IS உருவாக வழிசெய்தவர்கள்

ISIS

IS என்ற பயங்கரவாத இயக்கம் இந்த மாதம் 13ம் திகதி பாரிஸ் நகரில் 129 பொதுமக்களை படுகொலை செய்ததுடன் சுமார் 100 பேர்களை காயப்படுத்தியும் இருந்தது. அதற்கு முதல் நாள் இக்குழு லெபனானின் பெய்ரூத் நகரில் இரண்டு தற்கொலை தாக்குதல் மூலம் 43 பெயர்களை படுகொலை செய்திருந்தது. இந்த தாக்குதலுக்கு சில தினங்கள் முன்னர் ரஷ்யாவின் விமானம் ஒன்றை எகிப்தின் வான்வெளியில் குண்டு வெடிப்பு ஒன்றின் மூலம் வீழ்த்தி இருந்தது. அவ்விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருந்தனர். இவாறான பல பயங்கரவாத நடவடிக்கைகளை IS என்ற இந்த இயக்கம் செய்திருக்கிறது.
.
IS அல்லது ISIS என்ற இந்த இயக்கம் தோன்ற வழிசமைத்தவர் யார்?
.
நியூ ஜோர்க் நகரில் இடம்பெற்ற 9/11 தாக்குதலை அடுத்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ் (மகன் புஷ்) 9/11 தாக்குதலை காரணம்காட்டி ஈராக்கின் சதாமை அழிக்க முன்வந்தார். நியூ யோர்க்கில் நடைபெற்ற 9/11 தாக்குதலுக்கும் சதாமுக்கும் எந்தவொரு தொடர்பும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் புஷ் சதாமை அழிக்க முன்வைத்தார். இதற்கு பிராதான காரணம் புஷின் கீழ் பணியாற்றிய இஸ்ரவேல் ஆதவு நபர்களே. அவர்கள் 9/11 தாக்குதலை காரணம்காட்டி இஸ்ரவேலுக்கு எதிரான சதாமை அமெரிக்க இராணுவம் மூலம் அழிக்க முனைந்தனர். உண்மையில் இதே கூட்டம் அப்பா புஷ் மூலமும் இத செய்ய முனைந்திருந்தது. ஆனால் உலக அறிவு அதிகம் உள்ள அப்பா புஷ் இதற்கு வளைந்து கொடுக்கவில்லை. அது நடைபெற்றது சதாம் குவைத் என்ற சிறிய நாட்டை ஆக்கிரமித்தபோது. இந்த கூட்டத்தின் சூழ்ச்சி பின்னர் உலக அறிவு மிகவும் குறைந்த மகன் பஷில் 2003 ஆம் ஆண்டில் பலித்தது.
.
சதாமை அழித்தபின் அமெரிக்காவை ஆண்டது புஷ் குழு. மகன் புஷ்ஷும் அவரால் Provisional Authorityயாக நியமிக்கப்பட்ட Poul Bremer உம் ஈராக்கில் De-Baathification என்ற செயலில் இறங்கினர். அச்செயல் சதாமின் Baath கட்சி சார்பான எல்லா செயல்பாடுகளையும் அழிப்பதாகும். அதன் ஒரு அங்கமாக சதாமால் உருவாக்கப்பட்ட, நன்கு இராணுவ பயிற்சி பெற்ற ஈராக்கின் படைகளை முற்றாக விலக்குவது.
.
சதாம் ஒரு சுனி இஸ்லாமியர். சுனி இஸ்லாமியர் ஈராக்கின் பெரும்பான்மை இனம் இல்லாதிருந்தும் சதாம் காலத்தில் சுனி இனத்தவரே படைகளில் பெரும்பான்மையாக இருந்தனர். De-baathification மூலம் விரட்டப்பட்ட சுனி இன இராணுவத்தினர் தம் கைவசம் இருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகினர். இவர்களுள் முன்னாள் உயர் இராணுவ அதிகாரிகளும் அடங்குவர்.
.
சதாம் அழிந்த பின் வந்த தேர்தலில் சியா இஸ்லாமியர் ஆட்சியை கைப்பற்றினர். Nouri al-Maliki தலைமையிலான அந்த அரசும் தம் நாட்டின் இனமான சுனி இஸ்லாமியர்களை ஆட்சிக்குள் இழுக்க தவறி இருந்தனர். விரக்தி அடைந்த முன்னாள் சுனி இஸ்லாமிய இராணுவ உறுப்பினர் வன்முறைகளில் இறங்கினர்.
.
இவர்களை பயன்படுத்த முன்வந்தது Abu Musab al-Sarkawi தலைமையிலான ஈராக்கின் அல்கைடா கிளை. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் போட்ட இரண்டு 500 இறாத்தல் குண்டுகளால் கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் தொண்டர்கள் Islamic State in Iraq (ISI) என்ற குழுவாக தொடர்ந்தும் இயங்கினர். இவர்கள் ஈராக்கின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளை தமது கட்டுப்பாடில் வைத்திருந்தனர். குறிப்பாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுல் (Mosul) கூட இவர் வசமானது. மோசுல் நகர் சுமார் 1.5 மில்லியன் மக்களை கொண்டது.
.
மோசுல் நகரை இவர்கள் கைப்பற்றிய போது அங்கிருந்த ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து பல மில்லியன் டொலர்களையும் இவர்கள் எடுத்தனர்.
.
நிலைமையின் பாரதூரம் அறியாத மேற்கும் அது சார்ந்த சவுதி போன்ற அரபு நாடுகளும் சிரியாவின் Assad தலைமையிலான அரசையும் கலைக்க முனைந்தன. Assad அரசு நிலைத்து நின்றாலும், யுத்தம் காரணமாக Assad படைகள் சிரியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை இழந்தன.
.
அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ISI, சிரியாவின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளையும், எல்லைக்கு அப்பால் தம் வசம் இருந்த இராக்கின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளையும் இணைத்து Islamic State in Iraq and Syria (ISIS) ஆக பலம் கொண்டது. இது Abu Bakr al-Bagdadi (முன்னர் இவரின் பெயர் Ibrahim al-Badri) தலைமயில் இயங்கியது. Al-Bagdadi சில வருடங்களின் முன் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஈராக்கில் இருந்த Bucca என்ற தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு இருந்து பின் விடுதலை செய்யப்பட்டவர். பின் இவரின் தலைமையில் வன்முறைகள் வளர்ந்தபோது அமெரிக்கா இவரின் கைதுக்கு $10 மில்லியன் சன்மானமும் வழங்க முன்வந்திருந்தது.
.

IS அமைப்பு Internet மூலமும் தமது பரப்புரைகளை மேற்கு நாட்டு இஸ்லாமிய இளவயதினரிடையே இலகுவாக பரப்பி ஆட்சேர்ப்பு செய்தது. பாரிஸில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இவ்வகை உறுப்பினரே பயன்படுத்தப்பட்டனர். இஸ்லாமியர் மட்டுமல்லாது சிறு தொகை மாற்று மதத்தினரும் இக்குழுவில் இணைந்து இருந்தனர்.
.