இந்த வருட ஜனவரி மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையான காலத்தில் 921,000 குழந்தைகள் மட்டுமே ஜப்பானில் பிறந்துள்ளனர். இந்த தொகை கடந்த 120 வருட தொகைகளில் மிக குறைந்த தொகையாகும். இத்தொகை கடந்த வருட தொகையிலும் 25,000 குறைவு.
.
1989 ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய பிறப்பு அளவு சுமார் 30% ஆல் குறைந்துள்ளது. அதாவது சுமார் 30 வருடங்களில் பிறப்பு 30% ஆல் குறைந்துள்ளது.
.
அதேவேளை முதியோர்களை பெருமளவு கொண்ட ஜப்பானில் மரணிப்போர் தொகை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் சுமார் 1.37 மில்லியன் ஜப்பானியர் மரணிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகை கடந்த வருடத்திலும் 29,000 அதிகம்.
.
பிறப்பு குறைவதாலும், இறப்பு அதிகரிப்பதாலும் ஜப்பானின் சனத்தொகை வேகமாக குறைந்து வருகிறது. இந்த வருடம் ஜப்பானின் சனத்தொகை 448,000 ஆல் குறையும்.
.
1899 ஆம் ஆண்டு முதல் பதியப்பட்டு வரும் ஜப்பானின் பிறப்பு, மற்றும் இறப்பு தொகைகள் ஜப்பானின் சனத்தொகை படிப்படியாக குறைந்து வருவதை காட்டுகின்றன.