கனடாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தை இலங்கையில் இருந்து Zoom இணையம் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார் ஒரு பெண். இந்த பெண்ணின் பெயர் அறிவிக்கப்படவில்லை.
2022ம் ஆண்டு இந்த பெண் Toronto நகருக்கு மேற்கே உள்ள Woolwich என்ற நகரில் (Guelph/Kitchener பகுதி) மதுபோதையில் தன்னை தானே விபத்தில் சிக்க வைத்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இவர் மதுபோதையில் தனது காரை garage இல் நிறுத்திய பின் சரியாக நிறுத்தப்படாத அந்த கார் இவரை சுவருடன் நசித்து பிடித்துள்ளது. இதை அறிந்த அயலவர் 911 தொலைபேசி மூலம் போலீசாரை அழைத்து அந்த பெண்ணை விடுவித்து உள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இவரிடம் மதுபோதை பரிசோதனை செய்ய போலீசார் கேட்க இவர் அதற்கு மறுத்துள்ளார். ஆனாலும் இவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இவர் வழக்கு தொடரப்பட்ட பின்னர் இலங்கை சென்று bed and breakfast வர்த்தகம் ஒன்றை கொள்வனவு செய்து வாழ்கிறார்.
தற்போது 56 வயதுடைய இவர் தான் விவாகரத்தின் பின் மதுவுக்கு அடிமையானதாக நீதிமன்றுக்கு Zoom மூலம் கூறியுள்ளார். அத்துடன் இவர் தான் மது பழக்கத்தை கைவிட இலங்கையில் மருத்துவம் பெறுவதாகவும் கூறியுள்ளார்.
நீதிமன்றம் இவருக்கு C$4,000 தண்டமும், 2 ஆண்டுகள் கனடாவில் வாகனம் செலுத்த தடையும் விதித்துள்ளது.
இந்த பெண் 2019ம் ஆண்டும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்கு தண்டிக்கப்பட்டு இருந்தார்.