பூட்டின், ஈரான் சனாதிபதி சந்திப்பு, பேசு பொருள் இஸ்ரேல்?

பூட்டின், ஈரான் சனாதிபதி சந்திப்பு, பேசு பொருள் இஸ்ரேல்?

ரஷ்ய சனாதிபதி பூட்டினும், Masoud Pezeshkian என்ற ஈரானிய சனாதிபதியும் வெள்ளிக்கிழமை Turkmenistan நாட்டில் சந்தித்து உரையாடவுள்ளனர். ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை இவர்களின் உரையாடலில் முதன்மை விசயமாக இருக்கும்.

ஈரான் யூக்கிறேன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பெருமளவு உதவிகளை செய்தாலும், ரஷ்யா இதுவரை ஈரானுக்கு இஸ்ரேல் விசயத்தில் பெருமளவு உதவிகளை செய்யவில்லை.

ஈரான் ரஷ்யாவின் S-400 ஏவுகணைகளை பெற நீண்ட காலம் முயற்சிக்கிறது. இதற்கான சில பாகங்கள் ஈரான் வந்தாலும் ஈரானில் S-400 சேவைக்கு வரும் நிலையில் தற்போது இல்லை. ஈரான் ரஷ்யாவின் Su-35s வகை யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்ய விரும்புகிறது.

ரஷ்யாவின் பழைய S-300 ஏவுகணைகளை ஈரான் 2007ம் ஆண்டே பெற விரும்பி இருந்தாலும், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் அழுத்தம் காரணமாக ரஷ்யா S-300 ஐ 2016ம் ஆண்டே ஈரானுக்கு வழங்கி இருந்தது. அவை 2019ம் ஆண்டே ஈரானில் சேவைக்கு வந்திருந்தன. அனால் தற்போது ரஷ்யா அமெரிக்காவின் விருப்பில் இல்லை.

இவ்வகை நவீன இராணுவ தளபாடங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு தாராளமாக அள்ளி வழங்குகிறது. இஸ்ரேலின் மிகையான வெற்றிக்கு பிரதான காரணம் அது அமெரிக்காவின் மிக சிறந்த ஆயுதங்களை பெறுகிறது.