அமெரிக்க பொருட்களுக்கு ரூடோ 25% வரி, ரம்புக்கு பதிலடி

அமெரிக்க பொருட்களுக்கு ரூடோ 25% வரி, ரம்புக்கு பதிலடி

கனடிய நேரப்படி சனிக்கிழமை இரவு கனடிய பிரதமர் ரூடோ செவ்வாய் முதல் அமெரிக்க பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி (tariffs) அறவிட உள்ளதாக கூறியுள்ளார்.

கனடாவின் இந்த புதிய வரி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் C$155 பில்லியன் (U$107 பில்லியன்) பெறுமதியான பொருட்கள் மீது நடைமுறை செய்யப்படும். அமெரிக்க மதுபானங்கள், பழச்சாறுகள், உற்பத்தி பொருட்கள் போன்ற பல இந்த புதிய வரிக்கு உட்படும்.

கனடாவின் இந்த பதிலடி ரம்பை மேலும் மூர்க்கம் அடைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரின் அடுத்த நடவடிக்கை விரைவில் தெரியவரும்.

அத்துடன் ரம்ப் பதவி ஏற்றபின் தான் ரம்புடன் உரையாட முயற்சி செய்ததாகவும் ஆனால் ரம்ப் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ரூடோ தெரிவித்துள்ளார்.

மெக்ஸிக்கோ சனாதிபதி Claudia Sheinbaum தாமும் அமெரிக்க பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி அறவிட உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அந்த விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சீனாவும் பதிலடி வரிகள் அறவிட உள்ளதாக கூறியிருந்தது. அந்த விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.