பூமியில் உள்ள நகரங்கள் வாணவேடிக்கையுடன் புதிய வருடத்தை ஆரம்பிக்க, சூரியன் தனது சொந்த வாணவேடிக்கையுடன் புது வருடத்தை தொடங்கியுள்ளது. நாசாவின் (NASA) தகவல்களின்படி கடந்த திங்கள்கிழமை (மார்கழி 31, 2012) தொடங்கிய சூரிய சுவாலை வீச்சுக்கள் (solar eruption அல்லது solar flare) சுமார் 4 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது.
கடந்த திங்கள் இடம்பெற்ற சுவாலையின் அதியுயர் நீளம் சுமார் 257,500 km ஆகும். இந்த சுவாலையின் நீளம் நமது பூமியின் விட்டத்துடன் (12,714 km) ஒப்பிடுகையில் சுமார் 20 மடங்காகும். ஆனால் நாசாவின் கருத்துப்படி இந்த சுவாலை வீச்சு ஒரு சிறிய அளவிலான வீச்சே.
இந்த சூரிய சுவாலை கதிர்வீச்சு மணித்தியாலம் ஒன்றுக்கு சுமார் 2 தொடக்கம் 8 மில்லியன் km கடந்து சென்று பூமியை 1 தொடக்கம் 3 நாட்களில் அடையும். பெரிய அளவிலான சுவாலை வீச்சுக்கள் உருவாக்கும் electromagnetic வீச்சுக்கள் பூமியில் உள்ள இலத்திரனியல் உபகரணங்கள், செய்மதிகள் போன்றவற்றை பாதிக்கலாம்.