காசாவை அமெரிக்கா கைக்கொள்ளும் என்றும் அங்குள்ள பலஸ்தீனர்களை வேறு ஒரு “good , fresh, beautiful piece of land” நாட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறுகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். காசா தற்போது கட்டிட இடிபாட்டு குவியல்களை கொண்ட வாழ முடியாத இடம் என்றும் ஏன் அங்கு பலஸ்தீனர் வாழ விரும்புவார்கள் என்றும் ரம்ப் கூறியபோது ஒரு நிருபர் “ஏனென்றால் அது அவர்களின் நாடு” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னரும் பலஸ்தீனரை எகிப்தும், ஜோர்டானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனா மீது நடைமுறை செய்த புதிய 10% இறக்குமதி வரிக்கு பதிலடி வரியாக சீனா தனது புதிய வரிகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிலவகை நிலக்கரி, LNG எரிவாயு மீது 15% புதிய வரியும், மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள், பெரிய வகை கார்கள், pickup வாகனங்கள் ஆகியவற்றுக்கு 10% புதிய இறக்குமதி வரியும் சீனா அறிவித்துள்ளது. இந்த வரிகள் பெப்ருவரி 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன் […]
கனடா, மெக்ஸிக்கோ மீதான புதிய 25% இறக்குமதி வரியை ரம்ப் 30 தினங்களுக்கு இடைநிறுத்தி உள்ளார். Executive order மூலம் நடைமுறை செய்ய முனைந்த புதிய 25% இறக்குமதி வரிகளை அவை நடைமுறைக்கு வருமுன் இன்னோர் executive order மூலம் இடைநிறுத்தி சாதனை படைத்துள்ளார் ரம்ப். இதுவரை ரூடோவுடன் கதைக்க மறுத்த ரம்ப் திங்கள் குறைந்தது இரண்டு தடவைகள் உரையாடியுள்ளார். இரண்டாவது தடவை இருவரும் 45 நிமிடங்கள் உரையாடி உள்ளனர். மெக்ஸிக்கோ அதிபருடனும் ரம்ப் உரையாடியுள்ளார். கனடா […]
கனடா, மெக்ஸிக்கோ, சீனா ஆகிய நாடுகளுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்த ரம்ப் விரைவில் (pretty soon) ஐரோப்பிய நாடுகளுக்கும் மேலதிக வரி விதிக்க உள்ளதாக மிரட்டி உள்ளார். அதற்கு தாமும் பதிலடி வழங்க தயார் என்கின்றனர் ஐரோப்பிய நாடுகள். மொத்தம் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே ரம்பின் கனடா, மெக்ஸிக்கோ, சீனா மீதான தான்தோன்றித்தனமான மேலதிக வரிகளை கண்டித்து உள்ளனர். சுமார் 20 ஐரோப்பிய நாடுகள் தாம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி […]
2020ம் ஆண்டு மோதி அரசால் இந்தியாவில் TikTok போன்ற சீன நிறுவனங்கள் தடை செய்யப்பட்டபோது சீனாவின் Shein என்ற மலிவு விலை ஆடை உற்பத்தி நிறுவனமும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் சனிக்கிழமை Shein மீண்டும் இந்தியாவில் சேவை செய்ய ஆரம்பித்துள்ளது. இம்முறை Shein செல்வந்தர் முகேஷ் அம்பானியின் Reliance Industries நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இயங்குகிறது. Shein நிறுவனத்தின் இந்தியாவுள்ளான இரண்டாம் வருகை முடிந்த அளவு இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Shein சீனாவில் மிகப்பெரிய […]
கனடிய நேரப்படி சனிக்கிழமை இரவு கனடிய பிரதமர் ரூடோ செவ்வாய் முதல் அமெரிக்க பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி (tariffs) அறவிட உள்ளதாக கூறியுள்ளார். கனடாவின் இந்த புதிய வரி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் C$155 பில்லியன் (U$107 பில்லியன்) பெறுமதியான பொருட்கள் மீது நடைமுறை செய்யப்படும். அமெரிக்க மதுபானங்கள், பழச்சாறுகள், உற்பத்தி பொருட்கள் போன்ற பல இந்த புதிய வரிக்கு உட்படும். கனடாவின் இந்த பதிலடி ரம்பை மேலும் மூர்க்கம் அடைய வைக்கும் என்பதில் […]
சனிக்கிழமை முதல் கனடாவிலும், மெக்ஸிக்கோவிலும் இருந்து அமெரிக்காவுள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% மேலதிக இறக்குமதி வரி (tariffs) அறவிடப்படும் என்றும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிடப்படும் என்று ரம்ப் அரசு கூறியுள்ளது. இந்த வரிகளுக்கு உட்படும் பொருட்களின் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த வரிகளால் இவ்வகை பொருட்களின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும். இந்த மேலதிக தொகையை இறக்குமதியாளர் அமெரிக்க பாவனையாளரிடம் அறவிடுவார். அத்துடன் இந்த பொருட்களின் விலை […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள Reagan National Airport என்ற விமான நிலையத்துக்கு அருகில் American Airlines flight 5342 விமானமும், அமெரிக்க இராணுவ ஹெலி ஒன்றும் வானத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகின. பயணிகள் விமானத்தில் 60 பயணிகளும், 4 பணியாளரும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் மரணங்கள் இடம்பெறுள்ளதாக கூறப்பட்டாலும் முழு விபரங்களும் இதுவரை அறியப்படவில்லை. ஹெலியில் 3 படையினர் இருந்துள்ளனர். தேடுதல் பணிகள் தொடர்கின்றன. விபத்துக்கு உள்ளான பயணிகள் விமானம் ஒரு Bombardier CRJ […]
இலங்கையில் பயன்படுத்தப்படும் smartphone தொலைபேசி சேவைகள் விரைவில் IMEI அடையாள இலக்க (ID) பதிவுக்கு உட்படுத்தப்படும் என்று Telecommunication Regulatory Commission of Sri Lanka கூறியுள்ளது. ஒவ்வொரு வாகனத்துக்கும் அடையாளமாக VIN (Vehicle Identification Number) இலக்கம் இருப்பதுபோல் ஒவ்வொரு smartphone களுக்கும் அடையாளமாக IMEI (International Mobile Equipment Identity) இலக்கம் உள்ளது. உலகம் முழுவதும் ஒரு தொலைபேசிக்கு ஒரு IMEI ஆக இருக்கும். இது 15 இலக்கங்களை கொண்டது. இந்த IMEI இலக்கம் […]
இந்தியாவின் கங்கை ஆறும், யமுனா ஆறும் சந்திக்கும் இடத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் இடம்பெற்ற நெரிசலுக்கு குறைந்தது 30 பலியாகியும், 90 பேர் வரை காயமடைந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 25 பேரே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் குயாரத், அசாம் போன்ற தூர இட மாநிலத்தவரும் அடங்குவர். ஒடுக்கமான பாலம் ஒன்று வழியே பெருமளவு பக்தர்கள் செல்ல முயற்சித்த வேளையிலேயே நெரிசல் இடம்பெறுள்ளது. சில போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த முயன்றாலும் நெரிசல் […]