ரஷ்ய சனாதிபதி பூட்டின் யூக்கிறேன் யுத்தத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் தான் ரஷ்யா மீதும், பூட்டின் மீதும் பெரும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக ரம்ப் மிரட்டியுள்ளார். யூக்கிறேன் யுத்தத்தை தான் இலகு வழியில் அல்லது கடுமையான வழியில் நிறுத்த முடியும் என்றுள்ளார் ரம்ப்.
ரம்ப் தனது பதிவு ஒன்றில் “we can do it the easy way, or the hard way” என்று கூறியுள்ளார்.
இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் பைடென் ஆட்சி ஏற்கனவே ரஷ்யா மீதும், பூட்டின் மீதும் முடிந்த அளவு கடுமையான தடைகளை விதித்து உள்ளது. அதனால் ரம்ப் மேலதிகமாக தடைகளை விதிக்க தடைகள் விதிக்கப்படாத வர்த்தகங்கள் எதுவும் மிஞ்சி இல்லை.
ரம்ப் தேர்தல் காலத்தில் தான் சனாதிபதி ஆகினால் யூக்கிறேன் யுத்தத்தை 24 மணித்தியாலத்தில் நிறுத்துவேன் என்று கூறியிருந்தார். தற்போது அது சாத்தியப்படும் நிகழ்வு அல்ல என்றாகியுள்ளது. ரம்ப் பதவிக்கு வந்தது ஏற்கனவே 3 தினங்கள் ஆகிவிட்டன.