மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக சிரியாவில் நடைபெறும் யுத்தங்கள் காரணமாக இந்த வருடம் மட்டும் 700,000 இக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவை கடல் மூலம் அடைந்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. அதேவேளை 3,210 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
.
இவர்களில் 562,355 பேர் கிரேக்கத்தை அடைந்து பின் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இத்தாலி வழியாக சுமார் 140,000 பயணித்துள்ளனர். பல்லாயிரம் அகதிகள் இஸ்பெயின் மூலம் பயணித்துள்ளனர்.
.
.
இந்த அகதிகளில் 20% சிறுவர்கள், 15% பெண்கள், மிகுதி 65% ஆண்கள். இந்த அகதிகளில் அரை பங்கிற்கும் மேலானோர் சிரியாவில் இருந்தும், அதற்கு அடுத்த தொகையானோர் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். ஏனையோர் எரித்திரியா, நைஜீரியா, பாகிஸ்தான், சோமாலியா, சூடான், பங்களாதேசம் போன்ற நாட்டவர்.
.
.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இப்போதே ஐரோப்பா இவ்வளவு அகதிகளை சந்திக்கிறது.