மகா கும்பமேளா நெரிசலுக்கு 30 பேர் பலி, 90 பேர் காயம்

மகா கும்பமேளா நெரிசலுக்கு 30 பேர் பலி, 90 பேர் காயம்

இந்தியாவின் கங்கை ஆறும், யமுனா ஆறும் சந்திக்கும் இடத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் இடம்பெற்ற நெரிசலுக்கு குறைந்தது 30 பலியாகியும், 90 பேர் வரை காயமடைந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 25 பேரே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோரில் குயாரத், அசாம் போன்ற தூர இட மாநிலத்தவரும் அடங்குவர்.

ஒடுக்கமான பாலம் ஒன்று வழியே பெருமளவு பக்தர்கள் செல்ல முயற்சித்த வேளையிலேயே நெரிசல் இடம்பெறுள்ளது. சில போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த முயன்றாலும் நெரிசல் தொடர்ந்தது.

கும்ப மேளா Prayagraj, Haridwar, Ujjain, Nasik ஆகிய 4 நகரங்களில் இடம்பெற்றாலும் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை Prayagraj இல் இடம்பெறும் கும்ப மேளாவே மிகப்பெரியது.

அரச கணிப்பின்படி இன்றைய தினம் Prayagraj என்ற இடத்தில் பிற்பகல் 2:00 மணியளவில் 50.4 மில்லியன் பேர் ஆற்றில் நீராடி உள்ளனர். கடந்த 6 கிழமையில் சுமார் 250 மில்லியன் பேர் நீராடியுள்ளனர்.