறுமாறும், அல்லது கொழும்புக்கு நகருமாறும் இவர்கள் கேட்கப்பட்டுள்ளனர். யூத பயணிகளை ஹீபுறு (Hebrew) எழுத்துக்கள் கொண்ட ஆடைகள் போன்ற யூத அடையாளங்களை கொண்டிருக்க வேண்டாம் […]

இந்திய செய்மதி தொலைத்தொடர்புக்கு அம்பானி, மஸ்க் மோதல் 

இந்திய செய்மதி தொலைத்தொடர்புக்கு அம்பானி, மஸ்க் மோதல் 

இந்தியாவில் செய்மதி மூலமான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் உரிமையை பெற இந்தியாவின் முகேஷ் அம்பானியும், அமெரிக்காவின் இலான் மஸ்க்கும் (Elon Musk) கடுமையாக போட்டியிடுகின்றனர். அம்பானி இந்திய அரசு செய்மதி தொடர்புக்கு பயன்படும் அதிர்வெண் பகுதியை (frequency spectrum) ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்கிறார். அம்முறையில் அம்பானி உரிமையை பெற்றால் இந்திய செய்மதி தொலைத்தொடர்பு சந்தையை அவர் முற்றாக கட்டுப்படுத்தலாம். ஆனால் மஸ்க் இந்திய அரசு அதிர்வெண் உரிமையை தன்னகத்தே கொண்டு, அவற்றை பயன்படுத்தும் […]

Forbes உல்லாச பயண பட்டியலில் இலங்கை 24ம் இடத்தில்

Forbes உல்லாச பயண பட்டியலில் இலங்கை 24ம் இடத்தில்

அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் தயாரித்த 2025ம் ஆண்டுக்கான சிறந்த உல்லாச பயண இடங்கள் பட்டியலில் இலங்கை 24ம் இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெறுவது உலக அளவிலான உல்லாச பயண சந்தையில் இலங்கைக்கு பெரும் விளம்பரத்தை வழங்கும். 2024ம் ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 2023ம் ஆண்டு இந்த பட்டியலில் இலங்கையின் Tangalle நகரம் மட்டும் 7ம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு முழு நாடும் 24ம் இடத்தில் உள்ளது. Top 25 Places […]

சார்ல்ஸுக்கு அஸ்ரேலியாவில் ஒரு செனட்டர் எதிர்ப்பு 

சார்ல்ஸுக்கு அஸ்ரேலியாவில் ஒரு செனட்டர் எதிர்ப்பு 

இன்று திங்கள் அஸ்ரேலிய பாராளுமன்றம் சென்ற பிரித்தானிய அரசர் சார்ல்ஸுக்கு (King Charles III) அஸ்ரேலிய பூர்வீக குடியினரான செனட்டர் Lidia Thorpe கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் வந்த அரசரிடம் “This is not your land”, “You are not my king”, “You committed genocide against our people”,  “Give us what you stole from us” என்று சத்தமிட்டுள்ளார் Lidia Thorpe. சத்தமிட்ட இவரை பாதுகாப்பு அதிகாரிகள் சபைக்கு வெளியே அழைத்து சென்றனர். கனடிய […]

யுத்தங்களால் நலிவடையும் ஐரோப்பிய விமான சேவைகள் 

யுத்தங்களால் நலிவடையும் ஐரோப்பிய விமான சேவைகள் 

யூக்கிறேன், காசா யுத்தங்களால் ஐரோப்பிய விமான சேவைகள் மிகவும் பாதிப்பு அடைகின்றன. பல ஐரோப்பிய விமான சேவைகள் ஆசியாவுக்கான சேவைகளை குறைத்துள்ளன. யூக்கிறேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின் ரஷ்யா மீது மேற்கு தடை விதித்ததால் ஐரோப்பிய விமான சேவைகள் நீண்ட சுற்றுவழி பாதையாலேயே பயணிக்கவேண்டி உள்ளன. அது எரிபொருள், ஊழியர் செலவுகளை  அதிகரிக்க இலாபம் அற்று போகிறது. உதாரணமாக பிரித்தானியாவின் லண்டன் நகருக்கும் சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் இடையில் பறக்க ரஷ்யா மேலால் பறக்கும் China Southern (CZ673) விமான […]

இறுதி நேரத்தில் இஸ்லாமிய வாக்குகளை நாடும் ஹாரிஸ், ரம்ப் 

இறுதி நேரத்தில் இஸ்லாமிய வாக்குகளை நாடும் ஹாரிஸ், ரம்ப் 

அமெரிக்க சனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கு சுமார் 2 கிழமைகள் உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், ரம்ப் ஆகிய இருவரில் எவரும் வெற்றிக்கு போதுமான ஆதரவை கொண்டிருக்கவில்லை. இருவரும் தற்போது Michigan மாநிலத்தில் இறுதிநேர பரப்புரை செய்கின்றனர். அமெரிக்காவில் மற்றைய நாடுகளைப்போல் அதிக வாக்குகளை பெற்றவர் சனாதிபதி ஆவதில்லை. பதிலுக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட electoral வாக்குகளை அதிகம் பெறுபவர் (270 அல்லது அதற்கும் மேற்பட்ட electoral வாக்குகள்) சனாதிபதி ஆக தெரிவு செய்யப்படுவார். அமெரிக்காவில் 50 மாநிலங்கள் […]

ஹமாஸின் புதிய தலைவரும் படுகொலை செய்யப்பட்டார் 

ஹமாஸின் புதிய தலைவரும் படுகொலை செய்யப்பட்டார் 

ஹமாஸின் புதிய தலைவரான Yahya Sinwar என்பவரும் தம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இவரே கடந்த ஆண்டு அக்டோபர் 17 இஸ்ரேல் மீது செய்யப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் புதன்கிழமை வீசிய குண்டு ஒன்றுக்கே Sinwar பலியானதாகவும், தாம் DNA பரிசோதனை செய்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸின் இராணுவ தலைவரான Deif இஸ்ரேல் குண்டுக்கு பலியானதால் கடந்த மாதமே Sinwar ஹமாஸின் இராணுவ தலைவர் ஆனார். இந்த செய்தியை அறிந்த அமெரிக்க சனாதிபதி […]

Intel தயாரிப்புகளுக்கு சீனாவில் கட்டுப்பாடு வரும்?

Intel தயாரிப்புகளுக்கு சீனாவில் கட்டுப்பாடு வரும்?

அமெரிக்காவின் Intel நிறுவனம் தயாரிக்கும் கணினி chip களுக்கு சீன அரசு விரைவில் பலத்த கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று நம்பப்படுகிறது. Cybersecurity Association of China (CSAC) என்ற சீன ஆய்வு அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றே இதற்கு காரணம். Xeon processors உட்பட Intel தயாரிப்புகள் கொண்டுள்ள (embedded) operating systems அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான National Security Agency (NSA) இரகசிய பின் கதவுகளை கொண்டிருக்க வசதி செய்கிறது என்றும், அது சீனாவின் […]

மேலும் 230 சீன இணைய திருடர்கள் இலங்கையில் கைது 

மேலும் 230 சீன இணைய திருடர்கள் இலங்கையில் கைது 

மேலும் 230 சீன இணைய திருடர்களை இன்று (அக்டோபர் 15) கைது செய்துள்ளதாக விஜித ஹேரத் கூறியுள்ளார். இவர்கள் உலகம் எங்கும் உள்ள வங்கிகளில் இருந்து இணையம் மூலம் திருடுபவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கைதுக்கு உதவ சீனாவில் இருந்து காவல் அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர். இந்த சீனரை சீனாவுக்கு நாடு கடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அக்டோபர் 12ம் திகதி கண்டி நகருக்கு அண்மையில் உள்ள குண்டசாலை பகுதியில் 120 சீன இணைய திருடர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் 47 […]

1 8 9 10 11 12 340