இலங்கையில் Air Ceilao என்ற புதியதோர் விமான சேவை தனது சேவையை அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையை தளமாக கொண்ட இந்த விமான சேவை ஏற்கனவே அனுமதி பாத்திரங்களை தாக்கல் செய்துள்ளது.
ஆரம்பத்தில் Air Ceilao இரண்டு Airbus 320 வகை விமானங்களுடன் சேவையை ஆரம்பிக்கும்.
இது முதலில் பின்வரும் சேவைகளை செய்யும்:
கொழும்பு-Dubai: கிழமைக்கு 5 சேவைகள்
கொழும்பு-Doha: கிழமைக்கு 5 சேவைகள்
கொழும்பு-சென்னை: கிழமைக்கு 5 சேவைகள்
கொழும்பு-Bangkok: கிழமைக்கு 4 சேவைகள்
கொழும்பு-சிங்கப்பூர்: கிழமைக்கு 4 சேவைகள்
கொழும்பு-மாலைதீவு: கிழமைக்கு 3 சேவைகள்
இரண்டு விமானங்கள் மேற்படி சேவைகளை ஒவ்வொரு கிழமையும் செய்வது நெருக்கடியாக இருக்கும். ஒரு விமானம் திருத்த வேலைகளுக்கு சென்றால் பல சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.
Srilankan விமான சேவை 2023/2024ம் ஆண்டில் ஓரளவு இலாபத்தில் இயங்க ஆரம்பித்து உள்ளது. இந்த காலத்தில் Srilankan 3.6 மில்லியன் பயணிகளை காவி உள்ளது.
FirstAir, Cinnamon Air ஆகியன இலங்கையில் மேலும் இரு தனியார் விமான சேவைகள்.
கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 15 இலங்கை விமான சேவைகள் இலாபத்தில் இயங்க முடியாது அழிந்து போயின.