சீன பங்குச்சந்தை 7.7% வீழ்ச்சி

ShanghaiIndex

சீனாவின் பங்குச்சந்தை (Shanghai Index) நேற்று (2015/01/19) 7.7% வீதத்தால் வீழ்ந்துள்ளது, அதாவது 260 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும்.
.
இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாவது சீன அரசு சட்டத்துக்கு முரணாக வளர்ந்துவரும் margin trading முறையை கட்டுப்படுத்த முன்வந்துள்ளமை. உதாரணமாக 1 மில்லியன் Yuanஐ (சீன நாணயம்) முதலிடும் ஒருவரை அவரின் பங்குச்சந்தை முகவர் 2 மில்லியன் Yuanஇக்கு பங்குகளை கொள்வனவு செய்ய அனுமதிப்பார். மேலதிக 1 மில்லியனை முகவரே அதீத வட்டிக்கு கொடுப்பார். பங்கின் விலை அதிகரித்தால், கொள்வனவு செய்தவர் இலாபத்தில் வட்டியை அடைப்பர். ஆனால் பங்கு விலை வீழ்ந்து, அந்நிலை தொடர்ந்தால் வாங்கியவர் வட்டியில் மூழ்வர். முகவர் பங்குகளை விற்று தனது வட்டியையும் முதலையும் எடுப்பார். சீனாவின் margin trading கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்து மடங்கால் (1000%) அதிகரித்துள்ளது.
.
இரண்டாவது காரணம், கடந்த 15 வருடங்களில் முதல் தடவையா இம்முறையே சீனாவின் GDP எதிர்பார்த்ததை விடவும் குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த கணியம் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவர இருந்தது. சீனாவின் வருட GDP 7.3% ஆக இருக்கும் என்று முன்னர் கூறப்பட்டாலும் அது 7.2% ஆக மட்டுமே இருக்கும் என்று நேற்று கருதப்பட்டு இருந்தது. இந்த 7.2% GDP வளர்ச்சியை மேற்கு நாடுகள் எதிர்பார்க்கவே முடியாது எனினும் சீனாவுக்கு இது சற்று குறைவே.
.

ஆனால் இன்று செவ்வாய்கிழமை காலையில் Shanghai Index சுமார் 1.7% ஆல் அதிகரித்து நேற்றைய இழப்பின் சிறு பகுதியை மீண்டுள்ளது. உண்மையில் சீனாவின் GDP 7.4% ஆல் வளர்ந்துள்ளது. ஆனாலும் கடந்த 24 வருடத்துள் இதுவே சீனாவின் மிக குறைந்த GDP வளர்ச்சி. 1990 இல் சீனாவின் GDP வளர்ச்சி 3.8% மட்டுமே.