ஹமாஸ் 15,000 போராளிகளை இணைத்தது என்கிறது அமெரிக்கா

ஹமாஸ் 15,000 போராளிகளை இணைத்தது என்கிறது அமெரிக்கா

2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் காசாவை தாக்கும் அதே காலத்தில் ஹமாஸ் சுமார் 10,000 முதல் 15,000 புதிய போராளிகளை இணைத்துள்ளது என்று அமெரிக்க புலனாய்வு அமெரிக்க காங்கிரசுக்கு கூறியுள்ளது.

இந்த புதிய உறுப்பினர் இதுவரை முழுமையாக ஆயுத பயிற்சி பெறாவிட்டாலும், இவர்கள் வயதில் இளையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது ஆரம்பநிலை செயல்களையே செய்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உளவுப்படி சுமார் 20,000 முதல் 25,000 ஹமாஸ் போராளிகள் யுத்தத்தில் இறந்துள்ளனர். இவ்வாறு மரணித்தோரின் இடங்களை நிரப்ப புதிய இளம் போராளிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.

யுத்தத்துக்கு முன் ஹமாஸிடம் சுமார் 25,000 போராளிகள் இருந்ததாக அமெரிக்கா கருதியது. ஆனால் இஸ்ரேல் தாம் சுமார் 20,000 ஹமாஸ் போராளிகளை அழித்துள்ளதாக கூறுகிறது. இந்த கணக்குகள் ஒன்றுக்கு மற்றது முரணாக உள்ளது. அதனால் ஹமாஸிடம் அதிக போராளிகள் இருந்திருக்கவேண்டும், அல்லது இஸ்ரேல் அழித்த ஹமாஸ் தொகை மிக குறைவாக இருக்கலாம்.

செவ்வாய்க்கிழமை பதவி விலகிய இஸ்ரேல் இராணுவ தலைமை அதிகாரி லெப். ஜெனரல் Herzi Halevi தனது உரையில் ஹமாஸ் பாரிய அழிவுகளை சந்தித்தாலும் அது முற்றாக அழிந்துவிடவில்லை என்றுள்ளார்.

அதனால் காசாவில் ஹமாஸின் ஆதிக்கம் பெருமளவில் தொடரும் என்று அமெரிக்கா கருதுகிறது.