முன்னாள் Srilankan CEO கபில சந்திரசேன மீது அமெரிக்கா தடை 

முன்னாள் Srilankan CEO கபில சந்திரசேன மீது அமெரிக்கா தடை 

இலங்கையின் Srilankan விமான சேவையின் முன்னாள் CEO (Chief Executive Officer) கபில சந்திரசேன (Kapila Chandrasena) மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. Srilankan விமான சேவைக்கு விமானங்கள் கொள்வனவு செய்யும் பணியில் இவர் இலஞ்சம் பெற்றதாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தடைக்கு உட்பட்டவர்களின் அமெரிக்க சொத்துக்களை அமெரிக்கா முடக்கும். அத்துடன் இவர்களுக்கு அமெரிக்கா விசாவும் வழங்காது.

2020ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Crown Court of Southwark நீதிமன்றில் இடம்பெற்ற Airbus விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் Airbus மேற்படி $2 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளது.

வழங்கப்பட்ட $2 மில்லியன் இலஞ்சம் அஸ்ரேலிய வங்கி ஒன்றுக்கு நகர்த்தப்பட்டு இருந்தது.

2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம், மேற்படி லண்டன் தீர்ப்பின் பின், இலங்கை சந்திரசேனவையும் அவரின் மனைவியையும் (Priyanka Niyomali Wijenayake) கைது செய்ய பணித்தது . அதன்படி கைது செய்யப்பட்ட இவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

சந்திரசேன முதலில் மகிந்தவின் Mihin Lanka விமான சேவையின் CEO ஆக பணியாற்றி, அதன் பின்னரே Srilankan சேவையின் CEO ஆனார். 2015ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் Srilankan CEO பதவியில் இருந்து நீங்கி இருந்தார்.

லண்டன் நீதிமன்ற கட்டளைப்படி அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கு Airbus 3.6 பில்லியன் யூரோ தண்டம் செலுத்தி இருந்தாலும் இலங்கைக்கு நட்டஈடு எதுவும் வழங்கப்படவில்லை.

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் Udayanga Weerathunga மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இவர் இலங்கைக்கு ரஷ்யாவின் MiG விமானங்களை கொள்வனவு செய்வதில் இலஞ்சம் பெற்று இருந்தார் என்கிறது அமெரிக்கா.