பைடென் சனாதிபதி போட்டியை கைவிட்டார்

பைடென் சனாதிபதி போட்டியை கைவிட்டார்

அமெரிக்க சனாதிபதி பைடென் நவம்பரில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் தனக்கு பதிலாக உதவி சனாதிபதி கமலா ஹாரிசை சனாதிபதி பதவிக்கு போட்டியிட ஆதரவும் வழங்கியுள்ளார்.

பைடென் இந்த அறிவிப்பை உள்ளூர் நேரப்படி ஞாயிரு பிற்பகல் 1:45 க்கு தெரிவித்துள்ளார்.

பைடெனுக்கு போட்டியிலிருந்து வெளியேற விருப்பம் இருந்திருக்கவில்லை என்றாலும், மூடிய கதவுக்குள் Democratic கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த இறுதிநேர ஆள்மாற்றம் ரம்பை வெல்ல போதுமானதாக இருக்காது.

ஹரிசுடன் இணைந்து போட்டியிட உதவி சனாதிபதி பதவிக்கான போட்டியாளரையும் இந்த மூடிய கதவு தீர்மானங்கள் எடுத்திருக்கும் என்றும் நம்பலாம். ஆனால் அந்த பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கட்சிக்குள் மேலும் குழப்பங்கள் தோன்றலாம் என்றும் கருதப்படுகிறது.

இதுவரை பைடென் சேகரித்த $46.7 மில்லியன் பணம் ஹாரிசின் தேர்தல் பரப்புரைக்கு பயன்படலாம்.

பைடென் ஹரிசை ஆதரித்தாலும், கட்சியின் உறுப்பினர் இறுதியில் இதை உறுதி செய்யவேண்டும்.