காசாவில் யுத்த குற்றங்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் இஸ்ரேல் படையினர் இஸ்ரேலுக்கு வெளியே செல்வது ஆபத்தாக அமைகிறது. Hind Rajab Foundation (HRF) என்ற தொண்டர் அமைப்பு இஸ்ரேல் படையினரின் சர்வதேச பயணங்களை கண்காணித்து, அங்கெல்லாம் வழக்குகளை தாக்கல் செய்து வருகிறது.
இந்த படையினர் தாம் காசாவில் செய்த அக்கிரமங்களை தமது Facebook போன்ற இணையங்களில் பெருமையாக பதிவு செய்தமையே இவர்களுக்கு ஆபத்தாக அமைகின்றன.
பிரேசில் நாட்டில் உல்லாச பயணத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் இஸ்ரேல் படையினர் ஒருவர் அவசர அவசரமாக பிரேசிலில் இருந்து வெளியேறி உள்ளார். இவருக்கு எதிராக பிரேசில் நீதிமன்றத்தில் HRF வழக்கு தொடர்ந்தமையே இவரின் அவசர வெளியேற்றத்துக்கு காரணம். இந்த இராணுவத்தினன் பெரும் தொகை பாலஸ்தீனர்களின் வீடுகளை காரணம் இன்றி தகர்ப்பது அறியப்பட்டுள்ளது.
அண்மையில் இன்னொரு இஸ்ரேல் படையினர் அவசர அவசரமாக இலங்கையில் இருந்து வெளியேறி இருந்தார். இவர் மீதும் HRF இலங்கையில் வழக்கு தொடர முனைந்தது.
தாய்லாந்து, Chile ஆகிய நாடுகளிலும் இவ்வகை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.