ஐரோப்பாவும் ரம்பின் வரிக்கு பதிலடி வழங்க தயார்

ஐரோப்பாவும் ரம்பின் வரிக்கு பதிலடி வழங்க தயார்

கனடா, மெக்ஸிக்கோ, சீனா ஆகிய நாடுகளுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்த ரம்ப் விரைவில் (pretty soon) ஐரோப்பிய நாடுகளுக்கும் மேலதிக வரி விதிக்க உள்ளதாக மிரட்டி உள்ளார். அதற்கு தாமும் பதிலடி வழங்க தயார் என்கின்றனர் ஐரோப்பிய நாடுகள்.

மொத்தம் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே ரம்பின் கனடா, மெக்ஸிக்கோ, சீனா மீதான தான்தோன்றித்தனமான மேலதிக வரிகளை கண்டித்து உள்ளனர்.

சுமார் 20 ஐரோப்பிய நாடுகள் தாம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் பெறுமதியிலும் அதிகமான பெறுமதி கொண்ட பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அந்த வகையின் உச்சத்தில் இருக்கும் 3 நாடுகள் முறையே ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து.

பிரெஞ்சு சனாதிபதி மக்ரோன், ஜேர்மன் அதிபர் Scholz, டென்மார்க் பிரதமர் Frederiksen ஆகியோர் தனித்தனியே ரம்பின் வரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டினின் யூக்கிறேன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவாக பெரும் நயம் அடைந்தது சீனா. தற்போது ரம்பின் நடவடிக்கைகளால் மீண்டும் நன்மை அடையப்போவது சீனா.